தாய், தந்தையர் செய்த பாவம் புண்ணியம் பிள்ளைகளைச் சேருமா?


தனக்கு மூன்று தலைமுறைகளுக்கு முன்பு செய்த பாவங்கள், அடுத்த மூன்று தலைமுறையினர்வரை பாதிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. தாய், தந் தை இருவரும் புண்ணியம் செய்யாது போனாலும் பாவங்களை குவித்து வைக்காது வாழ வேண்டும். உடல் துறந்து எமலோகத்திற்குச் செல் லும்போது, அங்கே நடக்கும் பாவ-புண்ணிய விசாரணையின்போது 12 பேர் நாம் செய்த புண்ணிய பாவங்களை தர்மராஜனிடம் கூறி, அதன் பலனை  நமக்குக் கொடுக்கச் செய்கிறார்கள் என்கிறது, கருட புராணம். இப்போதைய பெற்றோர் தாம் அறிந்தோ, அறியாமலோ சில பாவங்களைச் செய்திருக்க லாம். அந்தப் பாவங்கள் தம் குழந்தைகளைப் பாதிக்காமல் இருக்க, கீழேயுள்ள கால பைரவ ஸ்லோகங்களை தினமும் 18 முறை சொல்லுங்கள்.

1.அட்டஹாஸ பின்னபத்ம ஜாண்ட கோசஸந்ததிம்
த்ருஷ்டிபாத - நஷ்டபாப - ஜால முக்ரசாஸனம்
அஷ்டஸித்தி தாயகம் கபால மாலி கந்தரம்
காசிகா புராதிநாத கால பைரவம் பஜே!

2.பூதஸங்க நாயகம் விசாலகீர்த்தி தாயகம்
காசிவாஸ லோகபுண்ய பாப சோதகம் விபும்
நீதிமார்க கோவிதம் புராதனம் ஜகத்பதிம்
காசிகா புராதிநாத காலபைரவம் பஜே!


இதைவிட முக்கியம், இனி எந்தப் பாவத்தையும் செய்யாதிருக்க சிந்தையாலும் செயலாலும் பழகிக் கொள்வதுதான்; அதற்காக இறைவனிடம் மன்றாடு வதுதான். வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் மாறி மாறி ஏன் ஏற்படுகிறது? இந்த முரண்பாடான விஷயம் சில நபர்களுக்கு மட்டும் ஏற்படுவது ஏன்?


நாராயணன் - Dhinagaran, மயிலாடுதுறை.

No comments:

Post a Comment