Pinjrapole - Cows are saved from being slaughtered by buying


I have been sharing many spiritual information with you all.  I'm happy that still people like you are there to listen and read such this topic.  In this current climate Speed of doing sins are very high enough to unknowing sins are being done.  I want all of you to consider this email is very important out of my all emails.   I'm going to tell you about a great place in chennai.


Pinjrapole is a heaven for disabled cows.  They are saving life of many disabled cows.  Cows that are sold to slaughterhouses are bought by some of the devotees of the Sufidar Trust and brought to Pinjrapole. Dry cows who are not in any condition to yield milk, stray cows and sick cows too are brought to this shelter. Surprisingly, even pregnant cows are neglected by their owners as they do not yield milk until they deliver. And sometimes they too are sold to slaughterhouses. Whenever such cases come to the notice of our Puj Dadaji through devotees or friends, the cows are saved from being slaughtered by buying them and bringing them to the Pinjrapole, where they can lead a peaceful life.
I request all of you to visit one time and offer whatever we can.  Even its two bananas or any  leafs.

Those who left doing Srardhdham or Tharppanam may go to this place and feed cows in the name of our ancestors. It would make them happy and we can attain their blessings.   But please don't come only for Pithur karma.  We can join hands with them to protect cows.

COW IS THE UNIVERSAL MOTHER. 
All the 14 worlds reside in cow (Sruti-Vedam).Cow is the chief source of nourishment of every being.  http://www.baba.org/why-cow-protection.html







The Madras Pinjrapole at Otteri shelters cows.  Cows at Pinjrapole are brought in by good hearted people who cannot see harm being done to these mute animals. But sympathy alone is not enough. Cows that are sick or neglected due to some reason, also have a right to live in dignity. Such heart rendering concern is shown by our beloved and Pujya Dada Ratanchandji, founder of the Sufi Dar Trust.  With his guidance, blessings and physical involvement to this noble cause, some devotees too have been active for this purpose.

         A devotee of SufiDar Trust, Shri Rajesh R. Raheja, appointed by Puj Dadaji, and a few workers of the Pinjrapole bathe these cows everyday. Everyday the cows are fed green grass, fodder, which consists of wheat bran husk, bengal gram husk, moong dal husk and orid dust. Occasionally they are also fed with jaggery, bananas and extract of gingelly oil which is very nutritious. The veterinarian at Pinjrapole attends to sick cows immediately and administers the medication.

Please don't watch this video if you are a soft-hearted.  But if you are dare and u want to watch, how cows are being hurt http://www.youtube.com/watch?list=FLKsQZMv2OrJtye66bpwPu9A&v=dflFzUrW2g0&feature=player_detailpage#t=384s

By

Balaji.

விதி

விதி என்பது என்ன? விதி என்பது உண்மையாக இருந்தால், எதன் அடிப்படையில் அது ஒவ்வொருவருக்கு ஒவ்வொருமாதிரி விதிக்கப்படுகிறது? 

விதி என்பதை தண்டனை என்று எடுத்துக்கொள்ளவும் முடியாது ஏனென்றால், நன்மைகளும் இதற்குள் அடங்குகின்றன. ஒருவனுக்கு உழைப்புக்கேற்ற ஊதியம்  கிடைப்பதில்லை. ஒருவனுக்குதஉட்கார்ந்த இடத்தில் பணம் கொட்டுகிறது.

ஒருவன் திருடுகிறான், ஒருவன் கொலை செய்கிறான். நீதி வழங்கும் போது இருவருக்கும் வேறு வேறு தண்டனை.  நான் இங்கு தீர்ப்பு என்ற வார்த்தைக்கு பதிலாக நீதி என்ற வார்த்தையை உபயோகித்ததற்கு காரணம் உள்ளது.  இருவரின் குற்றங்கள் வேறுவேறாக இருப்பதால் தண்டனையும் வேறு வேறு.   குற்றவாளிகளின் நன்நடத்தை காரணமாக, அவர்களின் தண்டனை குறைப்பதும் உண்டு.

மனிதன் வகுத்துள்ள சட்டம் இவ்வளவுதான்.  ஆனால் இறைவனின் நீதியில், குற்றம் செய்தால்  தண்டனை மேலும் நன்மை செய்தால் அதற்க்கேற்ப்ப பரிசும் உண்டு.  அவரவரின் செயல்களின் (கர்மா) அடிப்படையில் அவன் விதி (நீதி ) நிர்ணயிக்கப்படுகிறது.

நாம் சாப்பிடும் உணவு ஜீரனமாவதை அறிவியலின் அடிப்படியில் பிரித்தால், அது ஒரு மிக நீண்டநேர செயல்.  அனால் எல்லாம் ஒரு சில நிமிடங்களில் நடைபெறுகிறது. கணினியின் செயல்படும் அப்படித்தான்.  அதைப்போலவே நமது நல்வினை தீவினை அல்லது பாவபுண்ணிய கணக்கெடுப்பு கணக்கிடமுடியாத மிகக்குறைந்த கால மணி நேரத்தில் நடைபெறுகிறது.  நமது செயல்களுக்காக இறைவன் கொடுக்கும் பரிசையோ அல்லது நம்மை ஒழுங்கு படுத்தும் பொருட்டு தண்டிக்கும் விளைவை நாம் விதி என்ற பெயரில்  குறிப்பிடுகிறோம்.

