பக்தி


பக்தி என்பதை பக்தனாக அல்லாமல் சிந்தனையாளனாக இருந்து  உற்று நோக்கினீர்களேயானால், பக்தி என்பது பிரபஞ்ச சக்திக்கு நாம் நன்றி தெரிவிக்கும் வண்ணமாகவே அமைக்கப்பட்டிருப்படை அறியமுடியும். அறிவியல் ரீதியாக ஆராய்வதை காட்டிலும், எளிமையான நடைமுறை வாழ்வில் நிகழுவதை ஆராய்வோம்.  முதலில் பிறப்பிலிருந்து உற்றுநோக்குவோம்.  தாயின் கருவறையில் 7 வது மாதத்தில் சிசுவானது உயிர் பெறுகிறது என்று சாஸ்திரங்களும், அறிவியலும் கூறுகிறது.  அந்த உயிர் எங்கிருந்து வருகிறது. நமது முன்னோர்களின் மறுபிறப்பு என்றால் உலக மக்கள் தொகை ஏன்  உயர்ந்துகொண்டே இருக்கிறது.  உயிர் எங்கிருந்து வந்தது என்பது ஆராச்சிக்குரியதாக இருந்தாலும், அதை பெறுவதற்கு முன்னரும் பெற்ற பின்னரும் நாம் இருந்தது அன்னையின் கருவறையில் தான். ஆக அன்று அவள் இல்லை என்றால் இன்று நானும் இல்லாது போயிருப்பேன்.  இயற்கையின் தோற்றத்திற்கு காரணமானவன் கடவுள் என்றால்  என்னுடைய தோற்றத்திக்கு காரணமானவள் எனக்கு கண்டிப்பாக கடவுளாக தான் இருக்கவேண்டும்.  என் அன்னையை மட்டும்அன்றி அவள் குலத்தையே தாய்குலம் என்றும் மாதர்குலம் என்றும்  வணங்க வழிவகுத்த இந்து சமயம் பெருமைக்குறியது.

உயிர் வாழ்வதற்கு அடிப்படை தேவையில் ஒன்று காற்று.  ஒருநிமிடம் இயற்க்கை பிராணவாயுவைத் தருவதை 
நிறுத்தினால் ஸ்தம்பித்துவிடும் ஆறுயிர் முதல் ஓருயிர் வரை. உயிர் வாழ்வதற்கு மட்டுமா? சிந்தித்துப் பாருங்கள்.  நெருப்பு எறிவதிளிருந்து, மின்சாரம் தயாரித்தல் வரை அதன் பயன்பாடு நன்றிக்குறியது என்று உணர்வோம்.  இன்றியமையாத அந்த காற்றை வாயு பகவான் என்று வணங்கிய எனது இந்து சமயம் பெருமைக்குரியது.

உனக்கு உதவுபவருக்கு நீ கைமாறு என்னும் பிரத்யோபகாரம் செய்யவேண்டும் என்றால், மழை தரும் மேகத்திற்கும், மழைக்கும் என்ன நன்றி செய்வாய் என்று வள்ளுவர் வினவுகிறார்.  உயிர்களுக்கு உணவு தரும் விளைச்சலுக்கு காரணமாகி மேலும் தானே அவ்வுயிர்களுக்கு உணவும் ஆகும் நீர், தாய்க்கும் மிஞ்சி பெருமைக்குரியதால் தான் தாயை பழித்தாலும் தண்ணீரை பழிக்காதே என்று சான்றோர்கள் கூறினார்களோ! நீரின் பெருமையை உணர்ந்து நீரை இறைவடிவமாக்கி வர்ன கவான் என்று வணங்கிய எனது இந்து சமயம் பெருமைக்குரியது. 

வெளியில் இருக்கும் அக்னியை விளக்கத் தேவையில்லை.  நம் உடம்பின் உள்ளிருக்கும் அக்னியை உணரவேண்டும். சுட்டெரிக்க முடியாத வாழை பழத்தையும் ஜீரணிக்கும்  அக்னியின்றி முதலில் வாழ முடியுமா?  அக்னியே நமஹ என்று தொடங்கும் ரிக் வேதம் எவ்வளவு பெருமைக்குரியது.

இவ்வாறு அன்னை முதல் கல்லையும் மண்ணையும், நீரையும் நெருப்பையும், உலோகத்தையும், மரத்தையும் வணங்குவதில் காரணம் பல உள்ளன.  இதை உணர்ந்தால் ஒழுக்கம் என்பதை மற்றவர் நமக்கு போதிக்க வேண்டாம்.  நீரின் பெருமையை உணர்ந்தால் யார் பார்த்தாலும் பார்க்கவிட்டாலும் நாம் தெய்வீக சிந்தனையில் சேமிக்கவும் சிக்கனமாக பயன்படுத்தவும்  நாமே விரும்புவோம்.  மின்சாரம் முதல் அனைத்து அறிவியல் கண்டுபிடிப்புகளும் பஞ்சபூத கலப்பின்றி அமையாது என்பதை அமைதியாய் சிந்திப்போம், உணர்வோம். பொருள் எவருடையதாய் இருந்தாலும் இறைவெளியில் இருந்துதான் தோற்றுவிக்கப்பட்டிருக்கும் மேலும் அது அழிந்து இறைவெளியில் தான் கலக்கும் என்பதை உணர்ந்தால் ஒழுக்கத்தை பழக்கப்படுத்த வேண்டாம். அது இயல்பாகிவிடும். இந்த ஒழுக்கமே பக்தியுள் மேன்மை. இறைநிலை.  இவை என்னுடைய தனிப்பட்ட கருத்து.  தவறிருந்தால் என் அறியாமையாகவும், புகழிருந்தால் என் குருவருள் எனக்கருதவும்.

நன்றியுடன்,
பாலாஜி