நன்மையாயும், தீமையாயும் நீயே ஒன்றினுள் ஒன்றாய் மறைந்தாய்.



நன்மையாயும், தீமையாயும்  நீயே ஒன்றினுள் ஒன்றாய்  மறைந்தாய்.

எமக்கென்ன வேண்டுமோ, அதை அளிக்கத்  தான் அனைவருமாய் பறந்து  விரிந்தாய். .

நான் என்ன கற்க வேண்டுமோ, அதைக் புகட்ட முடிந்த மனிதனாய் எம் அருகில் பிறந்து வளர்ந்தாய்.

தண்டிப்பதும்,  வாழ்த்துவதும் இங்கு நோக்கம் அல்ல என்னை பக்குவப்படுத்துவதே  தான் உன் நோக்கம் போலும்.

நடப்பதில் இருந்து நான்  கற்கிறேனா ? இல்லை நான் கற்கவே நீ  நாடகத்தை நடத்துகிறாயா ?

நேற்று நடந்த நாடகத்தின் நண்பன் இன்று பகைவன்.

இன்று நடக்கும் நாடகத்தின் நண்பன் எதை கற்பிக்க பகைவன் ஆவானோ 

உனக்கே  தெரியும்!

நண்பனும் பகைவனும் செய்தது நன்மை மட்டும் தான் ?

காண்பன யாவுமே நன்மையே செய்கிறதே! எதை வெறுக்க ? 

 வெறுப்புக்கு வறுமை செய்தாய் இவ்வுலகில்! சிரிப்பதை தவிர என்ன செய்வேன் இப்பொழுதில்!

நான் தவறி செய்யும்  தீமையும், முடிவில் நன்மையாக்கினாய்.

மாயா தேவியே!

அற்பமாய் நான் செய்யும்  தீமையொழிக்க நீயே  என் பகைவனானாய் . 

எனில் நண்பனுக்கு விளக்கம் தேவையோ எமக்கு? 

என்று  அவன்  பகைவன் எனும் நன்மை ஆவானோ. 

அசைவற்றுக் கிடக்கும்  செத்தப்பாம்பை  காற்றாய் மாறி நகர்த்தி பின் அவ்வசைவை  பெருந்தன்மையுடன் உலகிற்கு நன்மையாகியதோடல்லாமல் விளைவின் பயனை பாம்பிற்கே கொடுத்து உயிர்ப்பிக்கும்  அன்பே, கருணையே  ! தாயே ! நீதான் சக்தி  என்று அழைக்கப் படுகிறாயோ!

இதைக் கேட்பதுவும் நானா இல்லை அதுவம் நீயோ!

காலமே!.........  உணர்வற்ற இந்த செத்தப் பாம்பிற்கு, சிறு அசைவின் ஆணவம் பெருத்துவிட்டதை அறிந்து,  அதைப் புகட்ட நீ நடத்தும் நாடகம் எனக்கு அனைத்தும் நீயாகக் காட்டுகிறதே!  

ஆச்சரியம் ஒன்றே நிரந்தரம் உன் படைப்பில்.

அன்பைத் தவிர இவ்வுலகில் ஒன்றுமில்லை என்றுணர்த்தேன். அன்பே திரிந்துள்ளது எங்கும் சக்தியாய். 

By 
பாலாஜி