இது இரண்டு கால இடைவெளியில் நடைபெறுகிறது.  ஒன்று  நாம் செய்யும் செயலுக்கு பரிசோ தண்டனையோ அது அப்பொழுதே. இது அதே பிறவியில் நடைபெறும்.  மற்றொன்று அடுத்த பிறவியில்.  நான் மறுபிறவி பற்றி இன்னொரு பதிவில் எழுதுகிறேன்.  

ஏன் இந்த இரண்டு கால இடைவெளி.  ஒரு பெண் நல்ல உயர்ந்த தர்ம காரியங்களையும், வேதோத்தமமான உன்னத செயல்களை மட்டுமே செய்கிறாள்.அதன் விளைவாக அவள் புத்திர சுகம் அடிய வேண்டும் என்று விதி.  புத்திர சுகம் என்றால் புத்திரனால் ஏற்படக்கூடிய சந்தோஷம்.  ஆக இவளது புத்திரன் உடல் ஆரோக்யத்துடன், சீரும் சிறப்புமாக இருக்கவேண்டும் .  இப்படி அதிஷ்டசாலியாக பிறந்த அந்த புத்ரன் அதர்ம கர்யங்களை செய்கிறான். பஞ்சமாக பாவங்களை செய்கிறான்.  இவனை உடனே தண்டித்தால் அப்பெண் தன்னுடைய புத்திரன் சோகப்படுவதால் தானும் சோகப்படுவாள்.  விதிப்படி அவள் சோகப்படக்கடாது.  இப்பெண்ணின் சுகத்திற்க்காக அவன் தண்டனை தள்ளிப்போடப்படும்.  அடுத்த பிறவியில் அந்த தண்டனையை அடைவதற்கேற்றார் போல் ஜாதகத்தில்  நவக்ரக சாரத்தில் ஜனிப்பான்.  இது சத்தியம். ஒருவன் நல்லதோ கெட்டதோ அவன் கர்ம வினையை அடைந்தே தீருவான்.  

மனிதனின் நீதித்துறையில் இன்னொரு மனிதனுடைய சாட்சி தேவை ஆனால்   இயற்கையில் நமது மனமே நமக்கு சாட்சி சொல்லும். நாம் தொடும் பொருட்களில் எல்லாம் நம் கை ரேகை பதிவது போல.  நம்முடைய ஒவ்வொரு செயலும் நம் ஆன்மாவால் பதிவுசெய்யப்படுகிறது. Soul is a Data Center என்கிறது கிறித்துவ மதம்.  உண்மையில் நம்மால் எதையுமே மறைக்க முடியாது.  

நன்னடத்தை மட்டுமே நல்வாழ்க்கைக்கு ஒரே வழி.   நம் விதிப்படி நாம் சோகமான ஒரு வாழ்வை பெற்றிருந்தாலும். நமது நன்னடத்தை மற்றும் தர்ம சிந்தனையின் காரணமாக நமது தண்டனை குறைக்கப்படும்.. அதாவது விதியும் மாறும்.

விதி என்பது ஒரு நீதி.  


BY
Balaji.


கடவுகளைக் கண்டுபிடித்துவிட்டார்கள் விஞ்ஞானிகள் !


என்னுடைய Blog ல் இறைவன்? பாவம்? புன்னியம்? மதம்? என்ற தலைப்பில் ஒரு Article எழுதி இருந்தேன்.  அதில் வேதாத்ரி மகரிஷியின்    இறைவனைப் பற்றிய கருத்துகளை குறிப்பிட நேர்ந்தது.  அக்கருத்து பின்வருமாறு.

"இறைவன் என்பவன் கண்ணுக்கு புலப்படாத அண்ட வெளியில் உள்ள நுண் துகள் என்று வேதாத்ரி மகரிஷி கூறினார்.  நம்முடைய அறிவும் ஆயுளும் இறைவனை உணர போதுமானது அல்ல. 

பல ஆண்டுகளுக்கு முன் ரிஷிகள் உணர்ந்த இந்த மெய்ஞானத்தை, இப்பொழுது விஞ்ஞானிகள். God Particle என்று கண்டறிந்திருக்கிறார்கள்  .  அந்த செய்தி yahoo News  website ல் இடம் பெற்றிருந்தது. Please click these links.  



