பூர்வம் என்கிற வடமொழிச் சொல்லுக்கு முந்தியவை என்று பொருள். ஆருயிர் முதல் ஓருயிர் வரை ஒவ்வொரு உயிருக்கும் முற்பிறவி உள்ளது என்று சாஸ்திரம் கூறுகிறது. ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினை உண்டு என்பதை ஆழமாக சிந்திப்போமேயானால் நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் சமமான எதிர் விளைவு உண்டு என்பதை அறிய முடியும்.
சித்திரகுப்தன் நம் புண்ணிய மற்றும் பாவ கணக்குகளை எழுதி வைத்து அதற்க்கேற்ப தண்டனை வழங்குவதாக கேள்விப்பட்டிருக்கலாம். அதெல்லாம் ஒருபுறமிருக்க வேறு ஒரு கோணத்தில் புண்ணிய மற்றும் பாவங்களை நாம் ஆராய்வோம்.
ஒரு செயலை செய்தல். இதை வட மொழியில் கர்மா என்று அழைப்பர். ஒரு செயலை செய்தாலும் அல்லது ஒரு செயலை செய்வதாக மனதில் கற்பனை செய்து செய்தாலும் ஒரே விளைவுதான் என்கிறது சாஸ்திரம். சிந்தனையாளர்களே இதை அழ்ந்து சிந்திப்போம்.
எங்கும் நீக்கமறக் காணப்படும் இறையாற்றலை நாம் ஈதர் என்று அறிவியல் ரீதியாக அழைக்கிறோம். அந்த இறையாற்றலானது நமது உடல் முழுவதும் ஜீவகாந்த சக்தியாக சுழன்று கொண்டிருக்கிறது.
காந்த சக்தியைப் பற்றி நாம் அறிந்திருப்போம். ஒலி அலைகளை காந்த புலத்தில் பதியவைத்து அதை மீண்டும் ஒலிவடிவமாக அல்லது ஒளி அலைகளாக மாற்றி இயங்கும் டேப் ரெகார்டர் அல்லது cd player ஐ கண்டிருப்போம்.
அதைப்போலவே நாம் பார்க்கும் ஒவ்வொரு பொருளும் ஒளி அலைகளாக உள்ளிழுக்கப்பட்டு ஜீவா காந்த சக்தியில் பதிய வைக்கப்படுகின்றன. நாம் ஏற்க்கனவே கண்ட பொருளை நினைவு கூறும்போது காந்தப்புலத்தில் முன்பு பதியவைத்திருந்த காந்த அலை மீண்டும் ஒளி அலைகளாக மாற்றப்பட்டு மீண்டும் பார்ப்பது போல் நினைவுக்குக் கொண்டு வருகிறது.
உதாரணமாக, நமக்கு பிடித்த நடிகரை அல்லது நடிகையை நினைக்கிறோம். அப்போது அவர்கள் நம் முன் இல்லை என்றாலும் ஜீவ காந்த கரு மையத்தில் ஏற்கனவே ஆழமாக பதிய வைக்கப்பட்ட ஒளி வடிவமானது மனத்திரைக்கு கொண்டுவந்து காண்பிக்கப்படுகிறது.
இதைப்போலவே ஒவொரு ஒளியும், ஒலியும் மற்றும் நிகழ்வுகளும் அப்படியே ஜீவ காந்த கருமையத்தில் பதியவைக்கப் படுகிறது. அதற்கேற்ற அலைவரிசையில் மனம் இயங்கும் போது ரேடியோவை tune செய்வது போல அந்த அலைவரிசையில் இருக்கும் எண்ணைகளை அந்தந்த மற்றும் அதற்குரிய வடிவத்திற்கு மாற்றி மூளைக்கும் மனக்கண்ணிற்கும் அனுப்புகிறது.
