கர்மவினைகள் உண்டா? அது நம்முடைய வாழ்வில் பிரதிபலிக்குமா?


கர்மவினைகள் உண்டா?  அது நம்முடைய வாழ்வில் பிரதிபலிக்குமா?
ஒருவன் ஏன்  கை கால்கள் பாதிக்கப்பட்டு பிறக்கவேண்டும்?  மற்றொருவன் ஏன் WWE ல் வெற்றிபெறும் அளவிற்கு கை கால்கள் பலம் பொருந்தியவனாக பிறக்கவேண்டும்?

நாம் ஏன் சோமாலயா போன்ற இடங்களில் பிறக்கவில்லை? அங்கு உணவின்றி இறந்தோர் ஏன் அங்கு பிறந்து இறக்க வேண்டும்?

ஒரு முனையில் Google Glass Project.  மறுமுனையில் பிறவிக்குருடர்கள்.  ஏன் ?

ஒருவனுக்கு பசித்தால் குடும்பமே பதறுகிறது.  மற்றொருவனின் பிணத்தை கிருமிகள் புசித்தால் கூட அதை அகற்ற ஆளில்லை  ஏன் ?

ஒருவனுக்கு குளிப்பதற்கு செயற்கைக் குளம்.  ஒருவன் ஒரு குடம் தண்ணீர் எடுக்க ஒரு நாளுக்கு மேல் செலவிடுகிறான். ஏன்?

சொல்லிவைத்தார் போல் சில குடும்பங்களில் அடுத்தடுத்த துர்மரணங்கள்.  (ராஜீவ் காந்தி). ஏன் ?

இரட்டை உடம்பாகப் பிறக்கும் குழந்தைகளை மருத்துவர்கள் சவாலாக எடுத்து காப்பற்றுகிரார்களே?  அவர்களின் பருவ காலங்கலில் அவர்கள் எப்படி திருமணம் செய்துகொள்வார்கள்?  ஒன்றுக்கு இரண்டாய் உயிரைக் கொடுத்து சுகத்தைப் பறிப்பது ஏன் ?

மணமகள் கழுத்தில் தாலி ஏறியவுடன் உயிரை விட்ட கணவன் எந்தனை பேர்?  சமீபத்தில் மணமகளைத்தவிர குடும்பத்தில் உள்ள அனைவரும் இறந்துவிட்டார்கள். ஏன்?

பொதுவாக சுற்றுலா செல்லும் குடும்பத்துக்கு மட்டும் சொல்லிவைத்தார்ப் போல் ஆபத்து.  ஒன்று குடும்பத்தோடு மாய்கிறார்கள் இல்லை ஒருவன் மட்டும்  காப்பாற்றப்படுகிறான். ஏன் ?

என்னுடைய கேள்விகளுக்கு இந்த வலைத்தளம் போதாது எனும் அளவிற்கு எனக்கு கேள்விகள் எழுகின்ற ஒரு சிந்தனையில் நான் பிறந்தது ஏன் ?

இதைப்பற்றி எவ்வளவு எடுத்துரைத்தாலும் அதை புரிந்துகொள்ளும் ஆர்வம் இல்லாமல் இன்னொருவன் - ஏன் ?

AR Rahman னுக்கு ஏன் கிரிக்கெட்டில்  ஆர்வம்  இல்லை?  சச்சினுக்கு ஏன் இசை அமைப்பதில் ஆர்வம் இல்லை. ஒருவேளை என்னைப் போன்று எல்லோரும் இப்படி எழுதிக்கொண்டிருந்திருந்தால், இந்த கணிப்பொறியை யார் கண்டுபிடித்திருப்பார்?  ஒருவேளை ஆன்மீகத்தில் ஆர்வம் இல்லாதவர்களும் இந்த உலகத்திற்கு வேண்டுமோ?

அப்படியானால் நாத்திகர்களும் இறைவனால் வேண்டுமென்றே  படைக்கப்பட்டவர்களா?

