இனிமையான மனதின் ஆற்றலை உணராமல் மேற்கொள்ளும் இறை பக்தியானது, ஒரு சடங்கை நிறைவேற்றுவதைப் போன்று கடமையாகவும், சரிவர செய்து முடிக்க வேண்டும் என்ற கடமை நோக்கத்தோடு முடிவுற்றுவிடும். மனம் தான் எல்லா செயல்களுக்கும் காரணம் என்பது வெறும், ஊக்குவிக்கும் பொருட்டோ அல்லது சூழ்நிலையை அல்லது இயலாமையை நமக்கு சாதகமாக்கவோ மட்டும் சொல்லப்படுவது கிடையாது. மனம் என்பது ஒரு மாபெரும் இறை சக்தி.
எடுத்துக்காட்டாக, ஒரு கிராமத்தில் உள்ள பெண், செங்கல்லில் மஞ்சளைப் பூசி அலங்கரித்து குங்குமமிட்டு அச்செங்கல்லை இறைவடிவமாகப் பார்ப்பாள். இந்த கர்மாவானது அவளது ஆழ்மனதில் பதிவிடப்படும். ஒருநாள் குங்குமமோ அல்லது மஞ்சளோ இல்லாத போது, அவளது ஆழ்மனது அவளிடம் கேள்வி எழுப்ப ஆரம்பிக்கும். சந்தனம் எங்கே? குங்குமம் எங்கே என்று? இந்த இரண்டும் தான் அவளது திருப்தியை தீர்மானிப்பதாக, அவளே ஏற்படுத்திக் கொண்டது. அதில் ஏற்ப்படும் குறைவானது, அவள் மனதில் நெருடலை ஏற்படுத்தும்.
மன நெருடல் என்பது வெறும் உணர்வு மட்டும் அல்ல. இது மூளையில் சில மாற்றத்தை உண்டாக்குகிறது. கடவுள் பக்திக்கும், மனதிற்கும் மிக மிக நெருங்கிய தொடர்பு உண்டு என்பது நம்மால் உணரப்பட்ட விஷயம்.
இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், இறைவனிடம் வேண்டுதலிலும் கவனமாக இருக்க வேண்டும் என்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள். இறைவனிடம் வேண்டும் வார்த்தைகள் மனதில் பதிகின்றது. அதுவும் ஆழ்மனதில்.
மனித மூளையின் அமைப்பு வலது இடது என்று இரண்டு அரைக்கோளங்களாக. படைக்கப்பட்டிருக்கிறது. அவை வலது பக்கத்து மூளை, இடது பக்கத்து மூளை.இடது மூளை நாம் விழிப்பு நிலையில் இருக்கும் பொழுது கண், காது முதலான புலன்களை அடிப்படையாகக் கொண்டு விழிப்பு நிலையில் மட்டும் செயல்படுகிறது. இதனை நினைவு மனம் Conscious Min, Rational Mind, Objective Mind, Waking Mind, Surface Mind, Voluntary Mind, Male Min என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. இது அன்றாட வேலைகளை கவனமாகச் செய்யவும், கணக்கு போன்ற நுணுக்கமான கவனமாகச் செய்யவேண்டிய வேலைகளை செய்கிறது.
வலது மூளையானது பதிவு செய்யும் வேலையை செய்கிறது. இடது மூளை தரும் தகவல் சரியானதாக இருந்தாலும், தவறானதாக இருந்தாலும் அதை அப்படியே பதிவு செய்கிறது. நிஜமான அனுபவமாக இருந்தாலும், கற்பனையான அனுபவமாக இருந்தாலும் அதை அப்படியே பதிவு செய்கிறது. இதை ஒரு Memory Bank என்று கூறலாம். விழிப்பு நிலையிலும் உறக்க நிலையிலும் எல்லா நேரத்திலும் செயல்படுகிறது. மேலும் வலது மூளை உடலின் எல்லா இயக்கங்களையும் கட்டுப்படுத்துகின்றது. இதை ஆழ்மனம், Sub Concious Mind, Subjective mind, Sleeping Mind, Deep Mind, Involuntary Mind, Female Mind என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது..
காயேன வாசா மனசேந்த்ரி யைர்வா புத்யாத் மனாவா ப்ரக்ருதிஸ்வபாவாத் கரோமி யத்யத் சகலம் பரஸ்மை நாராயணா யேதி சமர்பயாமி.
