கையில் காப்புக்கயிறு கட்டுவது ஏன்?


நம் உடலில் பல்வேறு முடிச்சுகள் இருக்கின்றன.ஒவ்வொரு முடிச்சுகளும் உடம்பின் இயக்கத்தை ஒழுங்குபடுத்துகின்றன அந்த வகையில் கையில் இருக்கும் முக்கிய முடிச்சு பகுதி நம்முடைய மணிக்கட்டு ஆகும்.

இந்த இடத்தில்தான் இதயத்தின் இயக்க தன்மையை அறிந்துகொள்வதற்க்காக நாடி பிடித்து பார்ப்பார்கள்.நம்முடைய எண்ணங்கள் மற்று மனநிலையின் அடிப்படையிலேயே நாடியின் செயல் பாடும் அமைகிற்அது.

நம்முடைய மணிக்கட்டு இடத்தில் கயிறு கட்டினாலும் அல்லது காப்பு போடுவதாலும் நாடியின் இயக்கம் சீராகிறது.எண்ணங்களும்,மனநிலையும் அலைபாயாமல் இருக்கும்.

பெரும்பாலனவர்கள் மஞ்சள்,கறுப்பு,சிவப்பு நிறங்களில் கயிறுகட்டுவார்கள் மேலும் செம்பு,வெள்ளி,தங்கம்,ஐம்பொன்னில் காப்பு செய்து போட்டுகொள்வார்கள் இது சிறப்பானதாக இருந்தாலும் பட்டு, தர்ப்பை, அருகம்புல் போன்றவை பிரஞ்ச சக்திகளையும்,நவக்கிரக கதிர் வீச்சுகளையும் ஈர்க்கும் தன்மை கொண்டவை அதானால் இவைகளை நூல்களாக தரித்து கைகளில் அணியலாம்.

ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் அணிய வேண்டும். 

No comments:

Post a Comment