இந்த ஜீவ காந்த ஷக்தி எண்ணத்தை சுமந்து கொண்டு நமது உடலில் சுழன்று கொண்டிருக்கிறது. சுழன்று கொண்டிருக்கும் எந்த ஒரு பொருளிற்கும் நடுவில் மையம் ஏற்ப்படும் )center of gravity). எண்ணக்குவியலின் அந்த கரு மையத்தை தான் நாம் மனம் என்று கூறுகிறோம். அதை தான் ஆத்மா என்றும் கூறுகிறோம். ஆகா நாம் செய்த அனைத்து செயல்களின் பதிவுதான் ஆன்மா. இதைத் தான் கிருஸ்துவர்கள் soul is a data center என்று கூறுகிறார்கள். அனைத்து மதங்களும் ஒன்று தான் போலிருக்கிறது. மனம் தான் வேறு. :-)
புண்ணியத்தையும் பாவத்தையும் வேதாந்தமாக நினைத்துப் புறக்கணிக்க வேண்டாம். நமக்கும், பிற உயிர்களுக்கும் மற்றும் சமுதாயத்திற்கும் நன்மை பயக்கும் செயல் அல்லது கர்மா புண்ணியம் என்று அறிக. நமக்கும், பிற உயிர்களுக்கும், சமுதாயத்திற்கும் தீங்கு விளைவிக்கும் செயல் அல்லது கர்மாவானது பாவம் என்று அறிக. நமக்கு தீங்கு விளைவுக்கும் கர்மாவை நாம் ஏன் செய்யப்போகிறோம் என்று நினைக்கலாம். புகை பிடித்தாலும், மது அருந்துதலும் நமக்கு மேலும் சமுதாயத்திற்கும் தீங்கு விளைவிக்கும் கர்மா அல்லவா? அதனால் தான் என்னவோ மது அருந்துதல் பாவம் என்கிறது தர்ம சாஸ்த்திரம்.
இப்படி ஓவ்வொரு நற் கர்மாவும் முறையே சமூக சேவை, ஏழைகளுக்கு உதவுதல், தர்மத்தின் படி வாழ்தல், கொலை செய்யாமை, பொய் கூறாமை போன்ற அனைத்தும் காந்தப்புலத்தில் பதிவிடப்பட்டு சுழன்று கொண்டிருக்கிறது. அதைப்போன்று பேராசை, சினம், கடும் பற்று, வஞ்சம், முறையற்ற பால் கவர்ச்சி முதலான செயல்களால் தமக்கும் பிறர்க்கும் ஏற்ப்படும் விளைவுகளும் மற்றும் செயல்களும் காந்தப்புலத்தில் பதிவிடப்பட்டு சுழன்று கொண்டிருக்கிறது. உடலிலுள்ள எல்லா இடமும் ஜீவகாந்த சக்தியின் மூலம் எண்ணங்களால் நிரப்பப்பட்டிருப்பதால், நாம் நிம்மதியுடனும் ஆரோக்யத்துடனும் வாழ நல்ல செயல்களை மட்டுமே ஜீவ காந்தத்தில் பதிவிடவேண்டும்.
இப்படி சுழன்று கொண்டிருக்கும் ஜீவகாந்த-கருமையம் எனப்படும் ஆன்மாவானது, நம் உடல் அழிந்தவுடன் வெளியேறுகிறது. இதை நாம் மரணம் என்கிறோம். வெளியேறிய ஜீவா காந்தமானது தன் எண்ணப்பதிவுகளுக்கு ஏற்ற இன்னொரு உடலை தன்னிச்சையாகத் தேடுகிறது. நற் கர்மங்களை செய்த ஆன்மாவானது அதற்கேற்ற குடும்பத்தில் பிறக்கிறது. துர் கர்மங்கள் செய்த ஆன்மாவானது அதற்கேற்ற அலைவரிசையில் தேர்ந்தெடுத்து ஒரு தாயின் வயிற்றிலிருக்கும் சிசுவினுடைய உடலில் ஏழாவது மாதத்தில் புகுந்து எட்டாவது மாதத்தில் ஒன்றுபடுகிறது. இதை நாம் சீமந்தம் என்று கொண்டாடுகிறோம்.
உதாரணமாக நமது mobile phone னில் உள்ள buletooth எப்படி அதன் அலைவரிசைக்கு உட்பட்டிருக்கும் மற்றொரு bluetooth ஐ கண்டுபிடிக்கிறதோ. அதைப்போன்று ஆன்மாவும் தனக்கேற்ற பிறவியை அமைத்துக் கொள்கிறது. bluetooth எப்படி infrared ஐ தேர்ந்தேடுப்பதில்லையோ அதைப் போன்று நல்ல ஆன்மா கஷ்ட்டப்படும் உடலையோ அல்லது தீய ஆன்ம நல்ல உடலையோ தேந்தெடுக்க அதற்கு முடியும் ஆற்றல் இல்லை. இதைத்தான் கணிகன் பூங்குன்றனார் தீதும் நன்றும் பிறர் தர வாரா என்று கூறினாரோ.