ஆய்வின் தமிழ் விளக்கம் பின்வருமாறு;



கடவுகளைக் கண்டுபிடித்துவிட்டார்கள் விஞ்ஞானிகள் ! இந்தத் தலைப்பே ஒரு ஆச்சரியமாக உள்ளது அல்லவா ? கடவுள் எங்கே இருக்கிறார் என்று கேட்டால் அவர் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்பார்கள் ! துரும்பு என்பது ஒரு துகள் ஆகும். துகளில் காணப்படுவது அணுவாகும். இந்தப் பிரபஞ்சம் தூசுத்துகள்களால் நிரப்பப்பட்டுள்ளது. இவைகளில் காணப்படும் அணுக்களில் ஒரு சக்தி மறைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அணுவுக்கு நிறையைத் தரக்கூடியதாகக் கருதப்படும் கண்ணுக்குத் தட்டுப்படாத ஹிக்ஸ் போஸான் (Higgs Boson) எனப்படும் நுண் துகள் உண்மையிலேயே இருக்கிறது என்பது ஊர்ஜிதமாகியுள்ளதாகத் தெரிகிறது.



இது தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ள விஞ்ஞானிகள் நேற்று முந்தினம் (புதன்கிழமை) முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இந்த அறிவிப்புக்காக உலகமே ஆவலோடு காத்துக் கொண்டிந்தது. ஹிக்ஸ் போஸான் என்பது எல்லா அணுக்களுக்குள்ளும் இருப்பதாகக் கருதப்படும் ஒரு சப்-அடாமிக் பார்ட்டிகிள். ஆனால், அதை யாரும் பார்த்தும் இல்லை, அது இருப்பதாக நிரூபித்ததும் இல்லை. ஆனால், இந்த துணைத் துகளை கணக்கில் எடுத்துக் கொள்ளாவிட்டால் இந்த பிரபஞ்சம் உருவானது தொடர்பாக சொல்லப்படும் கோட்பாடாக முழுமை பெறுவதும் இல்லை. கிட்டத்தட்ட பிளாக் ஹோல், டார்க் மேட்டர் மாதிரி இது ஒரு கோட்பாடாகவே இருக்கிறது.



இப்படி கண்ணுக்குப் புலப்படாத இந்த அதிசயத்தைத் தான் விஞ்ஞானிகள் கடவுளின் அணுத் துகள் (God s particle) என்கிறார்கள். இந்தத் துகள் இருப்பதாக முதலில் சொன்னவரான ஒருவரான (பீட்டர்) ஹிக்ஸ்சின் பெயரையே அதற்கு வைத்துவிட்டார்கள். கூடவே போஸான் என்ற பெயரும் இருக்கிறதே. அது மாபெரும் இயற்பியல் வல்லுனர் சத்யேந்திர நாத் போஸின் பெயரிலிருந்து வந்தது. அதாவது சப் அடாமிக் பார்ட்டிகிள் எனப்படும் அணுவில் உள்ள துணைத் துகள்களில் 2 வகை உண்டு. ஒன்று நமது போஸ் மற்றும் ஐன்ஸ்டீனின் கோட்பாடுகளுக்குள் அடங்கும் துகள்கள். அவற்றுக்குப் பெயர் தான் போஸான் .

(இந்த கோட்பாடுகளுக்குள் அடங்காத துகள்களுக்கு பெர்மியான் (fermions) என்று பெயர். அதைப் பற்றி சமயம் வரும்போது பார்ப்போம். இப்போ வேணாம்!).

இவ்வாறு போஸான் கோட்பாடுகளுக்கு, விதிகளுக்கு உட்பட்ட துணைத் துகள்களில் முக்கியமானவை photons, gluons மற்றும் ஹிக்ஸ் போஸான் ஆகியவை. இதில் போட்டான், குளுயான்கள் இருப்பதை நிரூபித்தாகிவிட்டது. ஆனால், ஹிக்ஸ் போஸான் இன்னும் விஞ்ஞானிகளுக்கு விக்கல் தந்து கொண்டே இருக்கும் ஒரு ரகசியமாகவே உள்ளது. இந் நிலையில் தான் இதைக் கண்டுப்பிடித்தே தீருவது என்ற முடிவில் களத்தில் குதித்தனர் உலக விஞ்ஞானிகள். பிரான்ஸ்-சுவிஸ் எல்லையில் ஜெனீவா அருகே ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம் (CERN) அமைத்த மாபெரும் வட்ட சுரங்கத்தில் இந்த சோதனை நடந்து வருகிறது.

சோதனை என்றால் நாம் சினிமாக்களில் பார்ப்பது மாதிரி ஒரு டெஸ்ட் டியூபில் 2,3 கலர் கலர் திரவங்களைக் கலந்துவிட்டு அதே வேக வைத்து, வடிகட்டி.. ரசம் தயார் செய்வது மாதிரியான சமாச்சாரமல்ல இது. பூமிக்கு அடியில் சுமார் 27 கி.மீ. வட்டப் பாதைக்குள் (Large Hadron Collider-LHC) புரோட்டான்களையும் நியூட்ரான்களையும் ஒளியின் வேகத்தில் பயங்கரமாக மோதவிட்டு அலற வைக்கும் அடாவடியான விஷயம் இது. 1,800 சூப்பர் கண்டக்டிங் காந்தங்களின் உதவியோடு வினாடிக்கு 600 மில்லியன் முறை புரோட்டான்- நியூட்ரான் கதிர்கள் எதிரெதிர் திசையில் நேருக்கு நேர் மோதி அவை குவார்க், பெர்மியான், குளுயான்ஸ், போட்டான், மின் காந்த கதிர்வீச்சு, வெப்பம் என சிதறின.

