ஸ்ருஷ்டியில் உயிரற்ற்ற பொருள் என்று உலகத்தில் ஒன்றுமே இல்லை என்பது என்னுடைய தனிப்பட்ட சிந்தனை. சிந்தனை தான் இன்னும் தெளிவு பெறவில்லை. உயிரற்ற்ற பொருள் என்றால் அதற்க்கும் இயங்கும் தன்மை உள்ளது. உயிருள்ள நம்மீது தாக்கத்தை ஏற்ப்படுத்தும். என்னுடைய குருநாதர் சொல்லுவார், பிரமத்தை உணர்ந்தவன் யார் என்றால், பிரமத்தை முழுமையாக அறிய முடியாது என்று எவன் உணர்கிறானே அவன்தான் என்பார்.
உயிரற்ற்ற பொருள் எப்படி, உயிருள்ள நம்மீது தாக்கத்தை ஏற்ப்படுத்தும்?
உதாரணத்திற்கு, டேவிட்டின் காலில் இந்த கண்ணாடித் துண்டு குத்தட்டும் என்று பஞ்சபிகேச அய்யர் டேவிட்டின் வீட்டு வாசலில் போடுகிறார். வெளிநாடு சென்ற பஞ்சபிகேச அய்யர் , 6 வருடம் கழித்து திரும்பி வருகிறார். டேவிட்டின் காலில் குத்தியதோ இல்லையோ, சர்வநிச்சயமாக பஞ்சபிகேச ஐயரி ன் காலை காயப்படுத்தக் காத்துகொண்டிருக்கும். இந்த கருத்து அற்த்தமுள்ள இந்துமதம் என்ற கண்ணதாசனின் படைப்பில் படித்தது. இதைப்போன்று மரம், செடி, கொடி, கல், பாறை, மலை, குகை எதுவானாலும் நம்முடைய செயலுக்கேற்ப நம்மிடம் வினைகளையும் விளைவுகளையும் தோற்றுவிக்கும். இது ஒரு கணிப்பொறி Program போன்று தானாக இயங்கும். ஒவ்வொரு செயலையும் உற்று நோக்குவதன் மூலமாகதான் இதைப்போன்ற விளைவுகளை உணரமுடியும். Discovery channel பார்த்தீர்கள் என்றால், ஒரு ஏறும்ம்பை மட்டும் தொடர்ந்து சென்று, அதன் ஒவ்வொரு அசைவுகளையும் உற்றுநோக்கி, அதற்கிடையில் இருக்கும் அன்பையும், சுறுசுறுப்பையும், கோபத்தையும், பகைமையையும் தெளிவகக்காட்டுவார்கள். ஏறும்பைப்போன்று ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கூறுவார்கள். அதை உற்று நோக்கினால் தான் தெரியும், அதனிடத்திலும் சில நேரங்களில் ஒற்றுமை இல்லை என்று. நன்றாக கவனிக்கவும் சில நேரங்களில்.
உற்று நோக்கினால், தெளிவு பெறலாம். ஒரு பொருளின் மூலமாகவோ, ஒரு நபரின் மூலமாகவோ நமக்கு நன்மையோ அல்லது தீமையோ ஏற்ப்படும் பொழுது, அதனை உற்று நோக்கி, அந்த பொருள் அல்லது நபருக்கும் நமக்கும் என்ன தொடர்பு. என்றைக்காவது நாம் அந்த நபருடனோ அல்லது அப்பொருளுடனோ தொடர்பு கொண்டோமா என்று சிந்தித்து பார்த்தால் நமக்கு ஏற்ப்படும் நன்மைக்கும் தீமைக்கும் நாம்தான் காரணம் என்பது நமக்கு புலப்படும். தொடர்பில்லாமல் இவ்வுலகத்தில் எந்த செயலும் நடப்பதில்லை. 10 வயது பையனுக்கு தெரிவதில்லை தனக்கு 20 வயதிற்கு மேல் ஆனவுடன், ஒரு பெண் வாழ்க்கை துணைவியாக தேவைப்பட வேண்டும் என்று. ஆனால் இயற்க்கை இந்த ஜாடிக்கேற்ற ஒரு மூடியை வேறு ஒரு முனையில் வளர்த்து வருகிறது. காலத்தால் இவர்கள் இருவரும் எங்கிருந்தாலும், தக்க சமயத்தில் ஒன்று சேர்க்கப்படுகிறார்கள். இதை இயற்க்கை என்றும் ஆண்டவன் என்றும் காற்றில் உள்ள ஈதர் என்றும் திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது மேலும் என்னவெல்லாம் பெயரிட முடியுமோ, மனிதன் பெயரிடுகிறான்.