ஏற்கனவே முற்பிறவியின் எண்ணப்பதிவுகள் இருப்பதால் அதற்கேற்ற திறமைகளும் அதில் இருக்கும். இதுதான் சில குழந்தைகள் சிறு வயதிலேயே அளப்பரிய திறமைசாலிகளாகஇருப்பதற்குக் காரணம்.
பூர்வ புண்ணியம் என்பது யாரோ ஒருவர் கணக்கு வைத்துக்கொள்வதாக மட்டும் அறியவேண்டாம். எங்கும் நீக்கமற படர்ந்திருக்கும் இறை ஆற்றலானது (ஈதர்) நமது உடலில் இருந்து (etheric body )கண்காணிப்பதால், பாவத்திற்கு தண்டனை நிச்சயம் என்று உணரவும்.
அற்ப உணர்வுகளுக்கு இடம் கொடுக்காமல், எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவெளியை அறிவால் உணர்ந்து நல்வினை புரிந்தால் மட்டுமே நற்கதியும் ஆரோக்யமும் கிடைக்கும். இல்லையேல் தற்பொழுது இப்பிறவியில் இனிமையாய் தோன்றினாலும், இப்பிறவியிலேயோ அல்லது மறுபிறவியிலேயோ தண்டனை நிச்சயம் என்பதை உணர்ந்தால் அமைதி கிடைக்கும். ஒழுக்கம் பிறக்கும்.
சூழ்நிலைகளினாலும், அறியாமையாலும் ஒழுக்கச்சிதறல் ஏற்படுவது இயற்கை. அவ்வபொழுது ஆறாம் அறிவை உபயோகித்து அகத்தாய்வு செய்து, பேராசை, சினம், கடும்பற்று, வஞ்சம், முறையற்ற பால் கவர்ச்சி போன்ற தீய குணங்கள் நம்மை அண்டாமல் காத்துக்கொள்ள வேண்டும். இது ஐந்தொழுக்கப் பண்பாடு என்று வேதாத்ரி மகரிஷியால் அமைக்கப்பட்டது. இந்த புண்ணிய பாவங்களின் விளைவையே விதி அல்லது ஊழ் என்கிறோம். ஊழ்வினை என்பது நாம் செய்தவினையே அன்றி மூட நம்பிக்கை அல்ல. ஊழ்வினை பற்றிய வள்ளுவரின் கருத்துக்கள்.
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும்.
பேதை ஆக்குவதற்கு உரிய விதி நமக்கு இருந்தால், நுட்பமான கருத்துக்களை உடைய பல நூல்களைக் கற்றாலும் இயல்பான அறிவே இருக்கும். ( அறிவு விரிவ பெறாது)
நல்லவை யெல்லாஅந் தீயவாந் தீயவும்
நல்லவாஞ் செல்வஞ் செயற்கு.
நாம் பணத்தைப் பெருக்க எடுக்கும் முயற்சியில் காலம், இடம், தொழில் ஆகியவை சரியாக இருந்தாலும், தீய விதி குறுக்கிட்டால் நட்டம் உண்டாகும். அவை சரியாக இல்லை என்றாலும் நல்ல விதி வருமானால் லாபம் உண்டாகும்.
பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம.எத்தனை காத்தாலும் நமக்கு விதி இல்லை என்றால், செல்வம் நம்மிடம் தங்காது. வேண்டா என்று நாமே வெளியே தள்ளினாலும் விதி இருந்தால் செல்வம் நம்மை விட்டுப் போகமாட்டாது.
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்.
விதியை வெல்ல வேறொரு வழியை எண்ணி நாம் செயற்பட்டாலும், அந்த வழியிலேயோ வேறு ஒரு வழியிலேயோ அது நம்முன் வந்து நிற்கும்; ஆகவே விதியை விட வேறு எவை வலிமையானவை?
ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்று மடி.
பணம் சேர்வதற்கு உரிய விதி நமக்கு இருந்தால், சேர்ப்பதற்கான முயற்சி உண்டாகும். இருப்பதையும் இழப்பதற்கான விதி இருந்தால் சோம்பல் உண்டாகும்.
இந்த ஒழுக்கமே பக்தியுள் மேன்மை. இறைநிலை. இவை என்னுடைய தனிப்பட்ட கருத்து. தவறிருந்தால் என் அறியாமையாகவும், புகழிருந்தால் என் குருவருள் எனக்கருதவும்.
நன்றியுடன்,
பாலாஜி
No comments:
Post a Comment