கூடவே புரோட்டான்களுக்குள் இருந்த ஹிக்ஸ் போஸானும் எட்டிப் பார்த்ததாக சொல்கிறார்கள் ....

2008ம் ஆண்டு செப்டம்பரிலேயே இந்த சோதனைகளுக்கான ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கிவிட்டன. விஞ்ஞானிகள் 2 குழுக்களாகப் பிரிந்து இந்த சோதனையை நடத்தினர்.

ஒரு குழுவுக்கு அட்லஸ் (A Toroidal LHC Apparatus) என்று பெயர். இன்னொரு குழுவுக்கு சிஎம்எஸ் (Compact Muon Solenoid) என்று பெயர். ஒரு குழுவுக்குக் கிடைக்கும் ரிசல்டை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளவே இந்த இரு குழுவினரும் தனித்தனியே இந்த சோதனைகளை நடத்தினர். 2008ம் ஆண்டிலேயே ஆரம்பகட்ட வேலைகள் தொடங்கினாலும் உண்மையான சோதனைகள் ஆரம்பித்தது 2010ம் ஆண்டு மார்ச் இறுதியில் தான். ஆனால், சோதனைகள் நடக்க ஆரம்பித்தவுடனேயே ஆராய்ச்சிகளுக்கும் சோதனை வந்துவிட்டது. ஆராய்ச்சிகள் நடக்கும் சுரங்கத்தில் குளிர்விப்பான்கள் செயல்படுவது பாதிக்கப்பட்டதால், அதை சரி செய்து சோதனைகளை ஆரம்பிக்க மேலும் ஓராண்டு தாமதம் ஆகிவிட்டது. குளிர்விப்பான்களை ரிப்பேர் செய்ய ஒரு வருஷமா என்று கேட்கலாம்.

LHCயின் உள் வெப்பநிலை -271.3 C. ஹீலியம் வாயு உதவியோடு கிரையோஜெனிக் சிஸ்டத்தை பயன்படுத்தி இந்த குளிர்ச்சியை ஏற்படுத்தப்பட்டது. காரணம், புரோட்டான்கள் மோதும்போது சூரியனின் வெப்பத்தை விட 100000 மடங்கு வெப்பம் உருவாகும். அதை குளிர்விக்கவே இத்தனை ஜாக்கிரதை. இவ்வளவு டெக்னிகலான விஷயத்தில் ரிப்பேர் வந்தால் சரி செய்ய ஒரு வருடம் ஆகாதா! எப்படியோ இந்த ஆராய்ச்சி மூலமாக ஹிக்ஸ் போஸானை விஞ்ஞானிகள் பார்த்துவிட்டார்கள் அதுதான் இப்போ வெளியான உண்மை.

சரி இனி கடவுள் உள்ளார் என்பதனை விஞ்ஞானிகள் எவ்வாறு நிருபிக்கிறார்கள் என்று பார்போமா ?

13750 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பிக்-பேங்க் எனப்படும் பெரு வெடிப்பின்போது வாயுக்கள் உருவாகி பின்னர் அதில் உள்ள அணுக்கள் ஒன்றிணைந்து பிரபஞ்சமும், அதில் உள்ள மற்ற பொருட்களும் உருவானதாக விஞ்ஞானம் கூறுகிறது. எலெக்டிரான், புரோட்டான், நியூட்ரான் என்ற 3 உட்பொருட்களின் சேர்க்கைதான் அணு. இந்த அணுக்களின் சேர்க்கைதான் வெவ்வேறு திடப்பொருட்களாக ஆகி உள்ளன. நாம் வாழுகிற பூமி, நம்மைச் சுற்றிலும் இருக்கிற டி.வி, செல்போன், மேஜை, நாற்காலி, பேனா, மோட்டார் வாகனங்கள், கம்ப்யூட்டர் இப்படி எல்லாமே அணு சேர்க்கையில் உருவானவைதான். இவற்றைப் போலவே எல்லாம் ஒன்றிணைந்த இந்த பிரபஞ்சமும் அடிப்படையில் அணுக்களின் சேர்க்கைதான்.

அணுக்களை சேர்க்கும் ஒட்டுப்பொருள் எது என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் இருந்தது. அணுக்களை ஒன்றோடு ஒன்று ஒட்டவைக்கும் பொருள் என்ன என்பதை கண்டுபிடித்தால், பிரபஞ்சம் உருவான ரகசியத்தை அறிந்துகொள்ள முடியும் என்பதால், அதை கண்டுபிடிக்க ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த கடவுள் துகளை கண்டறியும் முயற்சியில் தற்போது விஞ்ஞானிகள் வெற்றியடைந்துள்ளனர். அணுக்களை ஒன்றோடு ஒன்று ஒட்டவைக்கும் கண்ணுக்குத் தெரியாத சக்தியை தான் கடவுள் என்கிறார்கள் பல விஞ்ஞானிகள். ஆனால் அந்த சக்தியை தற்போது பார்த்துவிட்டார்கள் விஞ்ஞானிகள். இதனால் கடவுளைப் பார்த்ததுபோல அவர்கள் துள்ளிக்குதிக்கிறார்கள்.

