கையில் காப்புக்கயிறு கட்டுவது ஏன்?
சிவ லிங்கம் பற்றி ரஷ்ய விஞ்ஞானியின் ஆராய்ச்சியில் கிடைத்த முடிவு.
தானங்களால் ஏற்படும் பலன்கள்
1.ஆடைகள் தானம்:
ஆயுள் விருத்தியாகும்.புத்திர தோசம் விலகும்.அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடைதானம் செய்வது மிக நன்று.வியாழக்கிழமையன்று ஆடைதானம் செய்வதால் பெண்களிடம் நல்லுறவும், சுக போக பாக்யவிருத்தியும்,உடல் வலிமையும் உண்டாகும்.
2.தேன் தானம்:
புத்திர பாக்யம் இல்லாதவர்கள், கர்ப்பப்பை வலிமை இல்லாதவர்கள், வெண்கலப்பாத்திரத்தில் தாரா பலன் உள்ள நட்சத்திரத்தன்று( இதை அறிய உங்கள் ஆஸ்தான ஜோதிடரை அணுகவும்) சுத்தமான தேனை தானம் செய்ய வேண்டும்.
3.நெய்தானம்:
பாவக்கிரக திசை நடப்பவர்கள்(6,8,12 ஆம் அதிபதியின் திசை).நோய் தொல்லையால் அவதிப்படுபவர்கள் வெண்கலக் கிண்ணத்தில் சுத்தமான நெய் தானம் செய்ய வேண்டும்.சகலவிதமான நோய்களும் தீரும்.
4.தீப தானம்:
இஷ்ட தெய்வ சன்னதியில் மாதம் ஒருமுறை 10 தீபம் ஏற்றினால் கண் கோளாறுகள் தீரும்.அல்லது ஏழை,எளியவர்களுக்கு மின்விளக்கு வசதி செய்து கொடுத்தால் பார்வைத்திறன் எப்போதும் பாதுகாக்கப்படும்.
5.அரிசிதானம்:
பூர்வ ஜென்ம தோஷங்கள், தெரிந்தும் தெரியாமலும் செய்தவை விலக ஏழை அல்லது வாழ்வில் நலிந்தவர்களுக்குஅரிசி தானம் செய்யவேண்டும்.யாருக்கு வீடு வாசல் இல்லையோ அவர்களுக்கு தானம் செய்தால் தான் நாம் தானம் செய்த பலன் நமக்கு உணடாகும்.
6.கம்பளி-பருத்தி தானம்:
வாயு சார்ந்த நோய் உள்ளவர்கள் வயது முதிர்ந்தவர்களுக்கு கம்பளிதானம் செய்தால் நோய் தீரும்.வெண்குஷ்டம் அறிகுறி தென்பட்டால் பருத்திதானம் (பருத்திஉடைகள்) செய்து அதிலிருந்து மீண்டுவிடலாம்.
THREE-BITE PRACTICE
Compassion and the Nature of Mind
So thinking in this way, we can gear our response in a fresh way, from a more positive angle and see these moments of anger as opportunities... to shift the trajectory of the relationship in a more positive way.
If we can do that, if we can respond in new ways like that, then I think we can really stand a chance of transforming our relationship in a positive way.
