ஏதோ ஒரு விஷயம். எது வேண்டுமாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.அது நமக்கு தெறியாது என்ற உண்மை ஊருக்கே தெரியும் ஆனால் அது நம்மக்கு தெறியாது என்று நமக்கே தெறியாது . இதுதான் ஈகோவின் அடிப்படை நிலை. எவ்வளவு நகைக்கத்தக்க பரிதாப நிலை!
இதன் அடுத்த பரிமாணம்,
எனக்கு மட்டுமே தெரியும் என்பது.
இதன் அடுத்த பரிமாணம்,
என்னால் மட்டுமே இதை சரியாக செய்ய இயலும்.
சற்று முற்றிய நிலை :-)
யாராலும் இதை அறிய முடியாது,யாராலும் இதை செய்ய முடியாது...
Final Stage and need to be admitted in the mental hospital: நானே அறிவாளி மற்ற அனைவரும் முட்டாள்கள் மற்றும் பைத்தியக்காரர்கள்.
இந்த ஈகோ கவனமின்மையால் வந்தது. சுயநலத்தால் வந்தது. உலகை நாம் குழந்தையை போல் கூர்ந்து கவனிக்க வேண்டும். கவனித்தால் நம் ஈகோ குறைந்து, கறைந்து அன்பு, கருணை என்னும் தடாகமாக ஓடும்.
- தயிரை புளிக்க வைக்கும் பாக்டீரியா செய்யும் வேலையை நம்மால் செய்யமுடியுமா?
- தாவரங்களின்றி நாம் சுவாசிக்க முடியுமா?
- மனிதர்களின்றி இன்றி தாவரங்கள் சுவாசிக்க முடியுமா?
- உழவனின் நண்பன் மண்புழு என்பது நமக்கு இன்னும் நினைவிருக்கிறதா?.
- நாம் போட்டுக்கொள்ளும் இன்சுலினில் எத்தனை பன்றிகளின் பங்கு உள்ளது என்று தெறியுமா?
- தாய்ப்பாலில்லாத பிறந்த குழந்தைக்கு எத்தனை பசுக்கள் அம்மா ஆகின என்பதில் கவனம் இருக்கிறதா? அதை நினைவூட்டத்தான் அது அம்மா என்று கதறுகிறதா?
- நாம் சாப்பிட எத்துணை மனிதர்கள் உழைக்கிறார்கள் என்பதில் நமக்கு கவனம் இருக்கிறதா?
- இந்த பிரபஞ்சத்தில் பூமி எவ்வளவு பெரியது தெறியுமா?
- இந்த ஒப்பீட்டில் நமது வாழ்நாள் என்பது ஒரு TINY FLASH என்பது நமக்கு நினைவிருக்கிறதா?
No matter we know all the above, But
How many hours in 24 hours are we conscious about it will change the quality of our life.
The most craziest thing is Ego.
நம் வாழ்வின் அடிப்படை இந்த உலகத்தோடு ஒன்றிணைந்து நடப்பது. நான் என்ற தனிமை படுத்தும் சொல் மிகவும் நகைக்கத்தக்கது. இந்த உலகின் அடிப்படை எப்படிஎன்றால் ,
ஒன்றோடு ஒன்று இணைந்தால் தான் இன்னொன்று பிறக்கும். தனிமை அல்லது exclusion அசைவற்றது.
இந்த அடிப்படை படைப்பில் இருக்கும் அனைத்திற்கும் பொருந்தும். இந்த அடிப்படையில் இருந்து நம்மை பிறிபது தான் ஈகோ. இது பயனற்றது.
ஒன்றோடு ஒன்று இணைந்தால் தான் இன்னொன்று பிறக்கும். தனிமை அல்லது exclusion அசைவற்றது.
இந்த அடிப்படை படைப்பில் இருக்கும் அனைத்திற்கும் பொருந்தும். இந்த அடிப்படையில் இருந்து நம்மை பிறிபது தான் ஈகோ. இது பயனற்றது.
--
Balaji
No comments:
Post a Comment