திருமணத் தடையோ தாமதமோ ஏற்படுகிறது என்றால் அதற்குரிய வினப்பதிவுகளைத் தான் நாம் இந்த பிரபஞ்சத்தில் பதித்திருப்போம் என்று உணர்வது மட்டுமல்லாமல்,மனம் தளராமல் மேலும் முயற்ச்சியை கைவிடாமல் மற்ற கடமைகளில் முழுமையாக கவனம் செலுத்தவேண்டும். நாம் செய்த வினைகளுக்கு ஏற்ப பிரபஞ்ச ஷக்தி ஒரு nokia கருவியைப் போன்று செயல்படுகிறது. Connecting People. திருமணத்திற்கு மட்டும் அல்ல. நம் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு செயலும் நாம் யாருடன் இருக்கிறோம் என்பதை பொறுத்துதான் நம்முடைய எதிர்காலம் . நன்றாக bike ஓட்டும் ஒரு நண்பன் உங்களுக்கு இருந்தால், அவனுடைய திறமைகளில் முக்கால் பங்கு உங்களை அறியாமல் ஆட்கொள்ளும். அது போன்று தான் எல்லாம். இயற்க்கை connect செய்வது ஒருபுறம் இருந்தாலும் நாம் நல்ல திறமைசாளிகளியும் effective people யும் நம் அருகில் வைத்துக்கொள்ள வேண்டும். அது நிச்சயமாக நம்மை நல்வழிப்படுத்தும். The 7 habits of highly effective people ebook சமயம் கிடைக்கும் பொழுது இந்த புத்தகத்தை படிக்கவும். மனம்தான் எல்லாவற்றிற்கும் காரணமாக இருப்பதால் தான் அஹம் பிரம்மம் என்று ரிஷிகள் கூறினார்களோ?
காந்தப்புலத்தில் ஊசியை போன்று பதியப்பட்ட oஒலிக்கற்றைகளை நாம் எப்போது வேண்டுமானாலும் திரும்பக்கேட்கலாம். அதை நாம் CD என்றும் கேசட் என்றும் அழைக்கிறோம். நாம் பூமி என்னும் இந்த காந்தபுலத்தில் ஓட்டிக்கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து, நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் இங்குதான்
பதிந்திருக்கிறது. அதன் விளைவை நாம் திரும்பித் திரும்பி அனுபவிக்க வேண்டும். எப்படி ஒரு bluetooth device இன்னொரு bluetooth device ஐ அதன் அலைவரிசைக் கேற்ப detect செய்கிறதோ அதைப்போன்று நாம் இந்த காந்தப்புலத்தில் பதித்த அனைத்து செயல்களும் நம்மையே தொடரும். அதைத்தான் ரிஷிகள் கர்மா என்றார்களோ?
ஸ்ருஷ்டியில் உள்ள அனைத்து பொருட்களையும் உற்று நோக்கினால் ஒன்று புறியும். எல்லா பொருட்களும் அதன் தன்மைக்கேற்ப ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாக அழிந்து கொண்டு இருக்கும்.
