அடிப்படை இல்லாத பக்தி அறியாமை

படிக்காமல் தேர்ச்சி பெற வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுவது.
முயச்சி செய்யாமல் வேலை கிடைக்க வேண்டும் என்ற வேண்டுதல்.

இறைவனின் உருவம் மட்டுமே இறைவன் என்றும் கோயிலில் மட்டுமே அவன் உறைகிறான் என்றும் எண்ணுவது.

உதாரணம் :அன்று சிவன் பாதுகாப்பிற்காக ஈட்டி வைத்திருந்தார் என்றால், இன்று அதைவிட மேலான நவீன ஆயுதம் வேண்டும்.  உருவம் மட்டும் இறைவன் இல்லை..


நான் இறைவனை உண்டாக்கின பெரியோர்களை வணங்குபவன். ஏனென்றால் அடிப்படை சாமான்ய மக்களுக்கு தத்வார்த்தமான விஷயங்களை புரியவைப்பதின் கடினத்தன்மையை நன் உணர்கிறேன்.

அவர்களுக்கு உழைப்பதற்கும், உழைத்தக்  களைப்பில் உறங்குவதற்கும் நடைமுறையில் நேரம் சரியாக இருக்கிறது.

அவர்களும் படைப்பின் மூலத்தை உணர்ந்து அமைதியாகவும் மெய்யறிவுடனும் வாழ  வேண்டும் என்பதே இறைவன்  படைக்கப்பட்டதன் நோக்கம்.  அறியாமையே அனைத்து துன்பத்தின் பிறப்பிடம்.

எல்லாம் நம் முயற்சியால் மட்டும் நடைபெறுகிறது என்பதும் அறியாமை தான்.

விதை விதைத்தால் தான் அறுவடை செய்யலாம் அனால் உலகின் முதல் விதையை விதைத்தவன் யார்?

சமைக்க தெரியாதவனுக்கும் சாம்பார் ஒருநாள் நன்றாக சுவையுடன் அமையலாம்.  அனால் சாம்பார் தினமும் அதே சுவையுடன் அமைய வேண்டும் என்றால் சமையல் அறிவு வேண்டும்.   Ingredients மற்றும் consistency  துல்லியமாக அறிந்திருக்க வேண்டும்.  கண்களை மூடி மந்திரம் ஜெபித்தால் இந்த யுகத்தில் சாம்பார் வராது.  சாம்பார் மட்டும் அல்ல எதுவுமே சாத்தியம் இல்லை.

இந்த படைப்பினை உற்று நோக்கினால் அனைத்தும் Pattern, Precision and regularity அதாவது அமைப்பு, துள்ளியம் மற்றும் இயக்க ஒழுங்கு இன்ற அடிப்படையில் ஒரு நீதியோடு இயங்கி வருகிறது.

நெருப்பு என்றால்எரிதல் , எரித்தல், சுடுதல் சுற்றி பரவுதல் என்பது அதன் இயல்பு மற்றும் இயக்க ஒழுங்கு .  குழந்தை தெரியாமல் தொட்டாலும் சுடும், ஒரு ஞானி தெரிந்து தொட்டாலும் சுடும்.  சுடும் என்ற அறிவே, சுடுதல் என்றபாதிப்பிலிருந்து நம்மை காக்கும்.  

அறியாமை நம்மை எரித்துவிடும்.

இறைவன் செய்யும் செயலின் விளைவாகவே வெளிப்படுகிறான்.  இறைவனின் எல்லையற்ற இயல்பை உணர்ந்தால் வேண்டுதல் என்பதே எழாது.  நாம் வேண்டியதாலா  கடல் உண்டானது,  மலை உண்டானது ?  காலத்தால் மாற்றம் அடைவதே நன்மையையும் தீமையும்.

துன்பம் இன்பம் என்பது தனிமனித அனுபவமே.  பேருந்தின் கடைசி இருக்கை நமக்கு நரகம் அனால் கல்யாணம் ஆன புது தம்பதியர் சொர்க்கம் என்று கருதலாம். பேருந்தின்  ஒவ்வொரு வளைவிலும் இன்பமான அனுபவன்கள்.

அடிப்படையை உணர அமைதி வேண்டும். அமைதிக்கு ஒழுக்கம் வேண்டும். 

அறிவே இறைவன்.

By,
Balaji











No comments:

Post a Comment