தொழில்ஸ்தாபனத்தில் நீங்க வெற்றி பெற

தொழில்ஸ்தாபனத்தில் நீங்க வெற்றி பெற பின்பற்ற வேண்டிய சில பிரதான விஷயங்கள். இவை நான் படித்தது அல்ல;  உணர்ந்தது.

  1. வெற்றியோ தோல்வியோ, அதற்கு காரணம் இன்னொரு சக மனிதனாகத் தான் இருக்க முடியும். அதனால் சக ஊழியர்களை அரவணைத்து செல்லுவது மிக முக்கியம்.
  2. அனைவரிடம் இருந்தும் ஏதேனும் ஒரு விஷயமாகிலும் கற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் அவர்கள் அனைவரும் இயற்க்கை நமக்கு அன்பளிப்பாக கொடுக்க பட்டிருக்கும் புத்தகங்கள்.
  3. யாருடைய வளர்ச்சியையும் தடுக்க நினைப்பது முட்டாள்த்தனம்.  ஏனென்றால் அருகில் இருப்பவனை வளர்ப்பது இயற்க்கை. மேலும் அவன் வளர்வது நீங்கள் வளர்வதற்கு சமம்.  இதை உணர அனுபவம் தேவை. உதாரணத்திற்கு உங்கள் நண்பன் ஒரு விலை உயர்ந்த car  வாங்கினால், நீங்கள் அதை பற்றி எல்லா விஷயங்களும் தெரிந்து கொள்வீர்கள்.  அதை இயக்கி பார்ப்பீர்கள்.  அந்த ஆசையில் நீங்கள் விரைவில் அதை போன்று வாங்க அது ஒரு உந்து சக்தியாக உங்களுக்குள் இருக்கும்.  மற்றவர் வளர்ச்சியில் பங்குகொண்டு மகிழ நாம் பழகிக்கொள்ள வேண்டும்.
  4. பொறாமை உங்கள் முக வசீகரத்தை இழக்க செய்யும். ஆகையால் அதை அறவே கைவிட வேண்டும்.  அது நம் அருகில் இருக்கும் அனைவரையும் நம்மிடம் இருந்து விலக் கிவிடும்.  நம்மை சுற்றி எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது தான் நமது வெற்றியை நிர்ணயிக்கிறது.
  5.  தேவையில்லாப்  பேச்சு உங்கள் குரலில் உள்ள நேர்மையை சந்தேகிக்கச் செய்யும்.  உங்கள் பேச்சு தேவை இல்லாததாகிவிடும்.
  6. அளந்து பேசுவது உங்களுக்கு மரியாதையை பெற்றுத்தரும்.
  7. பேச்சை குறைப்பது கவனமில்லா வம்பில் இருந்து உங்களை காப்பாற்றும்.
  8. வம்பு மிகவும் வீணான செயல்.  நம் அறிவையும், தவறையும் ஆராயாது, தன்னிலை உணராது, மற்றவரின் கதையை நம் இஷ்டத்திற்கு மிகைப்படுத்தி ஆனந்தம் கொள்ளும் அற்ப மான அவா.  அறிவு மற்றும் ஆன்ம வளர்ச்சிக்கு எதிரானது.
  9. தனி ஒரு நபரிடம் போட்டி போடுவது என்பது நகைக்கத்தக்கது.  ஏனென்றால் அந்த போட்டி இந்த பெரிய பறந்து விரிந்து கிடைக்கும் உலகத்தில் உள்ள வாய்ப்புகள் அனைத்தையும் மறைத்து அந்த நபரை மட்டுமே கனவிலும் நினைவிலும்  காட்டும் மாயக்கண்ணாடி. போட்டியில் கஞ்சம் எதற்கு? பெரியதாக வைத்துக்கொள்ளலாமே.
  10. நமக்கு  மட்டுமே தெரியும் என்ற ஆணவமும் அதிகார போதையும் வளர்ச்சி பெறாத மூளையை வெளியே படம் போட்டுக்  காண்பிக்கும் அற்ப குணம். அனைவரையும் நம்மை பார்த்து சிரிக்கச்  செய்துவிடும்.
  11. சும்மா இருப்பது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் ஊரு விளைவிக்கும் செயல். ஏனென்றால் மனித உடல் தொடர்ந்து இயங்கும் வகையில் மட்டுமே படைக்கப்பட்டிருக்கிறது.
  12. இன்றைக்கு நாம் பயனுள்ளவர்களாக இருந்தால் நாளைக்கு நாம் தேவைப்படுவோம்.   நாம் வேளையில் நிலைத்திருக்க, ஒவ்வொரு நாளும் நாம் பயனுள்ள ஒன்றையாவது செய்யவேண்டும, 
  13. மேலதிகாரியிடம் பணிவாக இருப்பது நம் முதிர்ச்சியையும், திறமையையும் கொண்டு சேர்க்கும் மூங்கில் பாலம்.
  14. அவமரியாதை செய்வது, வாய்ப்புகள் வேண்டாம் என்று விளம்பரம் செய்வதைப்போன்றது.
  15. கண்ணியமான பேச்சு நட்பு, செல்வம், மரியாதை அனைத்தையும் தரவல்லது.
  16. கண்ணியமாக பேசமுடியாவிட்டால், பேசாமல் இருப்பது பெருமை சேர்க்கும்.
  17. நம்மை நோக்கி வரும் அனைத்தையும் இயற்க்கை தரும் நல்ல வாய்ப்பாக எண்ணி பொறுப்பேற்க வேண்டும்.
  18. நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் ஒருவரை ஒருவர் சார்ந்து இருக்கிறோம். என்பதை மறக்காமல் இருக்க முயற்சிக்க வேண்டும்.
--
பாலாஜி 


No comments:

Post a Comment