நன்றி: தமிழ் டெக்

By  

Balaji.

கர்மவினைகள் உண்டா? அது நம்முடைய வாழ்வில் பிரதிபலிக்குமா?


கர்மவினைகள் உண்டா?  அது நம்முடைய வாழ்வில் பிரதிபலிக்குமா?
ஒருவன் ஏன்  கை கால்கள் பாதிக்கப்பட்டு பிறக்கவேண்டும்?  மற்றொருவன் ஏன் WWE ல் வெற்றிபெறும் அளவிற்கு கை கால்கள் பலம் பொருந்தியவனாக பிறக்கவேண்டும்?

நாம் ஏன் சோமாலயா போன்ற இடங்களில் பிறக்கவில்லை? அங்கு உணவின்றி இறந்தோர் ஏன் அங்கு பிறந்து இறக்க வேண்டும்?

ஒரு முனையில் Google Glass Project.  மறுமுனையில் பிறவிக்குருடர்கள்.  ஏன் ?

ஒருவனுக்கு பசித்தால் குடும்பமே பதறுகிறது.  மற்றொருவனின் பிணத்தை கிருமிகள் புசித்தால் கூட அதை அகற்ற ஆளில்லை  ஏன் ?

ஒருவனுக்கு குளிப்பதற்கு செயற்கைக் குளம்.  ஒருவன் ஒரு குடம் தண்ணீர் எடுக்க ஒரு நாளுக்கு மேல் செலவிடுகிறான். ஏன்?

சொல்லிவைத்தார் போல் சில குடும்பங்களில் அடுத்தடுத்த துர்மரணங்கள்.  (ராஜீவ் காந்தி). ஏன் ?

இரட்டை உடம்பாகப் பிறக்கும் குழந்தைகளை மருத்துவர்கள் சவாலாக எடுத்து காப்பற்றுகிரார்களே?  அவர்களின் பருவ காலங்கலில் அவர்கள் எப்படி திருமணம் செய்துகொள்வார்கள்?  ஒன்றுக்கு இரண்டாய் உயிரைக் கொடுத்து சுகத்தைப் பறிப்பது ஏன் ?

மணமகள் கழுத்தில் தாலி ஏறியவுடன் உயிரை விட்ட கணவன் எந்தனை பேர்?  சமீபத்தில் மணமகளைத்தவிர குடும்பத்தில் உள்ள அனைவரும் இறந்துவிட்டார்கள். ஏன்?

பொதுவாக சுற்றுலா செல்லும் குடும்பத்துக்கு மட்டும் சொல்லிவைத்தார்ப் போல் ஆபத்து.  ஒன்று குடும்பத்தோடு மாய்கிறார்கள் இல்லை ஒருவன் மட்டும்  காப்பாற்றப்படுகிறான். ஏன் ?

என்னுடைய கேள்விகளுக்கு இந்த வலைத்தளம் போதாது எனும் அளவிற்கு எனக்கு கேள்விகள் எழுகின்ற ஒரு சிந்தனையில் நான் பிறந்தது ஏன் ?

இதைப்பற்றி எவ்வளவு எடுத்துரைத்தாலும் அதை புரிந்துகொள்ளும் ஆர்வம் இல்லாமல் இன்னொருவன் - ஏன் ?

AR Rahman னுக்கு ஏன் கிரிக்கெட்டில்  ஆர்வம்  இல்லை?  சச்சினுக்கு ஏன் இசை அமைப்பதில் ஆர்வம் இல்லை. ஒருவேளை என்னைப் போன்று எல்லோரும் இப்படி எழுதிக்கொண்டிருந்திருந்தால், இந்த கணிப்பொறியை யார் கண்டுபிடித்திருப்பார்?  ஒருவேளை ஆன்மீகத்தில் ஆர்வம் இல்லாதவர்களும் இந்த உலகத்திற்கு வேண்டுமோ?

அப்படியானால் நாத்திகர்களும் இறைவனால் வேண்டுமென்றே  படைக்கப்பட்டவர்களா?

நாம் விரும்புவது கிடைப்பதில்லை.  கிடைத்த வெற்றிகள் நாம் விரும்பி கேட்டதில்லை. ஏன் ? தீதும் நன்றும் பிறர் தர வாரா என்ற கணிகன் பூங்குன்றனாரின் பொருள் இது வோ  :)

ஏன் நமது புராணங்களில் எல்லாம் இப்பிறவி போதும் இனிபிறவி வேண்டாம் என்கிறார்கள்? ஏன் வேதாந்தங்களை எழுதிய அவர்களுக்கு நமக்கிருக்கும் அறிவும் துணிவும் கூடவா இல்லை??

