அடியார்கள் அனைவருக்கும் எனது பணிவான வணக்கம் மற்றும் ஸ்ரீ நந்தன ஆண்டின் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று ஆராய்ந்து அவர் இருக்கிறார் என்று உணரும் போது நம் வாழ்கை முடியும் தருணம் வந்திருக்கும். இல்லை ஆராய்ந்து கொண்டே நம் உயிரை விடலாம். நம்முடைய சிறிய அறிவிற்கும், ஊனக்கண்ணுக்கும் புலப்படாத பேரொளியை, நம்பினால் ஒரு 100 கோடி ரூபாய் கிடைக்கும் என்று சொல்ல மாட்டேன். அவற்றுடன் எல்லாம் ஒப்பிட முடியாட சத்தியமும் தர்மமும் மற்றும் அருளும் புலப்படும். ஞானமும் வைராக்யமும் ஏற்ப்படும்.
பாம்பன் சுவாமி சிந்தனைகள்
அரிது, அரிது மானிடராக பிறத்தல் அரிது' என்று புலவர்கள் எல்லாம் சொல்கிறார்கள். இந்த மனிதப்பிறவி எவ்வளவு நல்ல விஷயமோ அதே அளவிற்கு அஞ்சத்தக்க விஷயமும் ஆகும். ஏனெனில், மனிதர்கள் தங்கள் செய்கையால் இந்த பிறவியை மேலாகவோ, கீழாகவோ செய்கிறார்கள். நல்லதைச் செய்தால் இதைவிட நற்பிறவி கிட்டும். தீமையை செய்தால் மீண்டும் விலங்காகப் பிறக்க வேண்டி வரும்.
* ஒரு மனிதனின் தயவைப் பெறுவதற்குக்கூட நீண்டநாள் போராடுகிறீர்கள். அரசாங்கத்தின் தயவு வேண்டுமானால் இன்னும் அதிகநாள் காத்திருக்க வேண்டி உள்ளது. இந்த சாதாரண ஜென்மங்களுக்கே இப்படி காத்திருக்க வேண்டியது என்றால், கடவுளின் அருளைப் பெறுவதற்கு எவ்வளவுநாள் காத்திருக்க வேண்டும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எனவே அவரது கருணையைப் பெற பொறுமையுடன் காத்திருங்கள். மிகப்பெரிய பலன் கிடைக்கும்.
* பாவம் செய்யும்போது எப்படி மறைவாக செய்கிறீர்களோ அதேபோல மிகுந்த புண்ணியமான அன்ன தானத்தையும் எவ்வித தம்பட்டம் இல்லாமல் அமைதியாக செய்ய வேண்டும். அப்படியானால்தான் அந்த தானத்திற்குரிய பலன் வெகுவாக கிடைக்கும்

சத்தியமும் தர்மமும் மற்றும் அருளும், 100 கோடியை விடவும் மேலானது என்று நாம் உணர்ந்தாலே, கடவுள் நம் அருகில் இருக்கிறார் ஆனால் இன்னும் அவரை காணும் அளவுக்கு நாம் பக்குவப்படவில்லை என்று ஊகிக்கலாம். இறைவனை காண்பது சுலபமானது இல்லை. நம்முடன் இருக்கிறார் என்று உணரவே வருடங்கள் பல ஆகிறது. இறைவனைக் காணமுடியவில்லை என்றாலும், இறை ரூபமாக இன்றும் அருளும் மகான்களை நம்பினார்க் கெடுவதில்லை.
மகான்கள் நம்மைப் போன்றே இன்பத்திலும் துன்பத்திலும் உழன்றவர்கள். கலியுகத்தில் நேர்மையாகவும் ஒழுக்கமாகவும் பக்தி செய்வது எவ்வளவு கடினம் நடைமுறையில், என்பதை உணர்ந்தவர்கள். நாம் அல்ப்ப பக்தி செய்தாலும், நம்முடைய உள்நோக்கத்தை உணர்ந்து அருள்பாலிப்பவர்கள். சித்தர்களும் மகான்களும் நவ கிரகங்களுடன் தொடர்புடையவர்கள். நாம் முர்ப்பிறவியிலோ இப்பிறவியிலோ செய்த பாவகர்மங்களை மன்னிக்கும் சக்திபடைத்தவர்கள். நம் உடலைத்தொடாமலேயே அதனுள் பல மாற்றங்களை ஏற்ப்படுத்தும் இறை சக்தி பெற்றவர்கள். மிகவும் எளிமையானவர்கள். ஞானத்தில் உயர்ந்தவர்கள். அப்படிப்பட்ட பேரருள் பெற்ற ஒரு மகான் தான்
பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள். சென்னை, திருவான்மியூர் கலாஷேத்ரா காலனி அருகில் பாம்பன் சுவாமி கோவில் உள்ளது. தனது வாழ்வில் ஒரு முறை அல்ல இருமுறை அல்ல - பலமுறை முருகப் பெருமானை தரிசித்தவர். புராண இதிகாச காலத்தில் அல்ல. நம்முடைய தகப்பனார், பாட்டன் காலத்தில்.
டிசம்பர் 23 - 1927 ஆம் நாள் - ஒரு குதிரை வண்டியின் சக்கரம் ஏறி - அவர் கால் எலும்பு முறிந்து - சென்னையில் உள்ள அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற நேரத்தில் - முருகப் பெருமானே வந்து குணப் படுத்தி இருக்கிறார். இது ஆவணப்படுத்தப் பட்டும் இருக்கிறது. உடன் இருந்த ஆங்கில மருத்துவர் - இந்த அதிசயத்தை "Miracle " என்று எழுதி , அந்த குறிப்பை பாதுகாத்தும் வருகின்றனர். சுவாமிகள் தங்கி இருந்த அறையை - பூஜை அறை போன்று இன்றும் வைத்துள்ளனர்.
பாம்பன் சுவாமியின் சந்நிதான விசேஷம் என்னென்ன.
பாம்பன் சுவாமியின் சந்நிதான விசேஷம் என்னென்ன.
சதி, கோர்ட்டு வழக்கு , பொய் வழக்கு , சம்பந்தமே இல்லாமல் - திடீரென்று ஒருவர் மேல் அபாண்டமாக பழி விழுவது , திட்டமிட்டே பெரிய சதிக்கூட்டம் ஒருவரை ஒழித்துக் கட்ட முயல்வது , தகுதி இருந்தும் முன்னேற்றம் அடையாமல், கிடைக்க வேண்டிய பேர் , புகழ் கிடைக்காமல் - சுற்றி இருப்பவர்களால் தொல்லை அடைவது, போன்ற சந்தர்ப்பங்களில் - ஒருவர் அவசியம் சென்று வணங்க வேண்டியது - சுவாமிகளைத்தான். நம்பியோருக்கு , இன்றும் தனது சுய ரூபத்தில் பலமுறை காட்சி கொடுத்து அருள்கிறார் சுவாமிகள்.
செவ்வாய் தசை நடப்பில் இருப்பவர்கள் அல்லது அடிக்கடி வாகன விபத்து ஏற்ப்படுபவர்கள் பாம்பன் சுவாமியை தரிசனம் செய்யலாம்.
ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய ஸ்ரீ ஷண்முக கவசம் - பாராயணம் செய்பவர்களுக்கு பில்லி, சூனியம், ஏவல், திருஷ்டி அகலும். உள்ளம் உறுதி பெறும். காரிய சித்தி உண்டாகும்.