இறை தன்மையும்; தொழில் ஸ்தாபனமும்

என்னுடைய நண்பர்கள் சிலர் தொழில் ஸ்தாபனத்தில் இறை தன்மையின் பங்கு என்ன என்பது பற்றி விளக்குமாறு கேட்டுக்கொண்டதின் பேரில் இக்கட்டுரையை இறை அருளோடு எழுதுகிறேன்.



சிந்தனையாளர்களே, நீங்கள் இறை தன்மையை பற்றி சிந்திக்கத் தொடங்கியதே உங்களின் வினைப்பயன் என்பதை சிந்தனைக்குட்படுத்தி ஆராயுங்கள்.  அறிவும், ஞானமும், செல்வமும், குழந்தைகளும், பதவியும் நாம் செய்த அல்லது செய்யும்  வினைக்கேற்ப்பவே அமைகிறது.  இதை யார் சொல்லியும் நம்பாமல், சிந்தித்து தெளிவடையுங்கள் என்று வேதம் கூறுகிறது.



ஜாதகம் கணிக்கும் முன்பு அனைத்து ஜோதிடரும் பின்பற்றும் ஒரு ஸ்லோகத்தை இங்கு அடிக்கோடிட விரும்புகிறேன்.


ஜெனனீ ஜென்ம ஸெளக்யானாம் வர்த்தனி குலசம்பதாம் பத்வீபூர்வ புண்யானாம் லிக்யதே ஜென்ம பத்ரிகா.

இதன் பொருள் பிறப்பின் மகிழ்ச்சியை உண்டாகுவதும் குலச்செல்வத்தை விருத்தி செய்வதும் முன் நல்வினையின் வழியாக ஜெனன பத்திரிக்கை எழுதப்படுகிறது என்பது.

ஜோதிடம் உண்மைய பொய்யா என்று ஆய்ந்தறிய, காலம் மிகத் தேவைப்படும்.  அனுபவம் அடிப்படைத் தேவையாகிறது என்பதால்,அதனுள் சென்று அறிவாற்றலை விமர்சனம் செய்து வீணாக்காமல், பிறகு ஆக்கபூரவமாக தகுதியானவர்களிடம் கற்று தெளிவோம். 

இரவு, பகல், உதயம், அஸ்தமனம், தென்றல், புயல், தூறல், சூறாவெளி என்று இன்பதுன்பத்தை பிறிக்காமல் ஒன்றுள் ஒன்றாக நீதியோடு அளவு முறையோடு மற்றும் முறையான கால இடைவெளியோடு இறைத்தன்மை இயக்கிவருவதை சிந்தனை செய்து பாருங்கள்.  இறைவன் என்பது நபரல்ல. அவருக்கு கோபம், சந்தோஷம், துக்கம் இதல்லாம் வருவதாக என்னால் உணரமுடியவில்லை. ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்கும் பள்ளிக்கூடம் போன்று இவ்வுலகம் என் கண்களுக்கு புலப்படுகிறது.  நன்மை செய்தால் நன்மை, தீமை செய்தால் தீமை.  அதற்கு கால இடைவெளி உண்டு. இந்த நீதியின் அளவு முறையை உணர்ந்தவரே அறிவாளர்கள் என்றும், அறியாதவர்கள், சாதாரணமானவர்கள் என்றும் பிறிக்கபடுகிரார்கள். எது தவறு எது சரி அல்லது தர்மம் என்று தெரிந்து விட்டால் அளவுமுறை ஒன்றும் பெரிய விஷயம் அல்ல.

இந்த நீதியை தொழில் ஸ்தாபனத்தில் எப்படி கையாளுகிறோம் என்பது தான் அமைதியையும், உடல் மற்றும் மன நலத்தையும், பிறர் நம்மை மதிப்பதையும், சக தொழிலாளர்களின் நட்புறவையும்  நிர்ணயிக்கிறது.  இந்த  நான்கு அடிப்படைத் தேவையில் ஒன்று குறைந்தாலும், நாம் அதன் மூலம் பெரும் பொருளை ஆத்மபூர்வமாகவோ அல்லது சந்தோஷமாகவோ அனுபவிக்கவே முடியாது என்பது தான் உண்மை.  

குடும்ப அமைதியையும் தொழில் பாதிப்பதால், நாம் மிகவும் கவனமாகவும், நேர்மையாகவும் கையாள வேண்டும். ஆனால் இந்த கவனமும் நேர்மையும் அளவுக்கு மீறினாலும் அது நல்ல விளைவை ஏற்படுத்தாது.  மழை  உலகிற்குத் தேவை. அனால் இறைத்தன்மை காலத்தில் எப்படி அளவு முறையோடு கொடுக்கிறதோ அப்படி நடந்து கொள்ள வேண்டும்.

இறைத்தன்மை எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது .  இறைதன்மை நம் செயலால் வரும் விளைவை எப்போதும் தடுப்பதில்லை. அது நன்மையானாலும் தீமையானாலும் சரி. மேலும் நன்மையையும் தீமையும் பிறரால் வருவதும் இல்லை.  

நன்றாக உற்றுநோக்கினால் ஒரு சமுதாயத்தில் ஒரு தவறு நீண்டநாள் நடக்க இயற்க்கை அனுமதிப்பதில்லை.  காலத்தில் அதற்க்கு முட்டுக்கட்டை போட அறிவியல் சாதனங்களாகவோ  அல்லது தன்னலமற்ற தியாகியாகவோ இறைத்தன்மை வெளிப்பட்டும்.  இதையெல்லாம் தனியே அமர்து சிந்தித்து உணர்ந்தால், நமது ஆன்மா  தவறு செய்ய அஞ்சும் என்பது தான் உண்மை.  விளைவை உணராது குழந்தை நெருப்பில் கைவைக்கும் வீரசாகசம் போன்றதுதான் நமது மன ஓட்டம்.  விளைவை அறிந்த உடனேயே பயந்து நடுங்கும் இயல்புடையது.  அந்த இயல்பை பொருட்படுத்தாமல், தற்காலிகமாக அடக்குபவன் தான் வீரனும் சாதனையாளனும். 

