அறிவென்பது யாது?(தமிழ்குடில் என்ற குழுவில் விவாதத்திற்கு எடுத்துக் கொண்ட கேள்வி)
''எல்லாப் பொருட்களிலும் எல்லா இடங்களிலும் இயக்க ஒழுங்காக இருப்பதுவே அறிவு'',
(Order of function in everything and everywhere is conciousness)
அறிவு ஐந்து வகைகளில் இயங்கு கிறது..
1 அகஅறிவு-.instinct. -தொடக்க அறிவு -பிறகும் போதே இருப்பது..( உ .ம்)மீன் குஞ்சு பிறந்த உடனேயே நீந்தத் தொடங்குவது,பிறந்த குழந்தை தாயிடம் பால் அருந்துவது.....
2 உள்ளுணர்வு-intution --tution என்றால் வெளியில் இருந்து கற்றுக் கொள்வது...intution என்றால் நன் உள்ளிருந்தே உணர்வாக அறிந்துகொள்ளும் அறிவு.
3 தேர்ந்த அறிவு- knowledge --அக அறிவையும்,உள்ளுணர்வையும் கொண்டு வெளியுலகோடு நாம் பெரும் அனுபவங்கள்.....
4 .நுண் மாண் நுழை புலன் அறிவு- perpicasity --நுண்ணிய மாண்மை பொருந்திய அறிவு--எது சரி, எது தவறு என்று அறிந்து..முற்கால அனுபவம்,தற்கால சூழ்நிலை,எதிர்கால விளைவு இவற்றை ஊகித்து செயல் செய்வது.
5 மெய்யறிவு-wisdom --முற்றறிவு..மெய்பொருளை...இறைநிலையை உணர்ந்து தெளிவது...இந்த அறிவை நோக்கித்தான் சென்று கொண்டு இருக்கிறோம்.
அறிவு என்பது உயிருள்ள பொருட்களிலும் உயிரற்ற பொருட்களிலும் உள்ளது.ஜடப் பொருட்களில் உள்ள அறிவு இயக்கம் பெறாமல் அடங்கி இருபது.
உயிர் பொருளோடு தொடர்பு கொள்ளும் போது அந்த அறிவின் தன்மை வெளிப்படுகிறது..
அதனால் நண்பர்களே யாரையும் 'அறிவில்லாதவன்'என்று கூறிவிட வேண்டாம்...அது நம் அறியாமையை வெளிப்படுத்தி விடும்..
பிறர் நம்மை'அறிவில்லாதவன் 'என்று கூறினால் அவர்மீது கோபம் கொள்ளாமல்..அவர் அறியாமையில் சொல்கிறார் என்று மன்னித்து விட்டு விடலாம்.(சினத்தை வெல்ல இதுவும் ஒரு வழி)
No comments:
Post a Comment