தவம்/Meditation


தீட்டா' அலையிலும், 'ஆல்பா' அலையிலும் விழிப்பு நிலையிலேயே இருக்கப் பழகிக் கொண்டோமானால், மற்றவர்களுடைய எண்ண அலைகள் தீமை விளைவிப்பனவாக இருந்தாலும், உணர்ச்சிக்கு ஊக்கம் கொடுப்பவையாக இருந்தாலும் அவை நம்மைப் பாதிக்கா.


உதாரணமாக நான்கு வானொலி நிலையங்கள் நான்கு விதமான வேறு பட்ட நிகழ்ச்சிகளை ஒரே நேரத்தில் ஒளிபரப்புகின்றன. நம் ரேடியோவை எந்த அலை நீளத்தில் வைக்கிறோமோ அது மாத்திரம் தான் கேட்கும். மற்றவை எல்லாம் வந்து மோதும்; ஆனால் கேட்காது. அது போலவே, தேவையற்ற அலைக் கழிப்பும் பாதிப்பும் இல்லாமல் விட்டு விலக  எந்த நிலையில் இருக்கிறோமோ அந்த நிலைக்கு ஏற்ப நமக்கு என்ன தேவையோ அது கிடைக்கும். நாம் என்ன செய்ய வேண்டுமோ அதை நினைப்போம். நாம் என்ன நினைக்கிறோமோ அதைச் செய்ய முடியும் என்ற அளவிலே மனிதத் திறமை வெளிப்படுகிறது. 


இந்த மனிதத் திறமை அதிகரிக்க அதிகரிக்க என்ன ஆகும்? நாம் எங்கு போனாலும், நமக்காக மற்றவர் தாமாகவே அந்த அலையிலேயே கட்டுப்பட்டு, நம் மதிப்பை உணர்ந்து புரிந்து கொள்ள அவர்களுக்கு எண்ணம் தோன்றும். எங்கே போனாலும் நமக்கு வெற்றியாகவே இருக்கும்.

அப்படி எங்கேயாவது வெற்றி இல்லாமல் தடை ஏற்பட்டாலும், அந்தத் தடையினால் நமக்குக் கெடுதல் இல்லை. "நம்மைத் திருப்பி விடுவதற்காக இந்த அலை நீளத்தில் தேவையில்லாதவற்றைத் தள்ளி விடுகிறது. அதனால் அந்த வேலை நடக்கவில்லை" என்று எண்ணி அமைதி அடைந்தால், எந்தக் காலத்தில் எந்த சூழ்நிலையில் அந்த வேலை நடக்க வேண்டுமோ அது தானாகவே நடந்துவிடும்.

"படிக்கும்போது தவம் செய்யலாமா; இரவில் செய்யலாமா?" என்றெல்லாம் கேட்பார்கள்.  தவத்திற்குக் காலமும் வேண்டியதில்லை; திசையும் வேண்டியதில்லை.

அறிவை, விரிவான பிரபஞ்ச இணைப்போடு இணைக்கக்கூடிய ஒரு பயிற்சிதான் தவம். அதற்கு கால நேரம் பார்க்க வேண்டியதில்லை. எந்தக் காலத்திலேயும் செய்யலாம். அதையெல்லாம் உணர்ந்து, நீங்கள் எவ்வளவு தூரம் ஆழ்ந்து தவம் செய்து வருகிறீர்களோ, அந்த அளவுக்கு, விவகாரங்களில் ஏற்படக்கூடிய சிக்கல்களை அறுத்துக் கொள்ளவும், தெளிந்த நிலையிலே அந்தச் சிக்கல்களை தீர்த்துக் கொள்ளவும், சிக்கல் வராமல் காத்துக் கொள்ளவும் வேண்டிய விழிப்பு நிலையை இந்தத் தவம் உங்களுக்குக் கொடுக்கும்.

கிரகணம் எப்படி உண்டாகிறது? அந்த நாட்களில் நோன்பு, தியானம் செய்வது ஏன் ?


சூரியன் வேகமாக சுற்றிக் கொண்டிருக்கிறது. அப்போது heavier elements எல்லாம் நடு மையத்திற்கு சென்றுவிடும் என்று ஓரளவுக்கு எல்லோருக்கும் தெரியும். Particle movement குறைந்தால்தான் ஒன்றோடு ஒன்று நெருங்கி இணைய முடியும்; heavier element ஆக மாறும்.

அப்படி வரும்போது ஒரு குறிப்பிட்ட இடம் வந்தது என்றால் அதற்கு மேலே அசைய முடியாமல் அந்த சுழல் வேகமே நின்று போகிறது. சுழல் வேகமே நின்று போனால் "கரு அணு" என்று சொல்லக்கூடிய Nucleus-க்கு இயக்கமே இல்லை. Nucleus நின்று போய்விட்டால் உடனே அதை சுற்றி வந்து கொண்டே இருக்கும் electron, proton எல்லாம் ஓட ஆரம்பிக்கும். ஓட ஆரம்பித்தால் அதுதான் அணுச்சிதைவு.

அந்த அணுச்சிதைவு ஏற்பட்ட உடனே கரு அணு நின்று போய், அதே போல பக்கத்தில் ஒன்று நின்று போய், இதே மாதிரி கோடான கோடி அணுக்கள் அழிந்தன. அங்கு இருந்த கரு அணு எல்லாம் வெட்ட வெளியாக, அந்த வெட்ட வெளியை "Black-spot in the Sun" என்று சொல்கிறோம். அதாவது சூரியனில் கரும்புள்ளி என்று தோன்றும் வெட்டவெளி.

