அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கப்பாலாய்…-- இறைவன்

எந்த ஒரு பொருளினுள்ளும் புரோட்டன், நியூட்ரான் மற்றும் எலக்ட்ரான்களே இயக்க நிலையிலோ அமைதி நிலையிலோ உள்ளன.

நம் உடலினுள்ளும் அதே அணுககூட்டமைப்பே உள்ளன.

அப்படியானால் நாமும் எல்லா பொருள்களும் ஒன்றா?

அணுக்களின் மாறுபட்ட இயக்கம் மற்றும் மோதுதலால் ஒலி மற்றும் ஒளி  உண்டாகிறது.  உதாரணம் Microwave Oven.

எலக்ட்ரானின் ஓட்டமே மின்சாரம்.

பெரும்பாலான எல்லாவற்றையும் மின்சாரம் தான் இயக்குகிறது என்றால் இறைவன் தான் அந்த மறைந்துள்ள மறை பொருளா?

அணுக்களின் சுழற்சி விசையால் உருவாகும் ஈர்ப்புவிசையே காந்தம்.

மின்காந்த விசை அணுக்களால் விளைகிறது. மனித ஆவிகளை (Gost) அல்லது உயிரை Electro Magnetic Rays Detector மூலம் கண்டறிகிறார்களே ! உடலில்லா உயிரும் அணுக்களின் தொகுப்பா?

மனித உயிரும் இறைவனும் ஒன்றா ? அப்படியானால் செய்யும் செயலின் விளைவால் உண்டான பதிவினால் மட்டும் தான் மனிதன் வேறுபடுகிறானா?

உண்ணும் உணவும், அதை உருவாக்கின மரம், செடி, கொடிகளும் அணுக்களே 

அதை உண்டு வளரும் உடலும், அதனுள் உறையும் உயிரும் அணுக்களே

காற்றில்லா  இடத்திலும் நுழைந்த, ப்ரம்மாண்டம் முழுவதும் நிறைந்த ஈதறிக் பார்டிக்கள் முழுவதும் அணு.

நீரும் அணுகூட்டமைப்பே , அணுவின் இடைவெளியுடன் கூடிய இயக்கமே காற்று.   மோதுதலால் வெப்பம் மேலும் அதிர்வதால் ஒலி.

இதனால் தான் அபிராமி அந்தாதியில் அணுவிற்கும் அணுவாய் என்று குறிப்பிட்டனரோ ?

அதனால் தான் விஷ்ணுவின் பெயர் விஷ்ணும் (எல்லாம் ) என்று ஆனதோ ?

செய்யப்படும் யக்ஞம் நான் தான்.  எதனால் செய்யப்படுகிறதோ அந்த பொருள்களும் நான் தான்.அதை அனுபவிப்பவனும் நானே, செய்பவனும் நானே. அதனால் விளையும் பயனும் நானே.

உலகில் வெற்றி தோல்வி என்பதே கிடையாது. விளைவு (Result and Consequence) மட்டும் தான் உண்டு.

இந்த விளைவுதான்  இறைவனா?

Witten By 
Balaji. 




 

No comments:

Post a Comment