ஆன்மா என்பது என்ன? (வேதாத்திரி மகரிஷி அவர்களின் நூலின் வாயிலாக அறிந்துக் கொண்டது)


ஆன்மா என்பது என்ன? (வேதாத்திரி மகரிஷி அவர்களின் நூலின் வாயிலாக அறிந்துக் கொண்டது)

வாழ்க்கை என்பது பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்டது. நமக்கு பிறந்த நாள் தெரியும். இறந்த நாள் தெரியாது. ஒரு நாள் இறக்கப்போவது திண்ணமே. ஆயினும் அது எந்த நாள் என்பது யாருக்கும் தெரியாத ஒன்று. மனிதப் பிறவிக்கான உடலமைப்பு நூற்றி இருபது ஆண்டுகள் வாழும் வகையில் தான் அமைக்கப் பட்டு இருக்கிறது. எனவே எவ்வளவு காலம் வாழ்கிறோம் என்பது நாம் உடலை பராமரிக்கும் விதத்தில் தான் அமைந்து இருக்கிறது.

உடலானது பஞ்ச பூதங்களின் (ஐந்து பௌதிகங்களின்) கூட்டு. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இவற்றின் கூட்டே மனித உடல். மனிதனின் உடல் நலம் என்பது அவன் உடலில் ஓடிக் கொண்டு இருக்கும் இரத்தம், வெப்பம், மற்றும் சுவாசம் ஆகிய ஓட்டங்களின் சீரமைப்பில் தான் உள்ளது. நீரானது நம் உடலில் இரத்தமாகவும், நெருப்பு என்பது உடலின் சூட்டையும், காற்று என்பது நமது சுவாசமாகவும் அமைகிறது. நிலமானது நமது உடலாகவும் விண் என்ற
ஆகாயம் உயிராகவும் உள்ளது. உடலுக்கும் உயிருக்கும் உள்ள உறவினை பலபடுத்த இந்த மூன்று ஓட்டங்களும் நன்றாக செயல் பட வேண்டும்.

உயிரானது எங்கு இருக்கிறது என்று கேட்டால் பொதுவாக நாம் நமது இதயத்தையே காட்டுவோம். ஆனால் உயிரானது நம் உடல் முழுவதும் ஓடிக்
கொண்டே இருக்கிறது. அவ்வாறு ஓடும் உயிரிலிருந்து வரும் அலைகள் காந்த அலைகளாக மாறி நம் உடலை நடத்துவதற்கு போதிய சக்தியி அளிக்கிறது
இதே அலை மூளை வழியே செல்லும்போது மனமாக இருக்கிறது. மனதினால் எண்ணுவதை, வாயினால் சொல்லி உடலால் செய்கிறோம். இவை முறையே எண்ணம் சொல் செயல் எனப்படுகிறது. நாம் அடையும் இன்ப துன்பங்களுக்கு காரணமே நம்மில் ஏற்படும் எண்ணங்கள் சொல்லபடுவதும் செயல்படுத்தப் படுவதும். நம்முடைய எண்ணம் , சொல், செயல் என்பது நம் உடலிலே காந்தத்தில் பதிவாகிறது. இவ்வாறு திணிவு பெற்ற காந்தமே ஆன்மா எனப்படும்.

No comments:

Post a Comment