சூரியனுடைய இயக்கத்தில் வெட்டவெளி நிற்க முடியாது. அதனால் மையத்தில் ஏற்பட்டபோதும் இரண்டு பக்கமும் பீறிட்டுக்கொண்டு வெளியே வந்து பிரபஞ்சமெல்லாம் கடந்து, கோடு போல சென்று சுத்த வெளியோடு கலந்து விடுகிறது. அதனால்தான் அந்த கிரகங்களை எல்லாம் spiritual கிரகங்கள், ஆன்மீக கிரகங்கள் என்று சொல்வது.

ராகு-கேது என்றால் இப்போது விஞ்ஞானிகள் சொல்கிறார்களே Black-hole அதுதான் ராகு-கேது. சூரியனின் நடுமையத்திலிருந்து உற்பத்தி ஆகக்கூடிய அந்த Black-hole இரண்டு பக்கமும் பீறிட்டுக்கொண்டு வந்து எப்போதும் அதை கடந்து கொண்டே இருக்கிறது. அதற்கு நேராக சந்திரன், பூமி, சூரியன் இது மூன்றும் வரும்போது அந்த மறைவு சரியாக வந்து விடும்.

ஒவ்வொரு மாதமும் மூன்றும் ஒன்றாகத்தான் வருகின்றன; கிரகணம் வருவது இல்லை. ராகு-கேது என்ற அந்த Black-hole நேரில் வருகின்றபோதுதான் அந்த மறைவு உண்டாகிறது. உடனே "கிரகணம்" என்று சொல்கிறோம். சூரியனை மறைக்கும்போது நேரடியாக அந்த இடத்தில ராகுவோ கேதுவோ அந்த ஓட்டம் இருக்குமானால், அதன் பெயர் "சூரிய கிரகணம்"; அல்லது பூமி வந்து சந்திரனுடைய ஒளியை மறைக்குமேயானால் அது "சூரிய கிரகணம்".

சந்திரனை பூமி மறைக்கும் போது, அதாவது பூரண சந்திரன் தினத்தில் நடு மையத்தில் பூமி நிற்கும்; அதனால் பூமி சூரியனிலிருந்து வரக்கூடிய வெளிச்சத்தை மறைத்துவிடும். அந்த மறைவு சந்திரன் மேல் படுகின்றது. அதுதான் "சந்திர கிரகணம்". அதுவும் ராகு-கேது என்ற Black-hole-க்கு நேரில் வந்தால்தான் அந்த மறைவு தெரியுமே தவிர மற்றபடி மறைப்பது இல்லை. ஆகையினால் ஒவ்வொரு மாதமும் ராகு பிடித்து விட்டது, இது ஒரு பாம்பு என்று சொல்வார்கள். நீளமாக வருவது எல்லாம் பாம்பு என்று சொல்லிக்கொள்வது நமது வழக்கம். 

இதனால் சூரிய ஒளி, சந்திர ஒளி பாதிக்கப்படும்போது நம் உடலில் உள்ள ரசாயனம் magnetic force வித்தியாசப்படும். அந்த மாறுதல் ஏற்படும்போது நமது உணவு செரிமானமாகின்ற முறை குறைவாக இருக்கிறது. அந்த நேரத்தில் தெய்வீக நினைவு அல்லது வேறு எதாவது சங்கற்பம் செய்வது நல்லதே. அப்படி இல்லாமல் இஷ்டம்போல் சுற்றும்போது உடல் உறவு கொள்ள நேரிடும். அந்த நேரத்தில் விளையக் கூடிய குழந்தை கேடுற்ற உடலும் மனமும் உடையதாக இருக்க கூடும் என்பதை நாமே யூகித்துக் கொள்ளலாம். ஆகவே, இத்தகு விபத்துக்களை தடுப்பதற்காகவே அந்த நாட்களை விரத நாட்களாக ஆக்கி வைத்திருக்கின்றனர்.

கிரகண நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது நல்லது. இதனால் உடலினுடைய சக்தி அழிவு இல்லாமல் immunity அப்படியே காப்பாற்றப்படும்.

கிரகணம் முடிந்து குளிப்பது என்பது எப்பொழுதும் குளிப்பது போல்தான். அப்பொழுது குளிக்காமல் போனால் ஒன்றும் இல்லை. தூய்மை வேண்டும் என்று எடுக்கும்போது எதற்குமே குளித்துவிட்டு செய்வது ஒரு சடங்குதான்.

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் 
வெறும் எண்ணம் மட்டும்தானே, நான் என்ன செயலிலா இறங்குகிறேன்? என்று ஒரு தீய எண்ணத்திற்கு இடங்கொடுத்து விடக் கூடாது. விளைவுக்கு அஞ்சி, அந்த எண்ணத்தின் வழி நீங்கள் செயலில் இறங்காமல் இருந்து விடலாம். ஆனால் அந்த தீய எண்ணம் திரும்பத் திரும்ப உங்கள் மனதில் தோன்றிச் செயலாக உருப்பெற உங்களிடத்திலேயே வேட்கையையும், உந்துதலையும் தோன்றச் செய்து, செயலாக மாற்றம் பெற முனையும். எனவே எப்போதும் நல்லவற்றையே எண்ணிக் கொண்டிருக்க வேண்டும்.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி