வேதாத்ரியம்

      எனது பிறப்பு, வளர்ப்பு,  காப்பு இவற்றிற்கு கருணையுள்ள, கண்கண்ட கடவுளாகவும், காப்பாளராகவும், துணைவர்களாகவும் உள்ள எனது அன்னை, தந்தை, குரு, ஆட்சித்தலைவர், தெய்வம் என்ற ஐந்து பெரியவர்களையும் நன்றி மறவாமல் மதித்து வாழ்வேன்.

பேரியக்க மண்டலம் முழுதும் நீக்கமற நிறைந்து எல்லா பொருட்களிலும், உயிர்களிலும் முற்றிவாக இயங்கி அருளாட்சி புறியும் மெய்ப்பொருள் எல்லாம் வல்லது, எங்கும் நிறைந்தது, எல்லாம் அறியும் ஆற்றலுடையது. என்னுள் எனதறிவின் உட்பொருளாய் உள்ளது என்பதை நம்புகிறேன், உணர்கிறேன், ஒத்துக்கொள்கிறேன்.

எண்ணம், சொல், செயல் நான் செய்யும் தொழில்களில் எனது நோக்கம், திறமை, இடம், காலம், தொடர்பு கொள்ளும் மக்கள் அல்லது பொருட்கள் இவற்றிற்கு ஏற்ப இன்பமோ, துன்பமோ விளையும் உண்மையை, எல்லாம் வல்ல தெய்வமே அதன் பேரருள் நிலையிலிருந்து நீதியோடு வழங்குகிறது என்னும் உண்மையை மதிக்கிறேன். எச்செயலையும் எனக்கும், பிறர்க்கும், தற்காலத்திலும், பிற்காலத்திலும், உடலுக்கும், உயிருக்கும, துன்பம் விழையாத வகையில் விழிப்போடு செயலாற்ற என்னால் இயன்றவரை அக்கறையோடு முயற்ச்சிப்பேன். இதனையே இறை வழிபாடாகக் கொள்வேன்.

உணவு, உழைப்பு, ஓய்வு, உடலுறவு, எண்ணம் ஆகிய ஐந்து தொழில்களையும் அலட்சியம் செய்யாமல், மிகையாக அனுபவிக்காமல், முரணாக அனுபவிக்காமல், அளவோடு, முறையோடு செய்து, உடல் நலம் மன நலம், பொருள் வளம், சமுதாய நலம் காப்பேன்.

அறிவின் நலம் காத்து அதனை மேன்மை நிலைக்குக்  கொண்டுவர தெய்வ வழிபாடும், சமுதாய மக்களிடம் நட்ப்புரவை இனிமையாக அமைத்துக்கொள்ள ஒழுக்கம், கடமை, ஈகை மூன்றினைப்பு அறநெறியும் மையக் கருத்துகளாகக்  கொண்டவையே எல்லா மதங்களும் என்பதை உணர்ந்தேன்.  எல்லா மதங்களுக்கும் மதிப்பளித்து வாழ்வேன். எந்த உருவில், எந்த குணத்தில் தெய்வத்திற்கு உருகொடுத்து வணங்கினாலும் அவரவர் அறிவால் எடுக்கும் உருவம், குணம் என்பதை அறிந்து எவ்வகை வழிபாடும் அறிவை வழிபாடும் கருத்தே என்பதை உணர்ந்து கொண்டேன்.  எந்தவகை இறை வணக்கத்தையும் அலட்சியப்படுத்தாமல் மதிப்பளித்துப் போற்றுவேன்.

நான், குடும்பம் சுற்றம், சமுதாயம், உலகம் என்ற ஐந்து பிரிவிற்கும் ஒன்றால் ஒன்று கெடாமல் எனது கடமைகளை வழுவாமற் செய்வேன்.

குடும்பத்தில், சமுதாயத்தில், ஆட்சிமுறையில், உலக அரங்கில் நடைபெறும் குற்றங்கள், தவறுகள், பழிச்செயல்கள் இவற்றிற்கு எந்த ஒரு தனி மனிதனையும் பொறுப்பாக்கி அவர் மீது வெறுப்போ, பகையோ, அலட்சியமோ செய்யமாட்டேன்.  ஏனென்னில் எந்த தவறுக்கும் குற்றத்திற்கும் நீண்டகள சமுதாயத்தில் நிலவிவந்த கருத்துக்கள், செயல்கள், சூழ்நிலைகளால் ஏற்ப்பட்ட நிர்பந்தங்கள் இவற்றால் ஏற்பட்ட பதிவுகள்  கருத்தொடர்பாக தொடர்ந்து வருவதும் இட்ன்றுள்ள சமுதாய சூழ்நிலைகளும் தான் எல்லா பழிச்செயல்களுக்கும் காரம் என்பதை அறிவேன்.  இன்றுள்ள மக்கள் மனம் தெளிந்து திருந்துவதற்கு உதவி செய்ய ஆன்மீக அறிவை வளர்ப்பதும், துன்பப்படும் மக்களுக்கு உதவி செய்வதும், வருங்கால சமுதாயம்  அறிவுத் தெளிவோடு அறநெறியை பின்பற்றி வாழ்வதும் உலக நாடுகளுக் கிடையே அமைதி நிலவவும் என்னால் இயன்ற தொண்டுகளை செய்வேன்.

பரிணாம சிறப்புபடி எல்லா அண்டங்களையும் உருவாக்கிக் காக்கும் இயற்க்கை, உலகில் உயிர்களை உற்பத்தி செய்து வளர்க்கும் பொறுப்பினை பெண்ணிடத்திடமே ஒப்புவித்துள்ள கருணை நிறைந்த அருட்பொருப்பை  உணர்ந்து பெண் குலத்திடம் எப்பொழுதும் உரிய மதிப்புடையவனாக இருப்பேன்.

எனது வருமானத்தில் நூற்றுக்கு ஒன்று வீதம் ஒதுக்கி பிறர் நலத்திற்காக செலவிட்டு வருவேன். 

எனது ஆன்ம தூய்மை பெற, மேன்மை பெற ஆகத்தவம் என்னும் அகநோக்குப் பயிற்ச்சியை பின்பற்றி சிறப்படைவேன்.

                                                                                                                                    --வேதாத்ரியம் 

No comments:

Post a Comment