"Compassion and the Nature of Mind" Teachings at Hunter College, NYC - June 29, 2011
தியானம்
தியானம் செய்வதால் உலகில் போர் எழாமல் காக்க முடியுமா!, அது எப்படி? ஆறு தீய குணங்கள் மனிதனிடம் இல்லாமல் இருந்திருந்தால், மகாபாரதம் என்ற மாபெரும் போர் நடந்தே இருக்காது. 1. பேராசை 2. சினம் 3. கடும்பற்று 4. முறையற்ற பால் கவர்ச்சி 5. உயர்வு தாழ்வு மனப்பான்மை 6. வஞ்சம் என்ற ஆறு தீய குணங்களை, மகாபாரத கதையில் இருந்து நீக்கிப்பாறுங்கள், போர் உருவாக வாய்ப்பே இருந்திருக்காது. ஒரு மனிதன் தவறு செய்கிறான் என்றால், அதற்க்கு தூண்டுதலாக இந்த ஆறு குணத்தில் ஒன்றோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட இந்த தீய குணம்தான் காரணமாக இருக்கும். இந்த ஆராய்ச்சியை சாதாரண அறிவு உடையவர்கள் கூட செய்யலாம். உங்களை சுற்றயுள்ள ஏதோ ஒரு சமுதாய சிக்கலையோ அல்லது குடும்ப சிக்கலையோ எடுத்துக்கொண்டு இந்த ஆராய்ச்சியை நீங்களே நடத்தி பார்க்கலாம். அல்லது மகாபாரத கதையிலயே இந்த ஆராய்ச்சியை செய்து பார்க்கலாம். இந்த ஆறு தீய குணங்களும் மனிதனுக்கு எந்த மன நிலையில் எழுகிறது என்று சிந்தித்தோமானால் அது உணர்ச்சிவயப்பட்ட மன நிலையில் (at high mind frequency) தான் உருவாகிறது என்பது தெளிவாகும். மனம் அமைதி நிலையில் இருக்கும் பொழுது இந்த தீய குணங்கள் எழ வாய்ப்பே இல்லை. ஒரு மனிதன் ஏன் உணர்ச்சிவயப்பட்ட நிலைக்கு தள்ளப்படுகிறான்? பெரும்பாலும் பழக்கத்தின் காரணமாகவும், ஒரு சில நேரங்களில் தேவை மற்றும் சூழ்நிலையின் காரணமாகவும் அவன் உணர்ச்சிவயப்பட்ட நிலைக்கு தள்ளபடுகிறான். ஏற்கனவே பலமுறை உணர்ச்சிவயப்பட்டு, நாம் அந்த நேரத்தில் என்னென்ன நினைத்தோமோ, எந்த எந்த செயல் செய்தோமோ, அந்த செயலினால் என்ன என்ன விளைந்ததோ, அனைத்தும் நம்மில் பதிவாகி விடுகிறது, மீண்டும் அதே மன அலைச்சுழல் (Mind frequency) வரும் பொழுது, முன்பு என்ன என்ன அந்த அலைசுழலில் பதிந்ததோ, அனைத்து எண்ணங்களும், செயல்களும் அவன் மூலம் வெளியாகும். இதற்கு உதாரணம், நாம் பல நேரங்களில் தவறு என்று தெரிந்தும் கூட, சில காரியங்களை செய்து துன்பப்படுவோம். இதுதான் பழக்கம். மனிதன் எப்பொழுதும் பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் நடுவில் போராடிக்கொண்டே இருக்கிறான். பெரும்பாலும் பழக்கமே வெற்றி அடைகிறது. ஏனென்றால் பழக்கபதிவு விளக்கபதிவை விட வலிமையாக இருப்பதே இதற்க்கு காரணம். இது போன்று பழக்கத்தின் வழியே மீண்டும் மீண்டும் தவறு செய்யாமல் இருக்க மனதிற்கு ஒரு விழுப்பு நிலை வேண்டும். மனதின் அலைச்சுழலை குறைத்து மனதை அமைதி நிலைக்கு கொண்டு வர வேண்டும், அந்த அமைதி நிலையில் நிலைக்க வேண்டும். இந்த தகமை அனைத்தும் ஒருவர் தியானம் செய்துவர படிப்படியாக கிடைக்கும். மனதின் அலைச்சுழல் அதிகமானால் தானே, அந்த அலைச்சுழலில் பதிந்துள்ள தீய குணங்கள் வெளிவரும். ஒருவர் தியானம் பழக பழக, அவருக்கு மனதை எந்த சூழ்நிலையிலும் அமைதி நிலையில் வைத்திருக்கும் தகமை இயல்பாக வந்துவிடும். இது போன்ற மாற்றம் மனித மனங்களில் உருவாகுமானால், ஆறு தீய குணங்களுக்கு வாய்ப்பே இல்லை. இந்த ஆறு தீய குணங்கள் இல்லாமல் போனால், போர் மட்டும் அல்ல இந்த உலகத்தில் நாம் காணும் எந்த வித குற்றமும் நடக்க முடியாது. இதுவே மனித சமுதாயத்தில் நிலையான அமைதியை பெற்றுத்தரும். அவ்வளவு மதிப்புடையது தியானம். https://m.facebook.com/groups/194749033908852?view=permalink&id=688656667851417
உங்கள் மனமானது, மற்றவர்களின் குறைபாடுகளை பற்றி நினைத்து பாதிக்கப்படுகிறது.