நமக்கு பிடித்த உணவு உடலுக்கு கேடு விளைவிக்கும்.  நல்ல உணவு பெரும்பாலும் ருசி உடையதாக இல்லை.  நாம் கடினமாக உழைத்தால் உடம்பு ஆரோக்கியம் பெறுகிறது சுகமாக இருந்தால் சுகர் வருகிறது.  நாம் இந்த பூமிக்குள் வருவதே கஷ்டப்படுவதர்காகவா?  ஏன் இவ்வாறு அமைந்திருக்கிறது? இதியெல்லாம் யாரேனும் அமைத்தார்களா ?

அழகிய பூவில் மணம் இல்லை.  மணக்கும் பூ மிகவும் எளிமையாக இருக்கிறதே ? ஏன்.  பூவும் மனிதனை போலத்தானோ?? :)

இதற்கெல்லாம் நமக்கு பதில் தெரிந்தால் கர்ம வினை கிடையாது  இல்லையென்றால் ?

America கண்டறியப் பட்டதற்கு முன்பு, நமக்கு America என்றால் என்ன தெரியும்?
ஒன்று உண்மை.   கண்டுபிடிக்கப்படாத பொருளெல்லாம் இந்த உலகில் இல்லை என்று வாதடுவது அறிவீனம்.

 ரிமோட்டில் இருந்து செல்லும் கதிர்களை நம் கண்களால் உணர முடியவில்லை.  அது இல்லை என்று கூறுவதில்லை.  ஏன் என்றால் அதன் விளைவுகளை TV மூலமாக காட்டுகிறது.   ஒருவேளை பிறந்ததிலிருந்தே TV பார்க்காத ஒருவன் அதை  நம்பமுடியுமா?
TV என்ன என்று அறியாதது அவன் குற்றமா?

 அறியாதவனின் அறியாமைக்குப்பின்னும் ஒரு காரணம் இருக்கிறது.  இவற்றை அறிந்தவர்கள் உணர்வார்கள். ஆனால் அறிந்தவர்களை அறியாதவர்களால் உணர முடியாது.  அறிந்தவர்களையே உணரமுடியாது என்றால் அறிந்தவர்கள் உணர்ந்ததை இவர்கள் உணர்வது கடினம்.
ஆன்மிகம் தெரியாதவனை, ஆன்மீகவாதிகள் அறியாதவன் என்று கூறுவார்கள்..

அறிவியல் தெரியாதவனை, விஞ்யானிகள் அறியாதவர்கள் என்று கூறுவார்கள்.
அறிந்தவன் ஒன்றை அறியாதிருப்பன், அறியாதவன் பலவற்றை அறிந்திருப்பான்.


நாம் எப்படி அறிந்துகொள்வது என்று யோசிக்க வேண்டுமே தவிர.  வீண் விவாதத்தை தவிர்க்க வேண்டும்..  யாரையும் தாழ்த்தி பேசக்கூடாது..

ஏனென்றால் அறிந்தவர்களும் அறியாதவர்களும் இவ்வுலகிற்கு முக்கியம்.  உண்மை இப்போதுமே குழப்பமுடையது.  குழப்பமுடையதை உணர்ந்தால் நம் தெளிந்துவிடலாம். 


By
Balaji

இறைவன்? பாவம்? புன்னியம்? மதம்?



ஒருவன் எதை உபாசிக்கிறானோ அதை அடைவான். இதை ‘தத்க்ரது’ என்று பிரம்ம சூத்திரம் கூறுகிறது. பரம் பொருள் என்னும் அந்த முழு முதற் கடவுளைத் தியானித்து மும்மூர்த்திகளில் ஒருவரை உபாசித்தால் முக்தி கிடைக்கும். வேத மதத்தில் பிற மூர்த்திகளை உபாசித்தாலும், முடிவில் இந்த மும்மூர்த்திகளுக்குத்தான் ஒருவன் செலுத்தப்படுவான். அவையெல்லாம் பரிவார தேவதைகள். சிவன் அல்லது விஷ்ணுவுடன் சேர்பவர்கள். அவர்கள் மூலம் முக்திக்கு வழி பிறக்கும். என்கிறது பிரம்ம சூத்திரம்.

இறைவனை விஸ்வம் என்று வேதம் கூறுகிறது.  விஸ்வம் என்றால் எங்கும் இருப்பவர் அண்டம் என்று பொருள்.  எங்கும் நிறைந்திருப்பவர் எல்லா மதத்திலும் நிறைந்திருப்பார்.  நாம் எந்த ரூபத்தில் அவரை வணங்கினாலும் தவறில்லை.

பெற்றோர்களை பேணல், பெண்களை மதித்தல், விதவைக்கு நல்ல எண்ணத்துடன் உதவுதல்,  நன்னடத்தை, ஒழுக்கம், தர்மத்தில் நிலைத்தல், முக்கியமாக ஆபத்தில் இருப்பவனுக்கு உதவுதல் அல்லது கருணையோடு இருத்தல், ஜீவா காருண்யம், நல்ல செயல்களுக்கு உதவுதல்   இவை ஒருவனிடம் இருந்தால் அவன் கடவுளை வணங்கினாலும் வணங்கவிட்டலும் அவனுக்கு இறைவனின் அருள் உண்டு என்பதை உணரவேண்டும்.

