தியானம்

தியானம் செய்வதால் உலகில் போர் எழாமல் காக்க முடியுமா!, அது எப்படி? ஆறு தீய குணங்கள் மனிதனிடம் இல்லாமல் இருந்திருந்தால், மகாபாரதம் என்ற மாபெரும் போர் நடந்தே இருக்காது. 1. பேராசை 2. சினம் 3. கடும்பற்று 4. முறையற்ற பால் கவர்ச்சி 5. உயர்வு தாழ்வு மனப்பான்மை 6. வஞ்சம் என்ற ஆறு தீய குணங்களை, மகாபாரத கதையில் இருந்து நீக்கிப்பாறுங்கள், போர் உருவாக வாய்ப்பே இருந்திருக்காது. ஒரு மனிதன் தவறு செய்கிறான் என்றால், அதற்க்கு தூண்டுதலாக இந்த ஆறு குணத்தில் ஒன்றோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட இந்த தீய குணம்தான் காரணமாக இருக்கும். இந்த ஆராய்ச்சியை சாதாரண அறிவு உடையவர்கள் கூட செய்யலாம். உங்களை சுற்றயுள்ள ஏதோ ஒரு சமுதாய சிக்கலையோ அல்லது குடும்ப சிக்கலையோ எடுத்துக்கொண்டு இந்த ஆராய்ச்சியை நீங்களே நடத்தி பார்க்கலாம். அல்லது மகாபாரத கதையிலயே இந்த ஆராய்ச்சியை செய்து பார்க்கலாம். இந்த ஆறு தீய குணங்களும் மனிதனுக்கு எந்த மன நிலையில் எழுகிறது என்று சிந்தித்தோமானால் அது உணர்ச்சிவயப்பட்ட மன நிலையில் (at high mind frequency) தான் உருவாகிறது என்பது தெளிவாகும். மனம் அமைதி நிலையில் இருக்கும் பொழுது இந்த தீய குணங்கள் எழ வாய்ப்பே இல்லை. ஒரு மனிதன் ஏன் உணர்ச்சிவயப்பட்ட நிலைக்கு தள்ளப்படுகிறான்? பெரும்பாலும் பழக்கத்தின் காரணமாகவும், ஒரு சில நேரங்களில் தேவை மற்றும் சூழ்நிலையின் காரணமாகவும் அவன் உணர்ச்சிவயப்பட்ட நிலைக்கு தள்ளபடுகிறான். ஏற்கனவே பலமுறை உணர்ச்சிவயப்பட்டு, நாம் அந்த நேரத்தில் என்னென்ன நினைத்தோமோ, எந்த எந்த செயல் செய்தோமோ, அந்த செயலினால் என்ன என்ன விளைந்ததோ, அனைத்தும் நம்மில் பதிவாகி விடுகிறது, மீண்டும் அதே மன அலைச்சுழல் (Mind frequency) வரும் பொழுது, முன்பு என்ன என்ன அந்த அலைசுழலில் பதிந்ததோ, அனைத்து எண்ணங்களும், செயல்களும் அவன் மூலம் வெளியாகும். இதற்கு உதாரணம், நாம் பல நேரங்களில் தவறு என்று தெரிந்தும் கூட, சில காரியங்களை செய்து துன்பப்படுவோம். இதுதான் பழக்கம். மனிதன் எப்பொழுதும் பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் நடுவில் போராடிக்கொண்டே இருக்கிறான். பெரும்பாலும் பழக்கமே வெற்றி அடைகிறது. ஏனென்றால் பழக்கபதிவு விளக்கபதிவை விட வலிமையாக இருப்பதே இதற்க்கு காரணம். இது போன்று பழக்கத்தின் வழியே மீண்டும் மீண்டும் தவறு செய்யாமல் இருக்க மனதிற்கு ஒரு விழுப்பு நிலை வேண்டும். மனதின் அலைச்சுழலை குறைத்து மனதை அமைதி நிலைக்கு கொண்டு வர வேண்டும், அந்த அமைதி நிலையில் நிலைக்க வேண்டும். இந்த தகமை அனைத்தும் ஒருவர் தியானம் செய்துவர படிப்படியாக கிடைக்கும். மனதின் அலைச்சுழல் அதிகமானால் தானே, அந்த அலைச்சுழலில் பதிந்துள்ள தீய குணங்கள் வெளிவரும். ஒருவர் தியானம் பழக பழக, அவருக்கு மனதை எந்த சூழ்நிலையிலும் அமைதி நிலையில் வைத்திருக்கும் தகமை இயல்பாக வந்துவிடும். இது போன்ற மாற்றம் மனித மனங்களில் உருவாகுமானால், ஆறு தீய குணங்களுக்கு வாய்ப்பே இல்லை. இந்த ஆறு தீய குணங்கள் இல்லாமல் போனால், போர் மட்டும் அல்ல இந்த உலகத்தில் நாம் காணும் எந்த வித குற்றமும் நடக்க முடியாது. இதுவே மனித சமுதாயத்தில் நிலையான அமைதியை பெற்றுத்தரும். அவ்வளவு மதிப்புடையது தியானம். https://m.facebook.com/groups/194749033908852?view=permalink&id=688656667851417

No comments:

Post a Comment