இனிமையான வாழ்வு - Magarishi


இனிமையான வாழ்வு
நமது வாழ்வைச் சிக்கலில்லாமல் இனிமையாக அமைத்துக் கொள்ள வேண்டுமானால்;
உடலை நலமுடன் வைத்துக் கொள்ளவும், மனதைத் தெளிவாக வைத்துக் கொள்ளவும் வேண்டும்.

இயற்கை நீதி
விளைவு இலா வினையில்லை.
வினையினூடே விளைவு பல தொக்கி நிற்கும் இயற்கை நீதி.

எண்ணம்
மனிதனின் எண்ணமும் செயலும், ஆறு அடிப்படையில்தான் உருவாகின்றன.
அவை தேவை, பழக்கம், சூழ்நிலை, பிறர் எண்ணம், பாரம்பரியம், இயற்கை என்பனவாகும்.

உள்ளத்தில் ஊன்றும் எண்ணங்கள் நாளுக்கு நாள் உறுதி பெற்று, வாழ்வின் பயனாக விளைந்து விடும்.
ஆகவே, நமது வாழ்வு நலமுற வேண்டுமெனில் எந்தவிதமான கெட்ட எண்ணத்தையும் நமது உள்ளத்தில் ஊன்றவோ, வளரவிடவோ கூடாது.

தீய எண்ணங்கள் உள்ளத்தைக் கெடுப்பது போலவே உடலையும் கெடுக்கின்றன.

அமைதி
பிறர் குற்றத்தை பெரிதுபடுத்தாமையும், பொறுத்தலும் மறத்தலும் அமைதிக்கு வழிகளாகும்.

ஈதல்
எப்போதுமே தன்னிடமுள்ள ஆற்றலை வைத்துக் கொண்டு வாழ்க்கையில் பிறருக்கு உதவி செய்து இருப்பதுதான் ஈதலாகும்.

கடவுள் தன்மை, இயற்கைத் தத்துவம், வாழ்க்கைத் தத்துவம், ஞானம் முதலிய அனைத்துக்கும் குடும்பத்துள்ளேயே பாடங்கள் பெற்றுக் கொள்ளலாம்.
அப்படி இருந்தும் பலர் தோல்வி அடைகிறார்கள். எங்கோ சிலர் தான் வெற்றி அடைகின்றனர்.
அந்தப் பாடங்களால் நாம் புரிந்து கொண்டதை மதித்து நடந்தால் வெற்றிதான்.

No comments:

Post a Comment