பண்டைய காலந்தொட்டே குருவிற்கென்று பக்தி கலந்த மற்றும் தீவிரமான நன்றி உணர்வுடன் கூடிய மரியாதை, பணிவு வழங்கப்படுவது ஏன் ?
வேதம் சொல்கிறது,
குருர் ப்ரம்மா குருர் விஷ்ணு
குரு தேவோ மஹேஸ்வரஹ
குரு சாட்சாத் பரப்ரம்மா
தஸ்மை ஸ்ரீ குரவே நமஹா. என்று
ஏன் நம்மை போன்ற ஒரு சாதாரண மனிதருக்கு அவ்வளவு மதிப்பளிக்கப் பட்டுவருகிறது?
அந்த குரு என்பவர் யார்?
- ஒரு சினிமா நடிகனை எடுத்துக்கொள்வோம். நடிகனுக்கே தனக்குள் இருக்கும் திறமை தெரியாத மயக்க நிலையில், அத்திறமையை சுட்டிக்காடியதோடல்லாமல் அவனை உலகப் புகழ் பெரும் அளவிற்கு உயர்த்திய இயக்குனர் தான் குருவா?(ரஜினி, பாலச்சந்தர்)
- சாதாரண குடும்பத்தில் பிறந்த Indian film actress Shriya Saran ஐ எடுத்துக்கொள்வோம். தனது நடன ஆசிரியரின் அழைப்பின் பேரில் ஒரு நடன நிகழ்ச்சியில் பங்கேற்றதால் திரை உலகிற்கு எடுத்துக்காட்டப்பட்டு திரையுலகில் மிகப் பிரபலமான ஷ்ரியாவிற்கு அவரது நடன ஆசிரியரும், இயக்குனரும் குருவோ ?
- Airtel Junior Super Singer ஐ எடுத்துக்கொள்வோம். முதல் நாள் மிகவும் கஷ்டப்பட்டுப் பாடும் ஒரு குழந்தை ஒரு Magic போன்று மூன்றே நாட்களில் அனந்த் அவர்களின் Voice training ற்கு பிறகு பிரமிக்க வைக்கும் அளவிற்கு பாடுகிறதே! அவர் தான் குருவா?
நம் நிலையை நாம் உணராத இந்நிலையைதான் ரிஷிகள் மயக்க நிலை என்கிறார்களோ? அதை தெளியவைக்கும் மேதைகளே குரு ஆகிறார்களோ ?
அப்படியானால் நாமும் தூய உள்ளத்துடன் உடன் உறைபவர்களின், உடன் படிப்பவர்களின், உடன் பணிபுரிபவர்களின் திறமையை ஊக்குவித்து அவர்களின் ஆற்றலை அவர்களுக்கும் உலகிற்கும் காண்பித்தால் நாமும் குரு தானோ?
குரு என்பது ஒரு நபரல்ல போலும், ஒருவரின் consciousness ஐ மேல் நோக்கி இழுக்கும் தன்மை போலும். அது சினமா துறையாக இருக்கலாம் இல்லை பக்தி மார்கமாக இருக்கலாம்.
குரு' என்ற சம்ஸ்கிருத வார்த்தைக்கு 'இருளை விலக்குபவர்' என்று பொருள். குரு நம்மிடமுள்ள அறியாமையாகிய இருளை அகற்றி, ஞானோதய மார்க்கத்திற்கு அழைத்துச் செல்கிறார்.
குரு என்பவர் சாலை வரைபடம் போல. குருவின் வழிகாட்டல் இல்லாமலும் ஒருவர் தான் போய் சேர வேண்டிய இலக்கை அடையலாம். ஆனால் நீண்ட காலங்கள் அதற்காக செலவிட நேரும். குரு பூர்ணிமா அன்று ஆன்மீக சாதகர்கள் தத்தம் குருமார்களுக்கு நன்றி செலுத்தி அவர்கள் அருளைப் பெறுகிறார்கள். குரு பூர்ணிமா அன்று யோக சாதனை அல்லது தியானத்தில் ஈடுபடுபவர்கள் மிகவும் பயன் பெறுகின்றனர் என்று வேதம் கூறுகிறது.