எல்லா மதங்களும் தர்மத்தை போதிக்கின்றன, அதர்மத்தை தூஷிக்கின்றன. ஒழுக்கத்தை வலியுறுத்துகின்றன.  இந்துக்கள் பாவங்களை  கர்மவினைகளாகவும் . கிருத்துவர்கள் சைத்தான்களாகவும் ஒவ்வொரு மதமும் வேறு பெயரில் அழைக்கிறார்கள். சந்த்யா வந்தனமும், கிருத்துவ ஜபமும், முஸ்லிம் தொழுகையும் போய் சேருவது ஒருவனையே என்பது என்னுடைய கருத்து.

பிற மதங்களையும், அவர்களின் நம்பிக்கையையும் தூஷிப்பது, எங்கும் வியாபித்திருக்கும் இறைவனை தூஷிப்பதர்க்கு சமம் என்பதை உணர்ந்து, இறைவனை வணங்குவதிலும் ஒரு ஒழுக்கத்தைக் கடைபிடிப்போமேயனால் நிச்சயம் முக்தி கிட்டும். 

நீதி, நேர்மை, தர்மம் இவைகளே இறைவனின் ரூபம்.  இவைகளை வடிவ மாக்கியும், இல்லாமலும், அல்லது இவைகளை கடைபிடித்தும் விஸ்வத்தை அடைய முடியும். இறைவன் என்பவன் கண்ணுக்கு புலப்படாத அண்ட வெளியில் உள்ள நுண் துகள் என்று வேதாத்ரி மகரிஷி கூறினார்.  நம்முடைய அறிவும் ஆயுளும் இறைவனை உணர போதுமானது அல்ல.  நாம் செய்யும் நற்காரியங்கள் புண்ணியங்கள் என்று அழைக்கப்படுகின்றன.  அவைகள் இப்பிறவியிலோ அடுத்த பிறவியிலோ நமக்கு வேத சூட்சுமத்தை அறிய வழிவகுக்கும் என்பதை உணர்ந்து, புன்னியம் செய்வோமேயானால் இம்மையில் நாம் செய் பாவங்கள் மன்னிக்கப்பட்டு சுகமாக வாழ வாய்ப்புள்ளது.

நாம் எண்ணத்தில் உணர்ந்தும், தெரிந்தும் செய்யும் பாவங்கள், நமது மூலையில் பதிந்து, ரத்தத்தில் கரைந்து, சுக்லத்தில் ஊடுருவி, பெண்ணின் வயிற்றில் சென்று குழந்தையாகப்பிறக்கும்.  எண்ணத்தின் வடிவமே செயல்கள் என்பதை நாம் உணர வேண்டும்.  அதைத்தான் அப்பா செய்த பாவம் குழந்தைக்கு என்று கூறுகிறார்கள். பெண்களுக்கும் அவ்வழியே என்பதை உணரவும்.

இதைப்போன்று தான் புண்ணியங்களும் சத் புத்திரனாகப் பிறந்து நம்மையும் நம் வம்சத்தையும் சுகத்தில் திழைக்கவைத்து முக்திக்கு வழிவகுக்கும்.

எப்படி தகப்பனின் வியாதிகள் குழந்தைக்கு வருகிறதோ அவ்வழியே பாவ புண்ணியங்களும் என்பதை உணராமல் இருப்பது மிகப்பெரும் அறியாமை.  வியாதிக்கு மருந்துண்டு, இல்லை விதண்டாவாதத்திற்கு. 

இறைவன் என்பவன் கிரீடம் சூலம் வைத்துக்கொண்டு மேலே உட்கார்ந்து கொண்டு தண்டிப்பவனோ, இல்லை வெள்ளை ஆடை உடுத்திய படி வரம் தருபவனோ, இல்லை நிலவின் பிறை போன்று அழகு கட்சிதருபவனோ மட்டும் இலன். இவைகள் நம்முடைய எல்லைகள் . அவன் எல்லை அற்றவன். சிறியதாகவும்.  பெரியதாகவும் இருப்பவன்.  நீரும் நெருப்பும் ஆனவன்.   வெற்றிடமாயும்  நிரம்பியவனாகவும் இருப்பவன். ஆக எல்லாம் அவன். இதைத்தான் வேதம் கூறுகிறது விஸ்வம் (சர்வமும்) என்று.  எல்லாவற்றிலும் அவன் இருப்பதால், நாம் எதையும் மறைக்க இயலாது.  நாம் நீரில் செய்யும் பாவத்தை நீராய் நின்று உணர்வான்.  யாரும் இல்லை என்று வெற்றிடத்தில் பாவம் செய்தால் வெற்றிடமாகவே இருக்கிறான் என்பதை உணர வேண்டும்.