உங்கள் மனமானது, மற்றவர்களின் குறைபாடுகளை பற்றி நினைத்து பாதிக்கப்படுகிறது. மற்றவர்களின் குறைபாடுகளை அவர்களிடமே விட்டுவிடுங்கள், அவர்களே அவற்றை கையாளட்டும். நீங்கள், உங்கள் மனதை கையாளுங்கள். நீங்கள் உங்களது சொந்த குறைபாடுகளை கையாளுங்கள் அதுவே போதுமானது.
ஞானம்
விதை, நிலம், எரு, தண்ணீர், காவல் இவைகள் அனைத்தும் சரியாக இருந்தால் தான் விளைவு நன்றாக இருக்கும். அதுபோலவே, ஒரு ஆசான் அத்துவிதத் தத்துவம் என்ற ஒருமைத் தத்துவ விதையை உன்அறிவு என்னும் நிலத்தில் ஊன்றினால் அது வளர்ச்சி பெற, நீ ஒழுக்கம் என்ற உரம் இடவேண்டும். அறிவை ஒன்றிப் பழகும் ஒருமைப் பழக்கமான தவமும் - ஆராய்ச்சியும் என்ற தண்ணீரும் பாய்ச்ச வேண்டும்.
அறிவை ஒன்றச் செய்து உறுதியான, அசைவற்ற நிலையடைவதே ஞானத்திற்குத் தேவையாக இருக்கிறது.
ஆகையால், அறிவு சலனப்பட்டுக் காமம், குரோதம், கோபம், மோகம், மதம், மாச்சரியம் என்னும் ஆறு குணங்களில் எதுவாயும் மாறாது பார்த்துக் கொள்ளும் விழிப்பு நிலையாகிய காவல் புரிய வேண்டும்.
இவைகள் எல்லாம் அமையும் வகைக்கும் அளவிற்கும் ஏற்றபடி "ஞானம்" என்ற விளைவும் உனக்கு உண்டாகும்.
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
மங்கள ஆரத்தி
தமிழர் பாரம்பரிய நடவடிக்கைகளில் முக்கியமானது, ஆரத்தி எடுக்கும் நடைமுறை. ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை பின்பற்றப்படும் இந்த நடைமுறை வெறும் சடங்குக்காக செய்யப்படுவதில்லை.
சாதாரண நிகழ்வாக இதை புறக்கணிக்கிறோம். ஆனால் இதில் ஆழமான அர்த்தம், அதுவும் விஞ்ஞான நலன் காணப்படுகிறது. இதில் முக்கியமான கருத்துகள் மறைந்துள்ளது.
தூரத்து பயணம் முடித்து வருபவர்களுக்கு புதிதாய் திருமணம் முடித்து வீட்டிற்கு வரும் மணமக்கள், மகப்பேறு முடித்து வீட்டிற்கு வரும் பெண் ஆகியோருக்கு ஆரத்தி எடுக்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது.
ஆரத்தி எடுப்பது என்றால் ஒரு தாம்பாளத் தட்டில் தண்ணீரில் மஞ்சள் அரைத்து சேர்த்து அதில் சிறிது சுண்ணாம்பு சேர்த்து கலக்க வேண்டும். மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த தண்ணீருக்கு சிவப்பு நிறம் வருகிறது. இதை ஒரு பரந்த பாத்திரத்தில் எடுத்து அதற்கு இரு பக்கங்களிலும் இரண்டு தீச்சுடர் எழுப்பி சம்பந்தப்பட்ட நபரின் உடலுக்கு சுற்றும் 3 முறை சுற்றி விடுவதையே ஆரத்தி என்று கூறுகின்றோம்.
ஒவ்வொரு மனிதனைச் சுற்றிலும் ஆரா (aura ) என்ற சூட்சுமப் பகுதி இருக்கிறது.
