ஒருவன் எதை உபாசிக்கிறானோ அதை அடைவான். இதை ‘தத்க்ரது’ என்று பிரம்ம சூத்திரம் கூறுகிறது. பரம் பொருள் என்னும் அந்த முழு முதற் கடவுளைத் தியானித்து மும்மூர்த்திகளில் ஒருவரை உபாசித்தால் முக்தி கிடைக்கும். வேத மதத்தில் பிற மூர்த்திகளை உபாசித்தாலும், முடிவில் இந்த மும்மூர்த்திகளுக்குத்தான் ஒருவன் செலுத்தப்படுவான். அவையெல்லாம் பரிவார தேவதைகள். சிவன் அல்லது விஷ்ணுவுடன் சேர்பவர்கள். அவர்கள் மூலம் முக்திக்கு வழி பிறக்கும். என்கிறது பிரம்ம சூத்திரம்.
இறைவனை விஸ்வம் என்று வேதம் கூறுகிறது. விஸ்வம் என்றால் எங்கும் இருப்பவர் அண்டம் என்று பொருள். எங்கும் நிறைந்திருப்பவர் எல்லா மதத்திலும் நிறைந்திருப்பார். நாம் எந்த ரூபத்தில் அவரை வணங்கினாலும் தவறில்லை.
பெற்றோர்களை பேணல், பெண்களை மதித்தல், விதவைக்கு நல்ல எண்ணத்துடன் உதவுதல், நன்னடத்தை, ஒழுக்கம், தர்மத்தில் நிலைத்தல், முக்கியமாக ஆபத்தில் இருப்பவனுக்கு உதவுதல் அல்லது கருணையோடு இருத்தல், ஜீவா காருண்யம், நல்ல செயல்களுக்கு உதவுதல் இவை ஒருவனிடம் இருந்தால் அவன் கடவுளை வணங்கினாலும் வணங்கவிட்டலும் அவனுக்கு இறைவனின் அருள் உண்டு என்பதை உணரவேண்டும்.
எல்லா மதங்களும் தர்மத்தை போதிக்கின்றன, அதர்மத்தை தூஷிக்கின்றன. ஒழுக்கத்தை வலியுறுத்துகின்றன. இந்துக்கள் பாவங்களை
கர்மவினைகளாகவும் . கிருத்துவர்கள் சைத்தான்களாகவும் ஒவ்வொரு மதமும் வேறு பெயரில் அழைக்கிறார்கள். சந்த்யா வந்தனமும், கிருத்துவ ஜபமும், முஸ்லிம் தொழுகையும் போய் சேருவது ஒருவனையே என்பது என்னுடைய கருத்து.
பிற மதங்களையும், அவர்களின் நம்பிக்கையையும் தூஷிப்பது, எங்கும் வியாபித்திருக்கும் இறைவனை தூஷிப்பதர்க்கு சமம் என்பதை உணர்ந்து, இறைவனை வணங்குவதிலும் ஒரு ஒழுக்கத்தைக் கடைபிடிப்போமேயனால் நிச்சயம் முக்தி கிட்டும்.
நீதி, நேர்மை, தர்மம் இவைகளே இறைவனின் ரூபம். இவைகளை வடிவ மாக்கியும், இல்லாமலும், அல்லது இவைகளை கடைபிடித்தும் விஸ்வத்தை அடைய முடியும். இறைவன் என்பவன் கண்ணுக்கு புலப்படாத அண்ட வெளியில் உள்ள நுண் துகள் என்று வேதாத்ரி மகரிஷி கூறினார். நம்முடைய அறிவும் ஆயுளும் இறைவனை உணர போதுமானது அல்ல. நாம் செய்யும் நற்காரியங்கள் புண்ணியங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவைகள் இப்பிறவியிலோ அடுத்த பிறவியிலோ நமக்கு வேத சூட்சுமத்தை அறிய வழிவகுக்கும் என்பதை உணர்ந்து, புன்னியம் செய்வோமேயானால் இம்மையில் நாம் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டு சுகமாக வாழ வாய்ப்புள்ளது.
நாம் எண்ணத்தில் உணர்ந்தும், தெரிந்தும் செய்யும் பாவங்கள், நமது மூலையில் பதிந்து, ரத்தத்தில் கரைந்து, சுக்லத்தில் ஊடுருவி, பெண்ணின் வயிற்றில் சென்று குழந்தையாகப்பிறக்கும். எண்ணத்தின் வடிவமே செயல்கள் என்பதை நாம் உணர வேண்டும். அதைத்தான் அப்பா செய்த பாவம் குழந்தைக்கு என்று கூறுகிறார்கள். பெண்களுக்கும் அவ்வழியே என்பதை உணரவும்.
இதைப்போன்று தான் புண்ணியங்களும் சத் புத்திரனாகப் பிறந்து நம்மையும் நம் வம்சத்தையும் சுகத்தில் திழைக்கவைத்து முக்திக்கு வழிவகுக்கும்.
எப்படி தகப்பனின் வியாதிகள் குழந்தைக்கு வருகிறதோ அவ்வழியே பாவ புண்ணியங்களும் என்பதை உணராமல் இருப்பது மிகப்பெரும் அறியாமை. வியாதிக்கு மருந்துண்டு, இல்லை விதண்டாவாதத்திற்கு.
இறைவன் என்பவன் கிரீடம் சூலம் வைத்துக்கொண்டு மேலே உட்கார்ந்து கொண்டு தண்டிப்பவனோ, இல்லை வெள்ளை ஆடை உடுத்திய படி வரம் தருபவனோ, இல்லை நிலவின் பிறை போன்று அழகு கட்சிதருபவனோ மட்டும் இலன். இவைகள் நம்முடைய எல்லைகள் . அவன் எல்லை அற்றவன். சிறியதாகவும். பெரியதாகவும் இருப்பவன். நீரும் நெருப்பும் ஆனவன்.