இது ஒரு சம்ஸ்க்ருத ஸ்லோகம். பூஜை முடிந்தவுடன், நான் உடலாலும், மனதாலும், இந்த்ரியங்களாலும், புத்தியாலும் செய்த தவறுகள் அத்துனையையும் நாராயணனுக்கே அர்பணிக்கிறேன். என்று பொருள்.
காயம் - உடம்பு,
மனசேந்த்ரி- மனது மற்றும் இந்த்ரியம்
அதென்ன புத்தி? மனதும், புத்தியும் வேறு வேறா? வலது, இடது மூளை போலும்.
ஒரு பூஜை செய்யும் பொழுது திருப்தி ஏற்படவேண்டும் அதுதான் மன அமைதியும், அதனால் ஏற்படும் நல்ல அதிர்வுகள் நல்ல விளைவை ஏற்படுத்தும் என்பதை ரிஷிகள் உணர்ந்திருந்தார்கள்.
இந்த சம்ஸ்க்ருத ஸ்லோகத்தை சொல்லும் பொழுது, சிறிது தண்ணீரை உள்ளங்கையில் ஏந்தி, நாராயணா யேதி சமர்பயாமி என்று சொல்லும்போது பூமியில் விட்டுவிடுவார்கள். இந்த செய்கையால் நம் ஆழ்மனது நாம் சொன்ன சொல்லை அப்படியே பதிவு செய்துவிடும் அதையே நம்பியும் விடும்.
நாம் பூஜை செய்யும் பொழுது, தவறுதலாக, நம் வாயிலிருந்து உமிழ்நீர், ஸ்வாமிக்கு சமர்ப்பணம் செய்யும் நெய்வேதினத்தில் பட்டுவிட்டதோ என்ற சந்தேகத்தினால் ஏற்ப்பட்ட நெருடலை, இந்த காயேன வாச்சா என்ற ஸ்லோகம் lஆழ்மனதின் பதிவில் இருந்து delete செய்துவிடும். Asserting comments பற்றி மனோதத்வப நிபுணர்கள் சொல்வதை கேள்விப்பட்டிருக்கலாம்.
மாம்சம் சாப்பிட்ட அன்று கோவிலுக்குள் செல்லாதவர்களும் உண்டு, மம்சத்தையே இறைவனுக்கு சமர்ப்பணம் செய்பவர்களும் உண்டு. சாராயம் குடிக்கவைக்கப்படும் ஸ்வாமிகளும் உண்டு என்பதை நாம் யோசிக்க வேண்டும்.
சில சம்ஸ்க்ருத ஜோதிஷ சாஸ்திரம் கூறுவது என்னவென்றால், விதிப்படி நாம் அனுபவிக்க வேண்டிய சில இன்ப துன்பங்களை, நாம் கனவு நிலையில் அனுபவித்து விடுகிறோம் என்று. நான் இங்கு ஒரு Positive Example ஐ குறிபிடுகிறேன். ஒரு சாதாரண ஏழை பெண்ணிற்கு ஒரு கோடி ரூபாய் ஒரேநாளில் கிடக்க வேண்டும் என்பது விதி. ஆனால் ஏதோ சில காரணத்திற்காக இயற்க்கை கொடுக்கவேண்டாம் என்று தீர்மானித்தால், விதிப்படி கிடைக்க வேண்டிய பணத்தை கனவில் நிகழவைக்கும் என்று ப்ருஹத் சம்ஹிதை கூறுகிறது. கனவில் ஏற்ப்பட்டாலும் உணர்வின் தாக்கம் மட்டும் நிகழ்காலம் போலவே இருக்கும் . இதைப்போன்று பல செயல்களை ஊகித்தரியவும் .
இன்றைய பதிவின் நோக்கம் என்ன? மனதில் நெருடல் ஏற்ப்படவில்லை என்றால் அது தவறு அல்ல என்பதா? ஒரு கொலைசெய்வதால் மனதில் நெருடல் ஏற்ப்படவில்லை என்றால் அது தவறாகாது என்று தீர்மானிக்க இயலாது. நெருடல் ஏற்ப்படாததற்கு காரணம் அவன் ஆழ்மனதில் ஏற்படுத்திக்கொண்ட பழக்கம்.