நாம் எந்த அதர்மத்தை மறைக்க நினைக்கிறோமோ, நினைக்கும் போதே அவ்விஷயம் உலகிற்குப்புலப்பட வேண்டிய காரியங்களை நம்மூலமகவே செய்கிறான்.  இதைத்தான் குற்றவியல் கூறுகிறது எந்த குற்றவாளியும் அவனுக்குத்தெரியாமல் ஒரு தடயத்தை விடாமல் போகமாட்டன் என்று.
ஆனால் நாம் மறைக்க நினைப்பது நல்ல  விளைவுக்ககவோ, உலக நன்மைக்காகவோ என்றால்  உடன் இருந்து மனுஷ்ய ரூபத்தில, அமானுஷ்ய ரூபத்திலோ நமக்கு உதவுவான்.

 நீ எப்பொருளில் அதர்மம் செய்கிறாயோ, அப்போருளாக மாறி அவன் தண்டனை அளிப்பான்.  எடுத்துக்காட்டிற்கு ஒருவன் மற்றொருவனின் போனை திருடுகிறான் என்றால், திருடும் மாத்திரத்தில் சுகமாக தோன்றினாலும் அந்த போனே அவனின் அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணமாகிவிடும். அவனுக்கு காலம் வரும் போது   அந்தபோனின் மூலமாகவே அவனது மற்ற அனைத்து திருட்டுகளும் புலப்படும்.  இதெல்லாம் சூட்சுமம்.  எல்லாம் இயற்கையின்  தர்மம்.  இறைவனை ஆண்பாளிட்டும் பெண்பாளிட்டும் கட்டுப்படுத்த முடியாது.  அவன் பெயர் தர்மம்.  அவன் விரும்புவதும் தர்மம்.  அவனின் ரூபமும் தர்மம் . நற்காரியங்களின் ரூபம் அவன். நல்லோர்களின் ஆன்மா அவன்.  உயிருள்ளவையாவும் உயிரற்ற்றவையாவும் விளங்குபவன். 

விதுரநீதி கூறுகிறது;
மாடு மேய்ப்பவன் தன் மாடுகளை வழிநடத்துவதர்க்கு குச்சியை வைத்து அடித்து திருத்துவதைப்போல தேவர்கள் ஸ்தூலமாக (நேராக) எதையும் செய்வதில்லை.
தேவர்கள் ஒருவனை தண்டிக்க வேண்டுமென்றாலும், ஆசிர்வதிக்க வேண்டுமென்றாலும் அவன் புத்தியை  சூட்சுமமாக  (மறைவாக) இயக்குகிறார்கள்.  தண்டிக்க வேண்டுமென்றால் எதிர்மறையாகவும் ஆசிர்வதிக்க வேண்டுமென்றால் நேர்மறையாகவும் நம்முடைய புத்தியில் கைவைக்கிறார்கள்.  

விநாச காலே விபரீத புத்தி  என்பார்கள்.  நம்முடைய மனம் கெட்டதை விரும்பும்போது நமக்கு காலம் சரியில்லை  என்று உணர்து புலன்களை அடக்கி இறைவனை த்யாநித்தால் நன்மை ஏற்ப்படும்.  இல்லையென்றால் பாவம் செய்து அறிவை இழந்து, தேஜஸ் மங்கி மேலும் மேலும் பாவம்  செய்யத்தூண்டும்.  பாவத்தின் சம்பளம் மரணம் என்று ஆயுசும் குறையும்.  இது எல்லாம் போதாது என்று சந்ததியே சீரழியும்.

தர்மத்தை கடைபிடிப்பவன், வேதத்தை நம்பவில்லை என்றாலும், இறைவனை நம்பாவிட்டாலும், ஹோமம், யாகம், கிருத்துவ ஜபம், தொழுகை செய்யவில்லை என்றாலும் அவனை இறைவன் நாத்திகனாகக்கருதுவதில்லை.  இறைவனே தர்மம், தர்மமே இறைவன் ஆகையால் அவன் இறைவனுடன் அனுதினமும் இருக்கிறான்.  நமது அனைத்து மத நடவெடிக்கைகளும், ஒழுகு முறைகளும் தர்மத்தை நிலை நாட்டவே ஆகும்.

இப்போது சொல்லுங்கள் நமக்கு மதம் ஒரு தடையா?   நல்ல ஆச்சார்யன் தெய்வ விலாசன் என்பார்கள். நான் ஆச்சார்யன்  அல்லன் ஆனால் என்னால் தெய்வத்தை என்னுடைய எழுத்தில் காட்ட முடியும் என்று நினைக்கிறேன்.

நான்  அனுபவத்தில் உணர்ந்த கருத்துக்களையும்  நான் வலைத்தளங்களில் கண்ட கருத்துக்களையும் ஒருங்கிணைத்து எழுதியிருக்கிறேன்.  என்னுடைய அனைத்து சிந்தனைகளையும் இங்கு எழுத கால அவகாசம் இல்லை.  எழுத்துப்பிழை பொருட்பிழை இருப்பின் மன்னிக்கவும்.

Written By
Balaji.