ஒவ்வொரு அணுத்துகள்களின் கூட்டு சேர்க்கையே ஒரு பொருளுக்கு உருவத்தை கொடுக்கிறது. நம் உடலும் அப்படித்தான். இடைவிடாது அணுச்செல்களை அழித்துக்கொல்வதால் தான் ரேடியம் ஒளிர்கிறது. கற்களும் மண் துகள்களும், தூசிகளும்........ அணுச்சிதைவுக்கு உட்படுகின்றன. ஏன் நமது உடலும் அணுச்சிதைவுக்கு உட்படுகின்றன. மீண்டும் அணு சக்தியினை காற்றில் உள்ள ஈதரில் இருந்து எடுத்துக்கொள்கிறது. இளமையில் அணுச்சிதைவுக்கு ஏற்ப உடலானது அணு சக்தியினை காற்றில் உள்ள ஈதரில் இருந்து எடுத்துக்கொள்கிறது. முதுமையில் அணுச்சிதைவு அதிகமாகவும், ஈதரில் இருந்து கிடைக்கும் அணு சக்தி குறைவதால் உறுப்புகள் தேய்கிறது. உடல் உயரம் குறைகிறது. முடிவில் உடல் அழிகிறது. அதை நாம் மரணம் என்று பெயரிடுகிறோம். எந்தப் பொருளும் நிரந்தரமாக இருக்க முடியாது என்பதற்காகத்தான் இந்த அணுச்சிதைவு என்னும் நிகழ்வு ஏற்ப்பட்டுள்ளதோ? இதை அழிதல் என்று கூறுவதா அல்லது அழித்தல் என்று கூறுவதா? படைத்தல், காத்தல், அழித்தல். Respectively பிரம்மா, விஷ்ணு, சிவன். இந்த ஆற்றலைதான் சிவன் என்று உணர்ந்தார்களா ரிஷிகள்?
இன்னொன்று ஸ்ருஷ்டியில் உள்ள எந்த பொருளையும் நம்மால் அழிக்க இயலாது. பரிணாமத்தால் அது வேறு பொருளாக மாறுமே தவிர, அழிவதில்லை. ஆகவே ஒன்றை அழிப்பதே இன்னொன்றை ஆக்குவதற்காகவா? அப்படியானால் சிவனையும் எமனையும் கண்டு பயப்படவேண்டாம் போலும். தண்ணீரை எடுத்துக்கொள்வோம். தண்ணீரை அழித்தால் என்ன ஆகும்? அதன் இறுதி நிலை ஆவியாகும். அது அழிந்து விட்டது என்று எடுத்துக்கொள்ள முடியுமா? பரிணாமத்தால் ஆவியானாலும் மீண்டும் நீராக பூமியை அடைகின்றது. ஒருவேளை இதுதான் மறுபிறவி தத்துவமா. சாஸ்திரத்தில் சொன்ன விஷயம் என்னவென்றால் ஒவ்வொன்றும் ஒரே நிலையில் இருந்து ஏற்ப்படுகிறது, மீண்டும் அதேநிலைக்கு செல்கிறது அதை நாம் அழிவு என்கிறோம். நீர்மத்திலிருந்து அக்னி உண்டாகிறது. பெட்ரோல் என்னும் நீர்மம் அக்னியை ஏற்ப்படுத்தும். எரியும் அக்னியின் ஆவியை சுருக்கி நீர்மமக்கலாம். ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினை உண்டு என்பது உங்களுக்குத் தெரியும்.