இன்றைய பதிவில் நான் கூற வருவது;
மனதை புரிந்துகொண்டால் இறைவனை புரிந்துகொள்ளலாம். இறைவனை மட்டும் தெரிந்தவர்கள். ஒரு கற்பனை கதாப்பாத்திரத்தை உருவாக்கியவர்கள். அவர்கள் நம்பிக்கை நிலையானதாக இருக்காது. தோல்வியினால் இறைவனை நிந்திக்க முற்படுவார்கள். இவர்களில் சிலர், இறைவனை பாதியில் விட்டுவிடுவார்கள்.
புவி காந்தப்புலத்தில் இது சரி இன்னது தவறு என்று Program செய்யப்பட்டுள்ளது.
இயற்கைக்கு நாம் செய்வது தவறா அல்லது சரியா என்பதை உணர ஏற்கனவே ஒரு Database உள்ளது. நாம் செய்வது சரி அல்லது பாவம் அல்லது உலக நன்மைக்கு எதிர்மறையானது என்று எப்படி Database இல் இருந்து match செய்து retrieve செய்கிறத?. உலகமக்கள் அனைவரின் மனதையும் படிக்lகவேண்டும் என்றால் அது எந்த மொழியில் உள்ளது? மேலும் database எந்த மொழியில் உள்ளது? அந்த universal language எது.? மனித மனம் கதி வீச்சுகளால் உணரப்படுகிறது.
மனிதர்களின் மன இயக்கத்தை ஆல்பா (∂) பீட்டா(β) தீட்டா (σ) டெல்டா(δ) என்று நான்கு நிலைகளில் இயக்குவதாக சித்தர்களும், ஞானிகளும் அறிவியலார்களும் அறிந்து கூறுகிறார்கள். நாம் அன்பு, பாசம், நட்பு, பொறாமை, என்று ஒவ்வொரு உணர்விலும் இந்த combination னில் கதிவீச்சுகளை வெளியிடுகிறோம்.
ஆல்பா நிலையில் மன இயக்கம 8 முதல் 12 சுற்றுகளுக்குள்ளும் (Cycles/Sec)
பீட்டா நிலையில் 13 சுற்றுகளுக்கு மேலும்
தீட்டா நிலையில் 4 முதல் 7 சுற்றுகளுக்குள்ளும்
டெல்டா நிலையில் 3 சுற்றுகளுக்கும் கீழாகவும் 1/2 சுற்று வரையிலும் மனம் இயங்குவதாக குறிப்பிடுகிறார்கள்.
பீட்டா நிலை என்பது விழிப்பு நிலை. உணர்ச்சிவயப்பட்ட மனம் வேகமாக இயங்கும் நிலை (Active and Agitated State)
ஆல்பா நிலை என்பது விழிப்பும் உறக்கமும் அற்ற தூங்காமல் தூங்கும் தியான, மோன நிலை (A Hypnotic State)
டெல்டா என்பது சமாதி நிலை.
நமது மனம் ஒரு Local Database. அதை ஒரு anti virus மூலம் பாதுகாக்க வேண்டும். Server ருடன் Syc ஆன பிறகுதான் விளைவு புலப்படும். நிம்மதி தான் ஆல்பா மனதை தீர்மானிக்கிறது. நன்னடத்தையுடன் நேர்மையாக வாழ்வதை விட ஒரு எளிமையான வழி இல்லை. இதை தவறாமல் செய்தால், நாம் எதையும் சென்று ஆழ்மனதில் பதிக்க வேண்டாம். நல்லது தானாக பதியும்.
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்.
நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று .
தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற
தீயார்சொல் கேட்பதுவும் தீதே - தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது.
என்று வாழ்ந்தால், மங்களம், செல்வம், மகிழ்ச்சி எல்லாம் கிட்டும்.
ஆல்பா நிலையின் ஆற்றலை அடுத்த பதிவில் எழுத சங்கல்ப்பம் செய்துள்ளேன். ஆல்பா நிலைக்கும் வேதம் கூறுகிற சந்தியா வந்தனத்திற்கும் என்ன தொடர்பு? சந்தியா வந்தனம் அந்தணர்களுக்கு மட்டும் உரியது அல்ல என்பது பற்றியும் சிந்திக்க இருக்கிறேன்.