மனிதனுக்கு ஏற்படும் திருஷ்டி மற்றும் அவனைச் சேரும் தீய கிருமிகள் ஆகியவை அந்த சூட்சும பகுதியில் முதலில் பதிந்து பின்னரே அவனுள் புகுகின்றன. திருமணம், குழந்தை பெறுதல், வெற்றியடைதல் ஆகியவற்றால் பலருடைய திருஷ்டி- மணமக்கள், தாய்-சேய், வெற்றியாளர் மீது அதிகம் விழவாய்ப்பு கூடுதலாக உள்ளது.
மஞ்சள் மற்றும் சுண்ணாம்புக்கு கிருமிகளை அழிக்கும் திறனுண்டு என்பதை நாம் கண்டறிந்துள்ளோம்.
அந்த நபரின் மேல் வந்து சேர்ந்திருக்கும் விஷ அணுக்களை அழிப்பதே ஆரத்தியின் உத்தேசம். ஆரத்தி எடுப்பதன் மூலம் நம் உடலில் சேரும் விஷ அணுக்களை அழித்து நம் நலன் பேனுவதோடு பிறருக்கும் அந்த விஷகிருமிகள் பரவாது தடுக்கிறது.வீட்டினுள் நுழையும் முன்பே 'ஆரா' சரீரத்தில் சேர்ந்துள்ள திருஷ்டி மற்றும் கிருமிகளை அகற்றி தூய்மைப்படுத்திய பின்னரே சம்பந்தப்பட்டவர்களை வீட்டுக்குள் அழைத்துக் கொண்டு போகும் வழக்கம் உள்ளது.
எனவே அது போல் ஆரத்தி எடுக்கும் போது பொருள் அறிந்து சரியான பாவனையுடன் செய்வது முக்கியம். அப்போது தான் அதன் பலனும் முழுமையாக இருக்கும்.
கணிதமும் கடவுளும்-Seven Reasons Why a Scientist Believes in God
Seven Reasons Why a Scientist Believes in God
By
Former President of the New York Academy of Sciences
கவலை ஏன்?
நினைவில் வைத்துக் கொள்!*
நம் முள்ளந்தண்டில் 18 படிகள்!
தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!!
கர்மா
- கர்மா எங்கே பதிகிறது? மனித மூளையில் என்று கூற முடியாது. ஏனெனில் அது இறந்தவுடன் அழிந்துவிடும்.
- பதிந்த கர்மாவிற்கு ஏற்ப நல்ல பலனையோ தீய பலனையோ தரும் அந்த நீதி பதி யார். வெறும் இறைவன் என்று சொல்லி மழுப்ப முடியாது. ஏனெனில் நாம் இறைவனையே பார்த்தது கிடையாது.
- இது ஒரு இயக்கமா ? இல்லை இயக்கப்படும் நிகழ்ச்சியா?
- இன்று செய்த பாவத்திற்கு என்று தண்டனை.
- ஒருவன் இறக்கப்போகும் ஒரு நிமிடம் முன்பு ஒரு பெரிய பாவம் செய்தால், அவன் எப்படி தண்டனை அனுபவிக்க முடியும்.
- பெற்றோர்கள் செய்யும் பாவம் பிள்ளைகளுக்கு என்றால் அதை பெற்றோர்கள் advantage ஆக எடுத்துக்கொள்ளலாமா? குழந்தைகள் தானே துன்பப்பட போகிறார்கள் நாம் இல்லையே :-)
- கர்மாவின் படி தான் எல்லாமே நடக்கும் என்றால், எல்லோரும் வியக்கும் ஆழ்ந்த சிந்தனையாளர் திருவள்ளுவர், ஏன் முயற்சி தன மெய் வருத்தக் கூலி தரும் என்கிறார்.
- ஒருவன் செய்யும் கர்மா, வேறு யாரையெல்லாம் பாதிக்கும்.
- கர்மா தான் விதியா ?
- விதியை மாற்ற முடியுமா?
- கர்மா என்கிற விஷயத்தில் இறைவனின் பங்கு எங்கு உள்ளது.
- கர்மாவை மாற்றும் பூஜை ஏதாவது உண்டா? இருந்தால் ஏன் பணம் படைத்தவர்கள் துன்புரவெண்டும். இல்லை அந்த பூஜையை செய்யக் கற்றவர்கள் ஏன் துன்பமோ இன்பமோ படவேண்டும்.
- கர்மாவில் நவக்ரஹங்களின் பங்கு என்ன?