இறைத்துகளின் பரிணாமமே அல்லது அழுத்தம் மற்றும் வேதியல் தன்மாற்றமே ஓரறிவு முதல் ஆறிவு வரை வியாபித்து உள்ளது. உயிருள்ளதுமாய் உயிரற்ற்றதுமாய் வியாபித்து உள்ளது.  நாம் செய்யும்  வினைக்கேற்ப உயிருள்ளதும் உயிரற்றதும் நமது இன்ப துன்பங்களுக்கு காரணமாகிறது.  நீதி தவறிய ஒருவனுக்கு உயிரற்ற இயந்திரங்களும் கை துண்டாவது விரல் துண்டாவது, மின் சாரம் தாக்குவது போன்று வினை பரிமாற்றம் விளைகிறது.  உயிருள்ள மனிதர்களாலும், விலங்கு, பறவைகளாலும்  நன்மை தீமை விளைகிறது.  உயிரற்ற பொருளால் ஏற்ப்படும் விளைவிற்கு நாம் எப்படி காரணம் என்று ஏற்கிறோமோ அதே  விளைவு தான் உயிருள்ள பொருள்களின் மூலமும் ஏற்ப்படும்.

இறைத்தன்மையையும், நீதியின் அளவுமுறையையும் பற்றி சிந்தித்தோம்.  பிரதானமாக அகற்றவேண்டிய அருங்குணங்கள் பற்றி சிந்திப்போம்.

பேராசை, சினம், கடும்பற்று, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் மற்றும் முறையற்ற பால் கவர்ச்சி 

இந்த அருங்குண சீரமைப்பு வாழ்வின் அடிப்படைத் தேவை.  எந்த இடத்திலும் செயலிலும் நம் சொல்லிற்கும் செயலிற்கும் மதிப்பிருக்க வேண்டடுமானால், வாழ்வில் ஒழுக்கம் இன்றியமையாதது. நம் மதிப்பை நாம் நிலை நாட்டாமல் நாம் எந்த துறையிலும் சாதிக்க முடியாது.  ஒழுக்கமாக நடப்பதை போன்ற நடிப்பை அரங்கேற்ற இறைத்தன்மை நீண்டநாள் இடம் கொடுப்பதில்லை.  மேலும் நம் மேல் நமக்கு சுயமரியாதை வேண்டுமானால், ஒழுக்கமாக நடிப்பதை விட, ஒழுக்கமாக நடப்பதே சாலச சிறந்தது. சமுதாயத்திற்கு நம் மேல் இருக்கும் மதிப்பின் பேரில் தான் நம் வாழ்வு  அமைதியாக அமையும்.  இச்சமுதாயத்தில் மனைவி, மக்கள், முதலாளி, தொழிலாளி என்று அனைவரும் அடங்குவர்.  உங்கள் மனைவிக்கு உங்கள் மேல் மதிப்பில்லை என்றால், கற்பனை செய்து பாருங்கள். வாழ்க்கையே போராட்டம் தான். அது போன்று தான் ஒவ்வொரு உறவு வட்டாரங்களும்.  நல்ல பெயரையும், மதிப்பையும் சம்பாதித்தால், இயற்கை மனித சக்தியை உருவாக்கிக் கொடுக்கும். அது வாழ்வின் அமைதியை நிர்ணயிக்கும்.  இதில் இறைத்தன்மையின் நீதியை சிந்தியுங்கள்.  ஒழுக்கம் - நன்மதிப்பு - மனித ஷக்தி  - அமைதியான வாழ்க்கை - மனைவி  - குழந்தை  - கர்ம நோயின்மை.  கர்ம நோய் என்று ஜோதிடம் குறிப்பிடுவது கேன்சர், எய்ட்ஸ் etc..நமக்கும், சமுதாயத்திற்கும் நன்மை தரும்  செயலை ஆய்ந்து அறிந்து செய்தால், அதன் விளைவே இறைநிலை.  செய்யும் விளைவாக பரமனிருக்க,  பண்ணிய பாவம் போக பரமனை நொந்தக்கால் என்ன பயன்.

இக்கருத்துகளை மேலோட்டமாக பார்க்கும் பொழுது, சற்று சம்மந்தம் இல்லாதது போன்று தோன்றும்.  ஆனால் தொழிலில் மட்டும் இல்லாமல், எல்லா இடங்களிலும் இறைத்தன்மையின் பங்கு இதுதான்.  இது தான் தொழில் தர்மம்.  நடைமுறை வாழ்வின் கண்ணோட்டத்தை அடுத்த பதிவில் எழுதுகிறேன். இந்த அடிப்படை தர்ம சிந்தனையே ஆதாரம் என்பதால், இதை எழுத விரும்பினேன்.

இவை அனைத்தும் என்னுடைய சுயமான கருத்துக்கள், இதில் தவறிருந்தால் என்னுடையதென்றும், புகழிருந்தால் குருவருள் என்றும் கொள்ளவும்.

தர்மோ ரக்ஷித ரக்ஷிதஹா - தர்மத்தை ரக்ஷிப்பவனை தர்மம் ரஷிக்கும்.


By Balaji.












































1 comment:

  1. இறைத்தன்மையின் இனிய பாங்கினை
    அருமையாக எடுத்துரைத்தமைக்கு பாராட்டுக்கள்..

    ReplyDelete