விதி என்பது என்ன? விதி என்பது உண்மையாக இருந்தால், எதன் அடிப்படையில் அது ஒவ்வொருவருக்கு ஒவ்வொருமாதிரி விதிக்கப்படுகிறது?
விதி என்பதை தண்டனை என்று எடுத்துக்கொள்ளவும் முடியாது ஏனென்றால், நன்மைகளும் இதற்குள் அடங்குகின்றன. ஒருவனுக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைப்பதில்லை. ஒருவனுக்குதஉட்கார்ந்த இடத்தில் பணம் கொட்டுகிறது.
ஒருவன் திருடுகிறான், ஒருவன் கொலை செய்கிறான். நீதி வழங்கும் போது இருவருக்கும் வேறு வேறு தண்டனை. நான் இங்கு தீர்ப்பு என்ற வார்த்தைக்கு பதிலாக நீதி என்ற வார்த்தையை உபயோகித்ததற்கு காரணம் உள்ளது. இருவரின் குற்றங்கள் வேறுவேறாக இருப்பதால் தண்டனையும் வேறு வேறு. குற்றவாளிகளின் நன்நடத்தை காரணமாக, அவர்களின் தண்டனை குறைப்பதும் உண்டு.
மனிதன் வகுத்துள்ள சட்டம் இவ்வளவுதான். ஆனால் இறைவனின் நீதியில், குற்றம் செய்தால் தண்டனை மேலும் நன்மை செய்தால் அதற்க்கேற்ப்ப பரிசும் உண்டு. அவரவரின் செயல்களின் (கர்மா) அடிப்படையில் அவன் விதி (நீதி ) நிர்ணயிக்கப்படுகிறது.
நாம் சாப்பிடும் உணவு ஜீரனமாவதை அறிவியலின் அடிப்படியில் பிரித்தால், அது ஒரு மிக நீண்டநேர செயல். அனால் எல்லாம் ஒரு சில நிமிடங்களில் நடைபெறுகிறது. கணினியின் செயல்படும் அப்படித்தான். அதைப்போலவே நமது நல்வினை தீவினை அல்லது பாவபுண்ணிய கணக்கெடுப்பு கணக்கிடமுடியாத மிகக்குறைந்த கால மணி நேரத்தில் நடைபெறுகிறது. நமது செயல்களுக்காக இறைவன் கொடுக்கும் பரிசையோ அல்லது நம்மை ஒழுங்கு படுத்தும் பொருட்டு தண்டிக்கும் விளைவை நாம் விதி என்ற பெயரில் குறிப்பிடுகிறோம்.
இது இரண்டு கால இடைவெளியில் நடைபெறுகிறது. ஒன்று நாம் செய்யும் செயலுக்கு பரிசோ தண்டனையோ அது அப்பொழுதே. இது அதே பிறவியில் நடைபெறும். மற்றொன்று அடுத்த பிறவியில். நான் மறுபிறவி பற்றி இன்னொரு பதிவில் எழுதுகிறேன்.
ஏன் இந்த இரண்டு கால இடைவெளி. ஒரு பெண் நல்ல உயர்ந்த தர்ம காரியங்களையும், வேதோத்தமமான உன்னத செயல்களை மட்டுமே செய்கிறாள்.அதன் விளைவாக அவள் புத்திர சுகம் அடிய வேண்டும் என்று விதி. புத்திர சுகம் என்றால் புத்திரனால் ஏற்படக்கூடிய சந்தோஷம். ஆக இவளது புத்திரன் உடல் ஆரோக்யத்துடன், சீரும் சிறப்புமாக இருக்கவேண்டும் . இப்படி அதிஷ்டசாலியாக பிறந்த அந்த புத்ரன் அதர்ம கர்யங்களை செய்கிறான். பஞ்சமாக பாவங்களை செய்கிறான். இவனை உடனே தண்டித்தால் அப்பெண் தன்னுடைய புத்திரன் சோகப்படுவதால் தானும் சோகப்படுவாள். விதிப்படி அவள் சோகப்படக்கடாது. இப்பெண்ணின் சுகத்திற்க்காக அவன் தண்டனை தள்ளிப்போடப்படும். அடுத்த பிறவியில் அந்த தண்டனையை அடைவதற்கேற்றார் போல் ஜாதகத்தில் நவக்ரக சாரத்தில் ஜனிப்பான். இது சத்தியம். ஒருவன் நல்லதோ கெட்டதோ அவன் கர்ம வினையை அடைந்தே தீருவான்.
மனிதனின் நீதித்துறையில் இன்னொரு மனிதனுடைய சாட்சி தேவை ஆனால் இயற்கையில் நமது மனமே நமக்கு சாட்சி சொல்லும். நாம் தொடும் பொருட்களில் எல்லாம் நம் கை ரேகை பதிவது போல. நம்முடைய ஒவ்வொரு செயலும் நம் ஆன்மாவால் பதிவுசெய்யப்படுகிறது. Soul is a Data Center என்கிறது கிறித்துவ மதம். உண்மையில் நம்மால் எதையுமே மறைக்க முடியாது.
நன்னடத்தை மட்டுமே நல்வாழ்க்கைக்கு ஒரே வழி. நம் விதிப்படி நாம் சோகமான ஒரு வாழ்வை பெற்றிருந்தாலும். நமது நன்னடத்தை மற்றும் தர்ம சிந்தனையின் காரணமாக நமது தண்டனை குறைக்கப்படும்.. அதாவது விதியும் மாறும்.
விதி என்பது ஒரு நீதி.
BY
Balaji.
No comments:
Post a Comment