நாம் இறை அருள் வெளிப்பாட்டை பல வகையில் கேள்விப்பட்டிருப்போம். விஸ்வரூப தரிசனம், ஒளிவட்டம் etc. வேறு ஒரு கோணத்தில் இறை அருளை சிந்திப்போம். எந்த அடிப்படையில்?
இறை அருளைப்பெற்றவன், கண்டிப்பாக எவ்வழியிலும் கஷ்டப்பட மாட்டான். ஆனால் இறை அருளைப் பெறாதவனோ துன்பப்படுவான். இதன் அடிப்படையில் தான் உலக சுகங்களை அடைய நாம் இறைவனை நாடுகிறோம் அல்லவா? நம் வேண்டுதல்களை உற்று நோக்குங்கள்.
சிறுவயதில் - நான் தேர்ச்சி பெற வேண்டும். பின் வேலை கிடைக்க வேண்டும்.
திருமணம் ஆக வேண்டுதல்கள் பல. பின் சுமுகமான திருமண வாழ்வின் தடைகள் அகல பரிகாரம். குழந்தை ...., உடல்நலம் ,....குழந்தையின் கல்வி .....Etc. இத்தனை வேண்டுதல்களும் நிறைவேற நாம் இடும் தக்ஷனை ரூபாய் 10 அல்லது 20 .
துன்புருபவன் இறையருள் பெறாதவன், இன்புருபவன் இறையருள் பெற்றவன் அல்லது புண்ணியசாலி என்ற அடிப்படை கருத்தை சிந்தித்தபடி கீழ் வருவனவற்றை ஆராய்வோம்.
இன்புருபவன் இறையருள் பெற்றவன்
Financial Intelligence உள்ளவர்கள், நிதி சூழ்நிலைகளை திறம்பட கையாண்டு பணம் அவர்களின் திறமையால் பணம் படைத்தவர்களாக உள்ளனர்.
Music Skills உள்ளவர்கள் அவர்களின் திறமையால் கச்சேரி, தொலைக்காட்சி நிகழ்ச்சி என புகழுடன் உள்ளனர்.
நடிக்கும் திறமை படைத்தவர்கள், அத்திறமையால் உலகப் பிரபலமாகி, புகழுடனும், பணத்துடனும் வாழ்கிறார்கள்.
துன்புருபவன் இறையருள் பெறாதவன்.
திறமை அல்லது பரிட்சயம் இல்லாத ஒரு வாகன ஓட்டியின் அறியாமையால் தனக்கும் பிறருக்கும் விபத்து நேர்கிறது.
அறிவியல் வளர்ச்சியை அறியாத ஒரு பாமர மனிதனின் அறியாமையால் இன்றும் இயந்திரங்களின் உதவி கொண்டு எளிமையாக செய்யக்கூடிய வேலையை பழைய முறைகளை பாரம்பரியம் என்ற பெயரில் அறியாமையால் பின்பற்றி காலத்தையும் உடல் உழைப்பையும் வீணாக்கி துன்புறுகிறான். பாரம்பரியம் கடைபிடிக்க வேண்டிய செயல்களை Modern என்ற பெயரில் பின்பற்றாமலும் துன்புறுகிறான்.
உதாரணம். Mixie, Grinder பயன்பாடு மற்றும் தமிழை தமிழ் நாட்டிற்குள் பேசுவதற்கு தயக்கம். மொழிழ்ப் பயன்பட்டிற்குள் ஒருவனின் வாழ்க்கைத் தரம் Status தாக்கம் குறுக்கிடுவதே அறியாமைதான்.
மருத்துவ வளர்ச்சியை அறியாதவர்கள் நோயினால் துன்பப்படுவது. விதி என்று அறியாமையால் முடங்கி இருப்பது.
ஒருவேலை இறையருள் திறமை சாலிகளுக்கு மட்டும் தானோ? அல்லது கடினமாக உழைப்பவர்களுக்கு மட்டும் தானோ?
அறிவில்தான் மனிதன் வேறுபடுகிறான் என்பதை ஒப்புக்கொள்ள முடிந்தால், அறிவேதான் இறையருள் என்பது புரியும்.
ஆழமாக சிந்தித்தால் நாம் இறைவனின் அத்தனை பெருமைகளையும் உணர்வதே அறிவால் தான்.
இன்னும் ஆழமாக சிந்தித்தால் அறிவைத் தருவதே இறைவன் தான்.
ஒருவேளை நாம் மனநிலை பாதிக்கப்பட்டு பிறந்திருந்தால், இறைவனைக் கூட அறியமுடியாது, எங்கே திறமை அடைவது.
நம்மிடம் உள்ள இறைஅருளை வெளிக்கொணர, கடினமாக உழைக்கவேண்டும். உழைத்தால் திறமை வரும், வந்தால் இறைவன் அருள் வரும் ...
என்ன Sir இது உழைப்பின்றி இறைவன் அருள் கூட கிடைக்காதா......!
நன்றியுடன்
பாலாஜி