வெற்றிடமாயும் ,
நிரம்பியவனாகவும் இருப்பவன். ஆக எல்லாம் அவன். இதைத்தான் வேதம் கூறுகிறது விஸ்வம் (சர்வமும்) என்று. எல்லாவற்றிலும் அவன் இருப்பதால், நாம் எதையும் மறைக்க இயலாது. நாம் நீரில் செய்யும் பாவத்தை நீராய் நின்று உணர்வான். யாரும் இல்லை என்று வெற்றிடத்தில் பாவம் செய்தால் வெற்றிடமாகவே இருக்கிறான் என்பதை உணர வேண்டும்.
நாம் எந்த அதர்மத்தை மறைக்க நினைக்கிறோமோ, நினைக்கும் போதே அவ்விஷயம் உலகிற்குப்புலப்பட வேண்டிய காரியங்களை நம்மூலமகவே செய்கிறான். இதைத்தான் குற்றவியல் கூறுகிறது எந்த குற்றவாளியும் அவனுக்குத்தெரியாமல் ஒரு தடயத்தை விடாமல் போகமாட்டன் என்று.
ஆனால் நாம் மறைக்க நினைப்பது நல்ல
விளைவுக்ககவோ, உலக நன்மைக்காகவோ என்றால் உடன் இருந்து மனுஷ்ய ரூபத்தில, அமானுஷ்ய ரூபத்திலோ நமக்கு உதவுவான்.
நீ எப்பொருளில் அதர்மம் செய்கிறாயோ, அப்போருளாக மாறி அவன் தண்டனை அளிப்பான். எடுத்துக்காட்டிற்கு ஒருவன் மற்றொருவனின் போனை திருடுகிறான் என்றால், திருடும் மாத்திரத்தில் சுகமாக தோன்றினாலும் அந்த போனே அவனின் அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணமாகிவிடும். அவனுக்கு காலம் வரும் போது அந்தபோனின் மூலமாகவே அவனது மற்ற அனைத்து திருட்டுகளும் புலப்படும். இதெல்லாம் சூட்சுமம். எல்லாம் இயற்கையின் தர்மம். இறைவனை ஆண்பாளிட்டும் பெண்பாளிட்டும் கட்டுப்படுத்த முடியாது. அவன் பெயர் தர்மம். அவன் விரும்புவதும் தர்மம். அவனின் ரூபமும் தர்மம் . நற்காரியங்களின் ரூபம் அவன். நல்லோர்களின் ஆன்மா அவன். உயிருள்ளவையாவும் உயிரற்ற்றவையாவும் விளங்குபவன்.
விதுரநீதி கூறுகிறது;
மாடு மேய்ப்பவன் தன் மாடுகளை வழிநடத்துவதர்க்கு குச்சியை வைத்து அடித்து திருத்துவதைப்போல தேவர்கள் ஸ்தூலமாக (நேராக) எதையும் செய்வதில்லை.
தேவர்கள் ஒருவனை தண்டிக்க வேண்டுமென்றாலும், ஆசிர்வதிக்க வேண்டுமென்றாலும் அவன் புத்தியை சூட்சுமமாக (மறைவாக) இயக்குகிறார்கள். தண்டிக்க வேண்டுமென்றால் எதிர்மறையாகவும் ஆசிர்வதிக்க வேண்டுமென்றால் நேர்மறையாகவும் நம்முடைய புத்தியில் கைவைக்கிறார்கள்.
விநாச காலே விபரீத புத்தி என்பார்கள். நம்முடைய மனம் கெட்டதை விரும்பும்போது நமக்கு காலம் சரியில்லை என்று உணர்து புலன்களை அடக்கி இறைவனை த்யாநித்தால் நன்மை ஏற்ப்படும். இல்லையென்றால் பாவம் செய்து அறிவை இழந்து, தேஜஸ் மங்கி மேலும் மேலும் பாவம் செய்யத்தூண்டும். பாவத்தின் சம்பளம் மரணம் என்று ஆயுசும் குறையும். இது எல்லாம் போதாது என்று சந்ததியே சீரழியும்.
தர்மத்தை கடைபிடிப்பவன், வேதத்தை நம்பவில்லை என்றாலும், இறைவனை நம்பாவிட்டாலும், ஹோமம், யாகம், கிருத்துவ ஜபம், தொழுகை செய்யவில்லை என்றாலும் அவனை இறைவன் நாத்திகனாகக்கருதுவதில்லை. இறைவனே தர்மம், தர்மமே இறைவன் ஆகையால் அவன் இறைவனுடன் அனுதினமும் இருக்கிறான். நமது அனைத்து மத நடவெடிக்கைகளும், ஒழுகு முறைகளும் தர்மத்தை நிலை நாட்டவே ஆகும்.
இப்போது சொல்லுங்கள் நமக்கு மதம் ஒரு தடையா? நல்ல ஆச்சார்யன் தெய்வ விலாசன் என்பார்கள். நான் ஆச்சார்யன்
அல்லன் ஆனால் என்னால் தெய்வத்தை என்னுடைய எழுத்தில் காட்ட முடியும் என்று நினைக்கிறேன்.
நான்
அனுபவத்தில் உணர்ந்த கருத்துக்களையும் நான் வலைத்தளங்களில் கண்ட கருத்துக்களையும் ஒருங்கிணைத்து எழுதியிருக்கிறேன். என்னுடைய அனைத்து சிந்தனைகளையும் இங்கு எழுத கால அவகாசம் இல்லை. எழுத்துப்பிழை பொருட்பிழை இருப்பின் மன்னிக்கவும்.
Written By
Balaji.
No comments:
Post a Comment