நாம் விரும்புவது கிடைப்பதில்லை.  கிடைத்த வெற்றிகள் நாம் விரும்பி கேட்டதில்லை. ஏன் ? தீதும் நன்றும் பிறர் தர வாரா என்ற கணிகன் பூங்குன்றனாரின் பொருள் இது வோ  :)

ஏன் நமது புராணங்களில் எல்லாம் இப்பிறவி போதும் இனிபிறவி வேண்டாம் என்கிறார்கள்? ஏன் வேதாந்தங்களை எழுதிய அவர்களுக்கு நமக்கிருக்கும் அறிவும் துணிவும் கூடவா இல்லை??

நமக்கு பிடித்த உணவு உடலுக்கு கேடு விளைவிக்கும்.  நல்ல உணவு பெரும்பாலும் ருசி உடையதாக இல்லை.  நாம் கடினமாக உழைத்தால் உடம்பு ஆரோக்கியம் பெறுகிறது சுகமாக இருந்தால் சுகர் வருகிறது.  நாம் இந்த பூமிக்குள் வருவதே கஷ்டப்படுவதர்காகவா?  ஏன் இவ்வாறு அமைந்திருக்கிறது? இதியெல்லாம் யாரேனும் அமைத்தார்களா ?

அழகிய பூவில் மணம் இல்லை.  மணக்கும் பூ மிகவும் எளிமையாக இருக்கிறதே ? ஏன்.  பூவும் மனிதனை போலத்தானோ?? :)

இதற்கெல்லாம் நமக்கு பதில் தெரிந்தால் கர்ம வினை கிடையாது  இல்லையென்றால் ?

America கண்டறியப் பட்டதற்கு முன்பு, நமக்கு America என்றால் என்ன தெரியும்?
ஒன்று உண்மை.   கண்டுபிடிக்கப்படாத பொருளெல்லாம் இந்த உலகில் இல்லை என்று வாதடுவது அறிவீனம்.

 ரிமோட்டில் இருந்து செல்லும் கதிர்களை நம் கண்களால் உணர முடியவில்லை.  அது இல்லை என்று கூறுவதில்லை.  ஏன் என்றால் அதன் விளைவுகளை TV மூலமாக காட்டுகிறது.   ஒருவேளை பிறந்ததிலிருந்தே TV பார்க்காத ஒருவன் அதை  நம்பமுடியுமா?
TV என்ன என்று அறியாதது அவன் குற்றமா?

 அறியாதவனின் அறியாமைக்குப்பின்னும் ஒரு காரணம் இருக்கிறது.  இவற்றை அறிந்தவர்கள் உணர்வார்கள். ஆனால் அறிந்தவர்களை அறியாதவர்களால் உணர முடியாது.  அறிந்தவர்களையே உணரமுடியாது என்றால் அறிந்தவர்கள் உணர்ந்ததை இவர்கள் உணர்வது கடினம்.
ஆன்மிகம் தெரியாதவனை, ஆன்மீகவாதிகள் அறியாதவன் என்று கூறுவார்கள்..

அறிவியல் தெரியாதவனை, விஞ்யானிகள் அறியாதவர்கள் என்று கூறுவார்கள்.
அறிந்தவன் ஒன்றை அறியாதிருப்பன், அறியாதவன் பலவற்றை அறிந்திருப்பான்.


நாம் எப்படி அறிந்துகொள்வது என்று யோசிக்க வேண்டுமே தவிர.  வீண் விவாதத்தை தவிர்க்க வேண்டும்..  யாரையும் தாழ்த்தி பேசக்கூடாது..

ஏனென்றால் அறிந்தவர்களும் அறியாதவர்களும் இவ்வுலகிற்கு முக்கியம்.  உண்மை இப்போதுமே குழப்பமுடையது.  குழப்பமுடையதை உணர்ந்தால் நம் தெளிந்துவிடலாம். 


By
Balaji

No comments:

Post a Comment