ஒன்று புரிகிறார்ப் போல் தோன்றுகிறது. நமக்கு அப்பாற் பட்ட ஒன்று இதையெல்லாம் திட்டமிட்டு ஏற்படுத்தியிருக்கிறது. ஒருவேளை ரிஷிகள் எல்லாம் அவரைத்தான் கடவுள் என்கிறார்களா? அந்தகால அசுரர்களை அழிக்க சிவனுக்கு ஈட்டி போதுமானதாக இருந்தது. இந்த காலத்திற் கேற்ப A-K 47 வைத்துக்கொண்டால் என்ன தவறு? நமக்குத் தான் A-K 47 னுடன் இருக்கும் சிவனை ஏற்றுக்கொள்ளும் மனநிலை இல்லை. நான் என்ன செய்வேன், A-K 47 னுடன் இருக்கும் சிவன் மேல் எனக்கு பக்தி ஏற்ப்படவில்லை. புனிதமான கடவுளை ஒருநிலையில் உணர்ந்த மனதுக்கு வேறு நிலையில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தீமைகளையே அதிகமாக நினைத்தது மட்டுமல்லாமல் அதை நடைமுறைப்படுத்தியும் வந்த மனதுக்குள் திடீரெண்டு நன்மையை நினை என்றால் அது எப்படி இயலும்? பாவம் அந்த மனம், அவனிடம் மாட்டிக்கொண்டு சித்ரவதை அடைகிறது. மனதை கவனிக்க வேண்டும். மனது ஒரு குழந்தை போன்றது. நீ எதையெல்லாம் கற்றுக்கொடுக்கிறாயோ அதையெல்லாம் செய்யும் சுபாபமுடையது. நம்மை ஸ்ருஷ்டித்த இறைவனை நம் மனதில் சிருஷ்டித்தது நம் மனம் தான். இதைத்தான் அஹம்ப்ரஹ்மாஸ்மி என்று கூறினாரோ ரமணர்.
இயற்கையை உணர முடியவில்லை ஆனால் வெற்றிக்கு என்ன வழி?
நான் புதிதாக ஒன்றும் சொல்லப்போவது இல்லை.
ஸ்ருஷ்டியில் நாம் வசிக்கும் நாடு ஒரு புள்ளி. அதில் நம் நகரம் ஒரு புள்ளி. அந்நகரத்தில் நாம் ஒரு மிக மிக சிறிய புள்ளி என்பதை உணரவேண்டும். ஆனவம் அகற்றி அறிவை வளர்க்க வேண்டும். வெற்றிபெற்ற மனிதர்களின் மனதை ஆராய்ந்து தெளிவடைதல். நிரந்தர வெற்றி பெற்ற மனிதனின் மனம் கண்டிப்பாக அறிய வேண்டிய ஒன்று. நான் பெரியவன் என்பது தவறில்லை. அவனும் என்னைப் போல் பெரியவன் என்பது அமைதிக்கு வழி. துன்பத்தை தவிர்க்க முடியாது ஆனால் மனதை அறிவதே துன்பத்தைத் துடைக்க வழி. எதிலும் மிகவும் மகிழ்ச்சியோ, எதை நினைத்தும் பெரிய துக்கமோ கொள்ளாதிருத்தல். எல்லாம் அழிந்து மட்ட்றொன்று பிறக்கும். என்று உணர்தல். நல்லதையே சிந்தித்தல் தான் வெற்றியின் ரகசியம். நமக்கு எது நல்லதோ அதை நாம் சிந்தித்தல். ஒரு விவசாயிக்கு நல்லது விளைச்சல். ஒரு வர்த்தகருக்கு நல்லது வியாபாரம் etc. மனதை பத்திரமாக பார்த்துக்கொள்ளுதல். மனது நன்றாக இருந்தால் உடல் முதற்கொண்டு எல்லாம் நலமாக இருக்கும். தீமைகளும் நன்மைகளும் யாராலும் எவருக்கும் கொடுக்க இயலாது. நமக்கு நாமே நம் மனதில் ஏற்படுத்திக்கொண்ட வினைப்பதிவுகள் என்று உணர்தல். இது போன்று பல உள்ளன. இதை அடிப்படையாகக் கொண்டு நம்மை நாம் செம்மைப்படுத்திக்கொள்ளலாம்.
Violance is against violance in inevitable and right situation is nonviolance. இது தான் மகாபாரதத்தின் சாரம் (Extract). எதையும் தூஷிக்காமல் அறிய முயற்சிசெய்தால் அறிவு பிறக்கும். இல்லை என்றால் அமைதி கெடும்.
நான் கற்றதையும், கேட்டதையும் அக்ஷர மாலையாக தொடுத்துள்ளேன். இதில் நிறை இருப்பின் குருவருள் என்றும் குறையிருப்பின் அடியேனின் அக்ஞானம் என்றும் கொள்ளவும்.
வாழ்க வளமுடன்.
By
Balaji.
அருமையான பதிவுக்கு வாழ்த்துகள்..
ReplyDelete